'நீட்' தேர்வில் சென்னை மாணவிக்கு, 12ம் இடம்; கடந்த ஆண்டை விட தமிழகம் அதிக தேர்ச்சி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
12ம் இடம்!
'நீட்' தேர்வில் சென்னை மாணவிக்கு..
கடந்த ஆண்டை விட தமிழகம் அதிக தேர்ச்சி

சென்னை : 'நீட்' தேர்வில், தேசிய அளவில், பீஹார் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாணவர்களும், அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 12ம் இடம் பெற்றுள்ளார்.

கீர்த்தனா,Chennai,NEET exam,TN,Tamilnadu,medical entrance test,சென்னை,தமிழகம்,தமிழ்நாடு,நீட்


மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்று, 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, அதிகபட்சமாக, 691 மதிப்பெண் எடுத்து, பீஹார் மாணவி, கல்பனா குமாரி, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த, ரோஹன் புரோஹித், டில்லியை சேர்ந்த, ஹிமாஷு ஷர்மா ஆகியோர் இரண்டாம் இடமும், டில்லியை சேர்ந்த, ஆரோஷ் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த, பிரின்ஸ் சவுத்ரி ஆகியோர், 686 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

கீர்த்தனா சாதனை :


தமிழக மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளார். இவர், சென்னை கே.கே.நகரில் உள்ள,

பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவி.

'சி.பி.எஸ்.இ., பாடத்தில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதும், இரண்டாண்டுகளுக்கு மேல், தொடர் பயிற்சி எடுத்ததும், வெற்றிக்கு காரணம்' என கீர்த்தனா கூறினார்.

தமிழக அரசு பள்ளிகளில், மூன்று மாதம் சிறப்பு பயிற்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழக பாட திட்டத்தில், சென்னை கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளி மாணவர் சரண், எந்த பயிற்சியும் இல்லாமல், நீட் தேர்வில், 416 மதிப்பெண் எடுத்துள்ளார்.

மாநில அளவிலான தேர்ச்சியை பொறுத்தவரை, 74 சதவீதத்துடன், ராஜஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, 74; ஹரியானா, 73 சதவீதம் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. ஆந்திரா மாநிலம், 73 சதவீதம் பெற்று, நான்காம் இடம் பெற்றுள்ளது.

மாநிலங்கள் அளவில், அதிக எண்ணிக்கையில், 1.77 லட்சம் மாணவர்கள், நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா மாநிலம், 40 சதவீதத்துடன், 34ம் இடம் பெற்றுள்ளது. தமிழகம், 33ம் இடம் பெற்றுள்ளது.

கர்நாடகா, 64 சதவீதத்துடன், ஒன்பதாம் இடமும்; தெலுங்கானா, 69 சதவீதம் பெற்று, ஆறாம் இடமும், கேரளா, 67 சதவீதத்துடன் ஏழாம் இடமும்; புதுச்சேரி, 40 சதவீதம் பெற்று, 32ம் இடமும் பெற்றுள்ளன.

Advertisement

மற்ற மாநிலங்களில், பல ஆண்டுகளாக, மருத்துவ நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எழுதி வந்தனர். தமிழக மாணவர்கள், இந்த ஆண்டு தான் முழுமையாக நுழைவு தேர்வு எழுத பதிவு செய்தனர்.

முதல் ஆண்டில், பெரிய அளவில் பயிற்சி எடுக்காமல், 40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு முதன்முதலாக, நீட் தேர்வில் பங்கேற்ற, புதுச்சேரி மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்களும், 40 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் நுழைவு தேர்வுக்கு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவ நுழைவு தேர்வுக்கான, தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில், 2017ல், 32 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதை விட, 13 ஆயிரம் அதிகமாக, 45 ஆயிரம் பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
06-ஜூன்-201819:06:55 IST Report Abuse

Rajasekarதமிழக மாணவர்கள் தமிழுடன் சேர்த்து ஹிந்தி கற்கவேண்டும் எதிரியை அவனது ஆயுதத்தால் வீழ்த்தவேண்டும். ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்துபோகும் என்பது அரசியல் சூழ்ச்சி..... மெத்தப்படித்த முன்னேறிய தமிழ் சமுதாயத்திற்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வேண்டும் அதற்க்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை ஹிந்தி பயில்வது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஹிந்தியுடன் தங்கள் தாய்மொழி மற்றும் மாநில மொழியை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள் எனவே ஹிந்தி எதிர்ப்பு என்ற மாயத்திரையை தமிழகம் உடைத்து நாட்டின் தலைமை பொறுப்புக்கு தமிழன் வரவேண்டும். எவ்வளவோ தகுதிகள் இருந்தும் பிரதமர் பதவியை தமிழன் குறிவைக்காதது ஏன்????

Rate this:
skv - Bangalore,இந்தியா
06-ஜூன்-201802:14:57 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் எந்த மெடிகல் காலேஜில் சேர்வார்கள் அவ்ளோ வசதிகள் இருக்க நம்ம சென்னை மற்றும் இதர மெடிக்கல் காலேஜ்கள்ளே . +2 மார்க்ஸ் வாங்குறது வேறு எப்படி இவ்ளோ மார்க்ஸ் அள்ளித்தறாங்க என்றுதான் புரியலீங்க அந்தகாலத்துலே நாங்க்கல்லாம் படிச்சப்போ ஏவாளும் இவ்ளோ 100%மார்க்ஸ் வாங்கவே இல்லீங்களே கணிதம்லெ கூட 98 ஆர் 99 வாங்கினால் அதிசயம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் க்ரெக்க்ஷன் இருந்தது ஒருமுறை மதன் கார்ட்டூன் லே பார்த்தேன் பெரிய கட்டங்கள் போட்டு ஒவ்வொருகட்டம் லேயும் 90 80 / 70 /60/ 50 / 45 / 40 எழுதி தன வீட்டு VAANDAI கொண்டு போடவச்சு மார்க்ஸ் போடுறாப்பல அதப்பானிலே தான் மார்க்ஸ் போற்றங்களோ ஆசிரியர்கள் என்று சந்தேகம் வரது

Rate this:
Sankar - Chennai,இந்தியா
06-ஜூன்-201800:00:24 IST Report Abuse

Sankarகீர்த்தனா க்கு திராவிட கட்சிகள் வாழ்த்து சொல்லலையே?

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X