பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த உயர் கல்வி நிறுவன பட்டியலில் அழகப்பா பல்கலை

Added : ஜூன் 05, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
காரைக்குடி: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்ட தேசிய தரவரிசை பட்டியலில், சிறந்த 100 பல்கலை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடிக்கும் பல்கலைகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.இதற்கான தேர்வில் காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னிலை வகிக்கிறது. கடந்த ஏப்ரல் 24-ல் டில்லியில் நடந்த நேர்முக கலந்தாய்வில் 'உயர்கல்வியில் சிறந்த

காரைக்குடி: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்ட தேசிய தரவரிசை பட்டியலில், சிறந்த 100 பல்கலை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடிக்கும் பல்கலைகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.இதற்கான தேர்வில் காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னிலை வகிக்கிறது. கடந்த ஏப்ரல் 24-ல் டில்லியில் நடந்த நேர்முக கலந்தாய்வில் 'உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்வதற்கான' வழிமுறைகளை துணைவேந்தர் சுப்பையா தலைமையிலான குழுவினர் யு.ஜி.சி., தேர்வு கமிட்டியிடம் எடுத்துரைத்தனர்.
துணைவேந்தர் கூறிய தாவது: சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தேர்வு செய்வதற்காக யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள ஆய்வக வசதி, உலக தரம் வாய்ந்த நுாலகம், நாக் தர மதிப்பீடு, உயர்தர ஆராய்ச்சி கூடம் மற்றும் கற்பித்தல் கூடம் உள்ளிட்ட 10 வழிமுறைகள் ஏற்கனவே அழகப்பா பல்கலை நிறைவேற்றியுள்ளது.மாணவர் எண்ணிக்கை தற்போது 5780 ஆக உள்ளது. இதை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும், சமூகங்களுக்கான அக்கறை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட ஏழு நிபந்தனைகள் 2023க்குள் அடைய திட்டமிடப்பட்டுள்ளது.வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், சர்வதேச தரவரிசை பட்டியலில், 100 இடங்களுக்குள் வருதல் ஆகிய நிபந்தனைகளை 2033க்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுஉள்ளது.

சிறந்த உயர்கல்வி நிறுவனமாக அழகப்பா பல்கலை தேர்வு செய்யப்பட்டு, ரூ.ஆயிரம் கோடி நிதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
05-ஜூன்-201811:01:32 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy As an alumni of ACCET, I appeal to the authorities concerned that the living conditions in the hostels of the students must be enhanced . The Alumnus of the college have also contributed in the past. The improved living conditions in the hostel will indirectly improve the performance of the students . While the grant of crores of rupees to the University is a welcome development, judicial usage of of it without fritting it away must be ensured.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X