'டாலர் சிட்டி'க்கு இன்னொரு பேர் இருக்கு... குப்பை நிைறந்த ஊர் என்பதில் உண்மையிருக்கு!

Added : ஜூன் 05, 2018 | |
Advertisement
திருமண முகூர்த்தங்களும், பள்ளி திறப்பும் ஒன்றாக சேர்ந்து விடவே, கடைவீதியில், ஏற்பட்ட கட்டுக் கடங்காத நெரிசலால், வாகனங் கள், எறும்பு போல் ஊர்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மாலை வேளை. சித்ராவும், மித்ராவும், சில பொருட்களை வாங்க, சென்றனர். இடையில், மாநகராட்சி அலுவலகம் குறுக்கிட்ட போது, ''கார்ப்ேரஷனுக்கு ஆட்டம் காட்டிட்டாங்க, பார்த்தீங்களா,'' என்று மித்ரா ஆரம்பித்தாள்.
'டாலர் சிட்டி'க்கு இன்னொரு பேர் இருக்கு... குப்பை நிைறந்த ஊர் என்பதில் உண்மையிருக்கு!

திருமண முகூர்த்தங்களும், பள்ளி திறப்பும் ஒன்றாக சேர்ந்து விடவே, கடைவீதியில், ஏற்பட்ட கட்டுக் கடங்காத நெரிசலால், வாகனங் கள், எறும்பு போல் ஊர்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மாலை வேளை. சித்ராவும், மித்ராவும், சில பொருட்களை வாங்க, சென்றனர். இடையில், மாநகராட்சி அலுவலகம் குறுக்கிட்ட போது, ''கார்ப்ேரஷனுக்கு ஆட்டம் காட்டிட்டாங்க, பார்த்தீங்களா,'' என்று மித்ரா ஆரம்பித்தாள். ''அங்கிருக்கிற ஆபீசர்கள்தான், மக்கள் பிரச்னையை கண்டு கொள்ளாமல், அலட்சியம் காட்டறாங்களாமே,''என்றாள் சித்ரா.''வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல இருப்பாங்கன்னு சொல்றாங்க. கார்ப்ரேஷனில், டவுன் சர்வே ஆபீச மூடிட்டாங்க. மக்கள் கஷ்டப்பட்டும், யாரும் கண்டுக்கல. கடைசியா, கலெக்டர் 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கின பிறகுதான், 'டவுன் சர்வே' ஆபீச திறந்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.''தலையில்லாம, வால் ஆடினா' இப்படித்தானே இருக்கும். நான் சொல்றதையும் கேளு. 'ஏ.டி., - சர்வே' போஸ்ட் காலியாக இருக்குது. ராஜா இல்லாத ராஜ்ஜியமாச்சே. அடுத்த ஸ்டேஜில், இருக்கற ஒவ்வொருத்தரும் மினிஸ்டரா, மாறிட்டாங்க. அதனால தான், ''வேலையே நடக்கற தில்லை; ஆனா, 'மத்த' எல்லா வேலையும் நடக்குது''னு விவசாயிகள், கலெக்டர்கிட்ட நேரடியா புகார் செய்யற அளவுக்கு, சர்வே செக்சனில் நிலைமை மோசமா இருக்கு,'' என்றாள் சித்ரா.அதற்குள், கடைவீதியில் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிக்கவே, இரு வரும் அருகிலிருந்த ஓட்டலுக்குள் நுழைந்து கொண்டனர். காபி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தனர். ''என்னன்னே தெரியலைக்கா? கலெக்டர் ஆபீசுல 'ரியல் எஸ்டேட்' ஓனர் நடமாட்டம் அதிகமாயிருச்சு,'' என்று கலெக்டர் அலுவலக விஷயத்தில், சந்தேகத்தை கிளப்பினாள் மித்ரா.''நீ எதுக்குடி அங்க போனேன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என்று செல்லமாக கோபித்து கொண்டாள் சித்ரா.''