பொது செய்தி

தமிழ்நாடு

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 07, 2018 | Added : ஜூன் 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement
South West Monsoon, Heavy Rain, Chennai Weather Center,சென்னை வானிலை, வானிலை மையம், பாலசந்திரன் , தென் மேற்கு பருவ காற்று , கனமழை ,  தென் மேற்கு பருவமழை, சென்னை வானிலை மையம், தமிழ்நாடு வானிலை,Chennai Meteorological Center, Chennai Weather, Weather Center, Balachandran,  Tamil Nadu Weather,

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென் மேற்கு பருவ காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி, தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.


24 மணி நேரத்தில்...

கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 9 செ.மீ., கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் பகுதியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


மிதமான மழை

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


சென்னையில்...

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-ஜூன்-201808:17:37 IST Report Abuse
Srinivasan Kannaiya மழை பொழியும் பொழியாது மாதிரி உள்ளதே...
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
07-ஜூன்-201818:46:54 IST Report Abuse
Ram அப்போ சென்னை வட தமிழகத்தில் இல்லையா? எங்கு உள்ளது என்று வானிலை மையம் தெளிவு படுத்துமா?
Rate this:
Share this comment
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
07-ஜூன்-201817:48:29 IST Report Abuse
Santhosh Gopal நேற்று வேலூரில் இடி மின்னலுடன் நான்கு மணி நேரம் கனமழை பெய்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X