பொது செய்தி

தமிழ்நாடு

காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல : ரஜினி

Added : ஜூன் 06, 2018 | கருத்துகள் (97)
Advertisement
ரஜினி, காலா

சென்னை : ரஜினி நடித்த காலா படம் நாளை ரிலீசாக உள்ளது. இப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் காலாவை ரிலீஸ் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என கன்னட மக்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, முதலில் தமிழிலும், பிறகு கன்னடத்திலும் பேசி வேண்டும்கோள் விடுத்துள்ளார். அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. கர்நாடகாவில் காலா படம் ரிலீசாவதற்கு கன்னட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்றகோர்ட் தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

கர்நாடகாவில் மட்டும் காலா வெளியாகவில்லை என்றால் கேள்வி எழும். அது கர்நாடகாவுக்கும், அந்த மாநில மக்களுக்கும் நல்லதல்ல. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை; வர்த்தகசபை தடைவிதிப்பது சரியில்ல. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது என்றார்.



நான் என்ன தப்பு பண்ணேன்? ரஜினி உருக்கம்

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
07-ஜூன்-201804:33:59 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இரண்டு குதிரையில் சவாரி செய்வதன் ஆபத்தை ரஜினி இப்போதாவது புரிந்துகொண்டால் சரி...
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
06-ஜூன்-201817:57:04 IST Report Abuse
Divahar இதற்கு டிக்கட் எவ்வளவு வசூலிப்பார்கள். சரியான கட்டணம் வசூலிக்க வேண்டும் என ரஜினி சொல்வாரா? இதிலும் சரியான சிஸ்டம் இருக்க வேண்டும். மக்கள் பணத்தை சுரண்டக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
06-ஜூன்-201817:46:01 IST Report Abuse
K E MUKUNDARAJAN காலா ரிலீசே ஆனா கூட ஓடாது. இவருடைய சேட்டைகளை ஜனங்க எத்தனை நாள் தான் பார்ப்பாங்க. இன்னிக்கு சிவாஜி படம் போட்டா வீட்டிலே பெரிசுகள் தான் பார்க்கும். நாங்கல்லாம் ஓடிடுவோம். அது மாதிரிதான் ரஜனி, கமல் காலமெல்லாம் ஓவர். மரியாதையா ஒதுங்கிண்டா இருப்பதை காப்பாத்திக்கலாம். இல்லாட்டி சின்ன வயசு ஹீரோயினோட ஆட்டம் போட்டுட்டு வசூல் இல்லாம இருக்க வேண்டியதுதான். மாப்பிள்ளைக்கு வழி விடுங்க சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X