அங்கிருக்கிற தபால் ஆபீசுல கூட்டம் இருக்காதுனு, 'ரிஜிஸ்டர்' தபால் அனுப்ப, அங்க போனேன். அப்பத்தான், செழிப்பான தோற்றத்துல, அதிகமாக வந்துட்டு போயிட்டு இருந்ததை பார்த்தேன். ''மூணாவது மாடிக்கு எந்த வழியா போறது''னு என்கிட்டத்தான் கேட்டுட்டு போனாங்க''''எல்.பி.ஏ.,வில் வேல சீக்கிரமா முடிஞ்சிடுது. மகராசனுங்க... இவங்கதான் இப்படி அலைக்கழிக்கறாங்க. எல்லாம் சரியா இருக்குதுனு, எல்.பி.ஏ.,வுல 'சிபாரிசு' பண்ணிட்டாங்க. பாங்க்ல பணமும் கட்டியாச்சு. 'சைட் அப்ரூவல்' கொடுக்காம இழுத்தடிக்கறாங்களே''''இவங்களும், 'எதிர்ப்பாக் கிறாங்க' போல. இந்த, ஏ.டி., - பஞ்சாயத்து ஆபீசுக்கு இதுல சம்பந்தமே இல்ல, ஆனா, நாம இங்க நடந்தா தானே வேலையே நடக்குதுனு,'னு, 'ரியல் எஸ்டேட்காரங்க, ரொம்ப வருத்தமா பேசிட்டு இருந்ததை கேட்டேன்,'' என்று விளக்கினாள் மித்ரா.''ஆமாம், மித்து. எப்படியோ.. எதில 'வருமானம்' வருதுன்னு, ஆபீசர்களுக்கு நல்லா தெரியும். அதன்படி அவங்க செய்யறாங்க. இது ஒண்ணும் புதுசில்லையே!'' சித்ரா முடிக்கவும், காபி வந்தது. இருவரும் காபியை குடிக்க ஆரம்பித்தனர். ''நஞ்சியம்பாளையத்துல குளத்த காணோம்னு புகார் வந்தது தெரியுமா'' என்று, ரூரலுக்கு தாவினாள் சித்ரா.''ம்..ம்.. கேள்விப்பட்டேங்க்கா. ஊரக வளர்ச்சித்துறை ரொம்பவும் மோசமாயிடுச்சு. தாராபுரம் யூனியன், நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்துல, குளமே அமைக்காம, 4.80 லட்சம் ரூபாய செலவு பண்ணியிருக்காங்க. ''விவரம் தெரிந்த மக்கள், குளத்த காணோம்னு கலெக்டர்கிட்ட புகார் கொடுத்துட்டாங்க,'' ''ஏற்கனவே, நம்ம மாவட்டத்துல நுாறு நாள் திட்டத்துல முறைகேடு நடந்திருக்குனு, சென்னையில இருந்து வந்த அதிகாரிங்க ஆய்வு நடத்திட்டு போனாங்க. இப்ப... குளத்த காணோம்னு புகார் வந்திருக்குதுதாமா?ன்னு கேட்கறதுக்கு, 'பி.டி.,' கிட்ட போன் போட்டா, 'அவரு தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார். இருந்தாலும், இந்த விவகாரம் கோட்டை வரைக்கும் போயிடுச்சாம்,'' என்றாள் மித்ரா.''லிங்கேஸ்வரர் ஊரில், தாசில்தாரை திடீர்ன்னு மாத்திட்டாங்களாமா? ஏன்.. என்ன பிரச்னை?'' என்றாள் சித்ரா.''நிர்வாக வசதிக்காகன்னு, ஒரே வார்த்தையில முடிச்சிட்டாங்க. ஆனா, அந்த ஏரியாவில் மண் திருட்டு, வி.ஏ.ஓ.,க்களுடன் உரசல்ன்னு, அவர்மேல பல புகார் இருந்துச்சு. ஜமாபந்தி முடிந்ததும் 'டிரான்ஸ்பர்' செஞ்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இதேபோல, தாராபுரம் தாலுகாவில், அமராவதி ஆற்று மணல் கொள்ளையை தடுக்கறதுக்கு இப்படி ஏதாச்சும் செஞ்சா பரவாயில்லை. தாலுகா ஆபீஸ் டிரைவர் ஒருத்தர், வியாபாரிகள், வி.ஏ.ஓ.,க்கள் கூட்டு சேர்ந்துட்டு, மணல் வியாபாரத்துல கொடி கட்டி பறக்கறாங்க. 'மாஜி' ஒருத்தரோட தலையீடு இருக்கறதால, மணல் வியாபாரத்துக்கு இடைஞ்சல் 'செஞ்சா' மட்டுந்தான் 'டிரான்ஸ்பர்' பண்றாங்க,'' என்றாள் சித்ரா.