அத்வானியை மீண்டும் களமிறக்க திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
அத்வானியை மீண்டும் களமிறக்க திட்டம்

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை தேர்தலில் போட்டியிட வைக்க, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அத்வானியின் வீட்டிற்கு சென்ற அவர்கள், இது குறித்து, அவருடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

BJP,பா.ஜ.,அத்வானி,மீண்டும்,களமிறக்க,திட்டம்


அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள், லோக்சபா தேர்தலின் போது, கூட்டணியிலிருந்து விலகும் மனப்பான்மையில் உள்ளன. ஏற்கனவே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி விட்டது.

முக்கியத்துவம் :


அதே போல், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, லோக்சபா தேர்தலில்,

தனித்து போட்டியிடும் மனப்பான்மையில் உள்ளது. பீஹார் முதல்வர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில், தனக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை சமாளித்து, மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர், தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

பா.ஜ., மூத்த தலைவர்களை, மோடியும், அமித் ஷாவும் மதிப்பதில்லை என, எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. கூட்டணி கட்சிகளின் விலகல், அதிருப்தி, எதிர்க் கட்சிகளின் விஷம பிரசாரம் போன்றவற்றை சமாளிக்கும் வகையில், கட்சியின் மூத்த தலைவர்களை, தேர்தலில் மீண்டும் களமிறக்க, இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அத்வானி, 90; முரளி மனோகர் ஜோஷி, 84, உள்ளிட்ட மூத்த தலைவர்களை, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வைப்பதன் மூலம், எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தை பொய்யாக்கும் முயற்சியில் மோடி, அமித் ஷா ஈடுபட்டுள்ளனர்.

வயது வரம்பு :


குஜராத் மாநிலத்தில் அத்வானிக்கும், உ.பி.,யில் ஜோஷிக்கும் மிகுந்த செல்வாக்கு

Advertisement

இருப்பதால், கட்சி விதிகளின் படி, தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை தளர்த்தி, அவர்களை மீண்டும், போட்டியிட வைப்பது குறித்து, அவர்கள் இருவரிடமும் பேச்சு நடத்தியுள்ளனர்.

சமீபத்தில், அத்வானியின் வீட்டிற்கு சென்ற மோடி, அமித் ஷா, இது குறித்து, விரிவாக பேசியதாக தகவல் வெளியாகிஉள்ளது. இதன் மூலம், கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதுடன், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறும் முயற்சியில், பா.ஜ., மேலிடம் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. இதன்படி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-201801:13:29 IST Report Abuse

Mani . Vமக்களிடம் பெற்றுள்ள வெறுப்பால் இனி தாங்கள் வெற்றி பெறவே முடியாது என்று அறிந்து திரு. அத்வானி அவர்களை களமிறக்குவது அடுத்த அரசியல் நகர்வே (move). ஆனால் தேர்தலுக்கு பின் திரு. அத்வானி அவர்கள், முதுகில் குத்தப்பட்டு குப்புற தள்ளப்படுவார் - அமைதிப்படை அமாவாசை, மணியன் கதை போன்று.

Rate this:
தேவராயன் - காரணோடை,இந்தியா
06-ஜூன்-201820:48:40 IST Report Abuse

தேவராயன்திரு. அத்வானி மீது மோடியின் பாசம், ஒரே கட்சிக்குள் என்பதாகவாவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அத்வானி அவர்கள் மீது இங்கு கமெண்ட் போடுவோரின் திடீர்ப் பாசம் பலபேருக்கு பொங்குவதைப் பார்த்தால் சிப்பு சிப்பாக வருகிறது. :-). மோடியைத் திட்டுவதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்ற உண்மையைப் புரியவைத்தமைக்கு நன்றி. இதுபோல், அல்ல அல்ல, இதைவிட 2014 தேர்தலில் மோடி, அமித் ஷாவை தரக்குறைவாக விமர்சித்தவர்கள், வாய்பிளக்க வெற்றியை வெறுமையோடு காழ்ப்புணர்ச்சியோடு பார்த்தவர்களின் வெற்றுக்குரலாகத்தான் இந்தக் கமெண்ட்களும் தெரிகின்றன. மோடியின் திட்டங்கள் அமுல்படுத்தியவகையில் சில சிரமங்கள் மக்களுக்கு இருந்திருக்கலாம். அது, 'எந்த தொழிற்சாலையும் ஒரு இன்ச் விவசாய நிலங்களைக்கூட பாதிக்காமல் செயல்படுத்தப்படவேண்டும்' என்பதைப்போல நடைமுறை சாத்தியமில்லாதது. மற்றபடி, அத்வானி மீது திடீர்ப்பாசம் கொண்டு கருத்துக் பதிபவர்களில் பாதியாவது, மோடியின் திட்டங்களால் 'பயனடைந்தவர்கள்' என்று எடுத்துக்கொள்ளலாம். இத்தனை நாட்களாக விற்பனை வரி என்ற ஒன்றையே கட்டி அறியாதவர்களை 'வரி கட்டு, கணக்கு காட்டு' என்றால் கோவம் வராதா? நீட் வந்ததால், எத்தனை கல்லூரி நடத்துபவர்கள் மோடி எதிர்ப்பாளர்கள் ஆனார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் தேர்தல் விடை சொல்லும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் தூற்றி, மக்களை நம்பவைத்து ஓட்டு வேட்டையாடிய எதிர்க்கட்சிகள், பாஜகவின் வெற்றிகளைப் பார்த்து மிரண்டுபோய் இன்று ஒரு பக்கம் திரண்டு 'கொள்கையாவது கத்தரிக்காயாவது? முதலில் நாம் இருவர் மட்டும் களத்தில் இருப்போம். பாஜகவை விரட்டி அடிப்போம். பிறவு நாம் உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம்' என்கிற ரீதியில் (அ)தர்மக் கூட்டணி அமைத்திருப்பதிலேயே தெரிகிறது அவர்களின் மனப்போக்கு. ஓட்டு எண்ணிக்கை அவ்வளவு எளிதாக கூட்டு எண்ணிக்கையில் வருகிறதா, பாஜக வெற்றியடைகிறதா அல்லது (உ.பி.யில் முலாயம் சிங்கும், மாயாவதியும் சேர்ந்து கூட்டணி அமைப்பது மாதிரியான) எந்தக் கொள்கையும், லட்சியமும் இல்லாமல், பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அமையப்போகும் கூட்டணியை மக்கள் புறந்தள்ளுகிறார்களா என்பது அடுத்தவருடம் இந்நேரத்தில் தெரிந்திருக்கும்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
06-ஜூன்-201820:12:27 IST Report Abuse

Kuppuswamykesavan////வல்வில் ஓரி - Koodal,இந்தியா 06-ஜூன்-2018 09:57 யாரு வந்தாலும் ஒங்க என் ஜி ஓ க்களை முன்ன மாதிரி தொறந்து விட முடியாது....இல்லீன்னா நீங்க வைரஸ் மாதிரி எல்லாம் இடமும் பரவிருவீங்க...//// - சூப்பரா சொன்னீங்க, நம் இந்தியாவில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு, வெளிநாட்டு நன்கொடைகளை, தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தும், பல என்ஜிஓக்களால்தானே?.

Rate this:
06-ஜூன்-201821:25:23 IST Report Abuse

 முடியட்டும் விடியட்டும்நண்கொடை அதிகம் வாங்கியது பானிபூரி புகழ் பண்டார கட்சி தான்...

Rate this:
மேலும் 83 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X