விவசாய கடன் தள்ளுபடி: ராகுல் உறுதி

Added : ஜூன் 06, 2018 | கருத்துகள் (49)
Advertisement
காங்கிரஸ், ராகுல், விவசாயிகள், பா.ஜ., மோடி, ம.பி.,

மண்டசவூர்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


உத்தரவிட்டது யார்?

மத்திய பிரதேச மாநிலம், மண்டசவூர் என்ற இடத்தில், நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடியும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் விவசாயிகளுக்கு எதிரானவர்கள். விவசாயிகளை மோடி அரசு தோல்வியுற செய்துள்ளது. கடந்த 2017 ல் ம.பி.,யில் விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? போராட்டத்தின் போது விவசாயிகள் கொல்லப்படுகின்றனர் .


மவுனம்

தொழிலதிபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளபடி செய்யப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில், 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இளைஞர்கள், விவசாயிகளிடம் மோடி பொய் கூறியுள்ளார். மோடியின் மொபைல் போன் கூட சீனாவில் தயாரானது தான். சீனா சென்ற மோடி டோக்லாம் குறித்து பேசாமல் மவுனமாக தான் இருந்தார்.


துயரம்

ம.பி.,யில் காங்கிரஸ் பதவியேற்றால், அடுத்த 10 நாளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு நீதி கிடைக்க செய்வதுடன் அவர்களை பாதுகாப்போம். பா.ஜ., ஆட்சியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் போது தான் குறைந்த பட்ச ஆதார விலை சிறப்பானதாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-ஜூன்-201808:15:09 IST Report Abuse
Srinivasan Kannaiya கடன் வாங்கிய விவசாயிகள் பட்டியல்கள் பாருங்க ...ஒருவர் கூட உண்மையான விவசாயி ஆக இருக்கமாட்டார் ........விவசாயீ என்ற பெயரில் கடன் வாங்கிய உன்னதமான செல்வந்தர்கள்...
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
06-ஜூன்-201821:15:07 IST Report Abuse
rajan.  கோடிக்கணக்கில மக்கள் பணத்தை ஒருத்தன் விடாம ஸ்வாகா பண்ணிவிட்டு ஸீரோ லாஸ் என கையை ஆட்டின பப்பு உனக்கு விவசாய கடன் ஒரு கூத்து தானே. RBI கடன் தள்ளுபடி மெகா ஊழல்கள் நம் பொருளாதாரத்தை இன்னும் அல்லாட வைக்கும் என எச்சரித்துள்ளது. இதெல்லாம் பத்தி லாலி பாப் பப்புவுக்கு எங்கே புரிய போகுது.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
06-ஜூன்-201820:48:58 IST Report Abuse
Renga Naayagi இதுக்கு பணம் எங்கேருந்து வரும்னு சொன்னா நல்லது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X