காபிக்கு பில் கொடுத்து விட்டு, இருவரும் வெளியேறி, ஒரு காம்பளக்ஸ் கடைக்குள் சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், வெயிட்டிங் ஹாலில் அமர்ந்தனர். ''ஆமா.. ஏங்க்கா? இந்த மங்கலம் வி.ஏ.ஓ., ஆபீசில் என்ன பிரச்னை?'' என்றாள் மித்ரா.''அங்கே, 'ரிட்டையர்டு' ஆன வி.ஏ.ஓ., ஒருத்தரும் வேலை பார்க்கறாரு. இங்க மட்டுமல்ல, அந்த வி.ஏ.ஓ., எந்த வில்லேஜ்ல இருந்தாலும், அவரு வந்திடறாராம். பொதுமக்கள் ஏதாச்சும் வேலையா போனா, வி.ஏ.ஓ., அதிகம் பேச மாட்டாராம். அங்க இருக்கற 'ரிட்டையர்டு' வி.ஏ.ஓ., தான் பேசி, வேலைய செஞ்சு கொடுப்பாராம்,''''ஆன்லைனில்' பதிவு செஞ்சாலும், நேரில் வரச்சொல்லி, 'வரி' வசூலிக்கிறாராம். நில அளவை பணியையும், இவர்களே செஞ்சுட்டு, 'மாமூல்' வாங்கிட்டு, 'ஹாயா' இருக்கிறாங்களாம். அந்த ஊரை சேர்ந்த, 78 பேர் கையெழுத்து போட்டு, 'நியாயம் வழங்குங்க'னு கலெக்டர்கிட்ட புகார் செஞ்சிருக்காங்கன்னா, பாத்துக்கோ,'' என்றாள் சித்ரா. ''அக்கா... லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்,'' என்று மித்ரா இழுக்கவும், ''அட... சும்மா 'பில்டப்' கொடுக்காதே. சொல்லுடி'', என்றாள் சித்ரா.''கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள கோவிலில், உள்ளூரை சேர்ந்த இளம்பெண், போன வாரம், சுவாமி தரிசனம் செஞ்சுட்டு, மொபைல் போனில் படம் எடுக்க பார்த்திருக்கறார். அதை பார்த்த கோவில் நிர்வாகி, கோபத்துடன் அவரது மொபைல் போனை பறிச்சு, கன்னத்தில் ஒரு 'பளாரும்' விட்டாராம். நுாத்துக்கணக்கான பக்தர்கள் மத்தியில், இது நடந்ததால், இளம் பெண் அங்கிருந்து சென்று விட்டாராம்,'' ''அடடே.. அமைதியை போதிக்கும் அந்த கோவிலிலா இப்படி?'' அங்கலாய்த்தாள் சித்ரா.''பாதி கதைதானே கேட்டீங்க. மீதியையும் கேளுங்க. இந்த விஷயம் எப்படியோ ஸ்டேஷனுக்கு தெரிஞ்சு, நிர்வாகிக்கு போன் போயிருச்சு. ஆடிப்போன, அவர் ஓடிச்சென்று விவரம் கேட்டு, நடுங்கிப்போய், மன்னிப்பு கேட்டு, ஓட்டம் பிடித்தாராம்,''என்றாள் மித்ரா. ''இதுபோன்று, கோவப்படறவங்க, எதுக்கு கோவில் கட்டி, பூஜை எல்லாம் செய்றாருன்னு, பக்தர்கள் கொதிச்சு எழுந்துட்டாங்க. இதுபோன்ற ஆட்களை அந்த 'பாபா' தான் ரட்சிக்கணும்,'' என்றாள் சித்ரா.அதற்குள் ஒரு கல்யாண கோஷ்டி, பல பொருட்களை 'பர்ச்சேஸ்' செய்து வெளியேறினர். அதைப்பார்த்த சித்ரா, ''ஆங்.. சொல்ல மறந்துட்டேன். உள்ளூரை கவனிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள முக்கிய அதிகாரி வீட்டு கல்யாணம் காவிரி மாநில தலைநகரில், 'செம' கிராண்டா நடந்துதாம். இங்கிருந்து எல்லா வி.ஐ.பி.,க்களும் ஆஜராகி, 'வாழ்த்து' தெரிவிச்சாங்களாம். எல்லோரும் தங்க, ஸ்டார் ஓட்டல், பார்ட்டி, அதுஇதுன்னு, ஏகத்துக்கும் 'மன்னர்' போல கலக்கிட்டாராம்,'' என்றாள் சித்ரா. ''ஓ.. அப்டியா சங்கதி. இங்கே எங்க பார்த்தாலும் குப்பை வழிஞ்சு நாறுது. அதைப்பத்தி கண்டுக்காம, அதிகாரிங்க கல்யாண விஷயத்தில் கவனம் செலுத்தியிருக்காங்க. சரி.. கல்யாணம்தான் முடிஞ்சுதில்ல. இனியாவது, குப்பையை எடுக்க பார்க்கோணுமில்ல,'' என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.''