'நீட்' விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நீட்' விவகாரம்:
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை : 'நீட்' தேர்வு விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் அளித்த பதில், திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி, எதிர்க்கட்சிகள், நேற்று வெளிநடப்பு செய்தன.

NEET exam,medical entrance test,நீட்,எதிர்க்கட்சிகள்,வெளிநடப்பு


சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: விழுப்புரம் மாவட்டம், பரவலுார் காலனியைச் சேர்ந்த, கூலித் தொழிலாளியின் மகள் பிரதிபா, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாததால், தற்கொலை செய்துள்ளார். அதே மாவட்டத்தில், மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு, நீட் தேர்வால், அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு, தமிழ் வழியில் தேர்வு எழுதிய பிரதிபாவை இழந்துள்ளோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோமோ தெரியவில்லை. இந்த ஆண்டு நடந்த, நீட் தேர்வில், தென் மாநில மாணவர்கள், மிக குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்று உள்ளனர். வட மாநில மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதல், 50 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா மட்டுமே, இடம் பெற்றுள்ளார். தென் மாநிலங்களில், எட்டு பேர் மட்டுமே வந்துள்ளனர். தமிழகத்தில், டாக்டராக வேண்டும் என்ற கனவோடு தேர்வு எழுதிய, 1.14 லட்சம் பேரில், 45 ஆயிரத்து, 336 பேர் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர்.

நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி, சட்டசபையில், இரு

மசோதாக்களை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம். அதன் நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: தமிழ் வழியில், நீட் தேர்வு எழுதியவர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாளில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா, மத்திய அரசிடம் உள்ளதா, ஜனாதிபதியிடம் உள்ளதா என்பதே தெரியவில்லை. நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, சிறந்த பயிற்சியாளர்கள் வாயிலாக, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: மாணவி பிரதிபா, கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு எழுதினார். அந்த ஆண்டு, நீட் தேர்வில், தேர்ச்சி பெறவில்லை. சித்தா மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், அவர் சேரவில்லை. மீண்டும் இந்த ஆண்டு, நீட் தேர்வு எழுதினார். கடந்த ஆண்டை விட, குறைவான மதிப்பெண் கிடைத்ததால், இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். நீட் எதிர்ப்பு கொள்கையில், அரசு உறுதியாக உள்ளது.

விதிவிலக்கு பெற, சட்டப் போராட்டம் நடத்தினோம். அரசும் பல்வேறு வகையில், அழுத்தம் கொடுத்தது. சட்டசபையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, சட்ட மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம். மத்திய அரசு இசைவு கொடுத்து, அட்டர்னி ஜெனரல், நமக்கு சாதகமான பதிலை, நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், காங்., கட்சியைச் சேர்ந்த, நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.

அனைத்து மாநிலங்களும், நீட் தேர்வை ஏற்றுள்ள நிலையில், தமிழகம், தன்னந்தனியாக போராடியது. ஆனால், வழக்கு காரணமாக, முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்கள், பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு, நீட் தேர்வு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.

Advertisement

இதன் காரணமாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 12 ஆயிரத்து, 766 மாணவர்கள், கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது, தி.மு.க.,வும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு, விலக்கு பெற வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முடிவு வராத நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 412 பயிற்சி மையங்களில், 72 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, 'ஆன்லைன்' பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள், பயிற்சி பெற்றனர். இதுபோல், வேறு எந்த மாநிலத்திலும், பயிற்சி அளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மட்டுமே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு, 1,337 அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சி இருந்த வரை, தமிழகத்தில், நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதில், திருப்தி அளிக்காததால், வெளிநடப்பு செய்கிறோம். இதைத் தொடர்ந்து, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-201802:06:44 IST Report Abuse

Mani . V"எஜமான் காலடி மண்ணெடுத்து, நெத்தியில பொட்டு வச்சு......."

Rate this:
bal - chennai,இந்தியா
06-ஜூன்-201820:24:22 IST Report Abuse

balநாளை முதல் கொஞ்சம் மாறாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்...எங்கு உள்ளிருப்பு என்று சொல்லவில்லை.

Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
06-ஜூன்-201818:25:05 IST Report Abuse

Narasimhanஎல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி. அண்ணன் சுடலை அவர்கள் விரைவில் தனது 100 வது போராட்டம் நடத்த உள்ளார். மக்கள் அனைவரும் அவரவர் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேராதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X