பிரதமர் மோடியை கொல்ல திட்டம்? நக்சல்கள் கடிதத்தில் திடுக் தகவல்| Dinamalar

பிரதமர் மோடியை கொல்ல திட்டம்? நக்சல்கள் கடிதத்தில் திடுக் தகவல்

Updated : ஜூன் 08, 2018 | Added : ஜூன் 08, 2018 | கருத்துகள் (154)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோ நக்சல்கள் திட்டம் தீட்டியிருப்பாக ஒரு கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கைது


மகாராஷ்டிராவில் சமீபத்திய கலவரம் தொடர்பாக போலீசார், பலரை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் கைது செய்யப்பட்டமும்பையை சேர்ந்த சுதிர் தவாலே, டில்லியை சேர்ந்த ரோனா ஜேக்கப் வில்சன், நாக்பூரை சேர்ந்த சுரேந்திரா கேட்லிங், சோமா சென் மற்றும் மகேஷ் ரவுட் ஆகியோர் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்கள். இதில் ரோனா ஜேக்கப் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றபட்டுள்ளது. இந்த கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்வது தொடர்பான விஷயங்கள் அடங்கியுள்ளன.
ராஜிவ் கொலை போல்


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்டது போல், இந்த நிகழ்வை நடத்தவும், மக்களை சந்திக்கும் பேரணி மற்றும் சாலை வழியில் நடக்கும் கான்வாயில் குண்டு வைத்து கொல்லவும், திட்டம் தீட்டியிருப்பதாக எழுதப்பபட்டுள்ளது. இந்துக்கள் ஆதரவு போக்கை கடைபிடிப்போரை முடிவுக்கு கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடியை கொல்வதற்கு எம்-4 ரக துப்பாக்கி வாங்க வேண்டும். அதற்கு 8 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனே போலீசார் இந்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்து பின்னர் முறைப்படி, மத்திய உளவுத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளனர். மேலும் தீவிரமாக விசாரிக்கவும், பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Siddiq - Khor,கத்தார்
14-ஜூன்-201815:37:26 IST Report Abuse
Mohamed Siddiq டிஜிட்டல் இந்தியா லா இன்னுமா கடுதாசி எழுதுறீங்க. இந்த செய்தி நம்புற மாதிரியா இருக்கு. லஷ்கர் தொய்பா முஜிபுல் முஜாஹிடின்க்கு எல்லாம் ரமலான் லீவு விட்டுட்டீங்களா. திடிர்னு நக்சல்க்கு மாறிட்டீங்க..
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
13-ஜூன்-201807:12:10 IST Report Abuse
Ramasami Venkatesan இந்த நெக்ஸாலிட்கள் யார். யு பி , மத்திய பிரதேச முற்கால கொள்ளைக்காரர்கள் தான். திருந்தியவர்கள் சிலர் பூலான் தேவி போல. திருந்தாத மீதி மிச்சம் இவர்கள். இதில் மார்க்சிஸ்ட் வேறு மேற்கு வங்கத்தில். இவர்களால் நாட்டுக்கு நன்மை ஏதும் இல்லையெனில் இவர்களை இல்லாமல் ஆக்கிவிடலாம் அரசு ஒரே க்ஷணத்தில் - ஜனத்தொகையாவது குறையும். இவர்களும் அதையே செய்கிறார்கள் பாமர ஜனங்கள் மீது. அரசும் செய்யலாமே இவர்களை ஒழித்து. இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஜூன்-201817:00:11 IST Report Abuse
Natarajan Ramanathan திரு மோடிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அது பச்சை மற்றும் பாவாடைகளின் தற்கொலைக்கு சமம்....புரிந்ததா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X