கூல் மித்து.. கூல். 'பிரிக்க முடியாதது எதுவோ? திருப்பூரும் குப்பையும்' என்று வசனத்தை மாத்திதான் பேசணும்போல. பேசாம, ஊர் பேரை, 'குப்பையூர்' என, மாத் தோணும்போல,'' என்றாள் சித்ரா.''அங்க.. குப்பையை பத்தி இந்த கூத்தை கேளுங்க. வேலம்பாளையம் பக்கத்தில, ரோடு முழுக்க குப்பை வண்டியை நிறுத்தி மறியல் செஞ்சாங்க. இதை கேள்விப்பட்ட அங்க போன ஒரு நிருபருக்கு, வாந்தியே வந்திடுச்சாம். அந்த ஏரியா பூரா ஒரே 'கலீஜ்'ன்னு, போறவங்க எல்லாம் ரிடர்ன் ஆயிட்டாங்களாம். இதைப்பார்த்திட்டு ஒரு பாட்டி, 'ஒரு அஞ்சு நிமிஷம் நின்னதுக்கே.. உங்களால முடியலை. நாங்க பல மாசமாக, இந்த 'நாத்தத்தை' சகிச்சுட்டுதான் வாழறோம்,'ன்னு பொரிஞ்சு தள்ளிடுச்சாம்,'' என்று விளக்கினாள் மித்ரா. ''இதுக்கே இப்படிங்கிறே. காங்கயத்தில் நடந்த கதையை கேளு. அங்கே ஒருத்தர் தன் பெண்ணை காணோம்னு புகார் கொடுத்திருக்கிறார். இதை விசாரிக்கிற இரண்டு போலீஸ்காரங்க, அதே விவகாரத்தில் தொடர்புடைய ஒரு லேடி போன் நெம்பருக்கு அடிக்கடி போன் பண்ணி, 'கடலை' போட்டாங்களாம். இதை எப்படியோ தெரிஞ்சுகிட்ட மகளிர் போலீசார், 'ச்சே.. என்ன.. நம்ம போலீசே இப்படி பண்றாங்க'ன்னு நொந்துட்டாங்களாம்,''''நாம சிக்கிடக்கூடாதுன்னு, ரெண்டு போலீஸ்சாரும், 'பிளான்' போட்டு, அதே பெண்ணை வைச்சு, 'என்னை போலீஸ் அடிக்கடி 'டார்ச்சர்' பண்றாங்கன்னு' புகார் கொடுக்க வச்சுட்டாங்க. இப்போ, அந்த விஷயம் 'கப்சிப்'ன்னு ஆயிடுச்சு,'' சித்ரா சொன்னதும், ''வேலியை பயிரை மேயலாமோ?'' என்று தத்துவம் பேசினாள் மித்ரா. ''ஆமா.. என்ன சொன்னாலும் அவங்க மட்டுமே திருந்தவே மாட்டாங்க. அனுப்பர்பாளையம், சிவானந்தா வீதியில் 'சூரிய' கட்சி ஆபீஸ் இருக்குது. ஆரம்பத்துல, கேரம் போர்டு விளையாட்டிட்டு இருந்தாங்க. சமீபகாலமாக, 'சரக்கு' பாட்டில், ஒரு நம்பர் லாட்டரியை பதுக்கி 'ஜோரா' விக்கிறாங்களாம். இதையெல்லாம் தெரிந்தும்கூட, போலீஸ் அதிகாரிங்க, கண்டுக்கறதே இல்லையாம். இதனால், அந்த பகுதி மக்களுக்கு போலீஸ் மேல செம அதிருப்தியாம்,'' என்றாள் சித்ரா.''அந்த போலீஸ்தான் இப்படின்னா.. முக்கிய பிரிவு போலீசில், சிலர் பண்ணற வேலையை கேளுங்க்கா. சிட்டியில் பிரச்னை ஏற்படும் இடத்துக்கு செல்லும் போலீசார், தங்களது பிரிவை மாற்றிச் சொல்லி, 'டாஸ்மாக்'கில், கலெக்ஷன் வாங்குறாங்களாம்,''''அதிகாரி விசாரிச்சா, ''சார்.. அது நாங்க இல்லேன்னு சொல்லி புலம்பறாங்களாம். இதனால, 'உளவு' பார்க்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாயிட்டு வர்றாங்களாம்,'' என்று மித்ரா சொன்னதும், ''சரி... வா. பர்ச்சேஸ் பண்ணிட்டு, கிளம்பலாம்,'' என்ற சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X