பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அந்த்யோதயா ரயில் துவக்கம்
தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை, தாம்பரம் -- திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கொண்ட, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, நேற்று துவங்கப்பட்டது.

தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு நடந்த விழாவில், ரயில்வே இணை அமைச்சர், ராஜென் கோஹைய்ன், புதிய ரயில் சேவையை, கொடியசைத்து துவங்கி வைத்தார். தென்னக ரயில்வே பொது மேலாளர், குல்ஷ்ரேஸ்தா, விழாவிற்கு தலைமை தாங்கினார்.விழாவில், அமைச்சர், ராஜென் கோஹைய்ன் பேசியதாவது: இந்திய ரயில்வே துறை, நான்கு ஆண்டுகளில், சிறப்பாக

வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி உத்தரவின் அடிப்படையில், பல திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. பல, புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுவதோடு, ரயில்களின் வேகம் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள், சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்பேசியதாவது: தமிழக ரயில்வே வரலாற்றில், முக்கிய நாளாக, இன்று திகழ்கிறது. கோவையில், உதய் எக்ஸ்பிரஸ்; தாம்பரத்தில், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில் பயணியரின் நீண்ட நாள் கோரிக்கைகள், இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Advertisement

.தமிழகத்தில், 20 ஆயிரத்து, 64 கோடி ரூபாய் செலவில், 27 ரயில்வே திட்ட பணிகள் நடந்த வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர், நவீன் குலாடி, ஸ்ரீபெரும்பதுார் தொகுதி, எம்.பி., - ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagurusamy Ayyanadar - Thirumangalam, Madurai ,இந்தியா
09-ஜூன்-201821:21:09 IST Report Abuse

Balagurusamy Ayyanadarமதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். இங்குள்ள ரயில் நிலையத்தில் வட மாநிலங்களில் இருந்து கன்னியாகுமாரி வரை செல்லும் எந்த ரயிலும் நின்று செல்வதில்லை. சென்னையில் இருந்து தெற்கு நோக்கி வரும் ஒரு சில ரயில்களும் மைசூருவில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயிலும் சில பாசஞ்சர் ரயில்களும் மட்டும் நின்று செல்லுகிறது. ஒரு நாளைக்கு அறுபது முறைக்கு மேல் பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் திருமங்கலம் ரயில் நிலையத்தை கடந்து சென்று வருகின்றன. ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில்வே கேட் ஒரு நாளைக்கு ரயில்கள் வந்து செல்லும் போது திறந்து மூடுவதற்கு மட்டும் பதினைந்து மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஒவ்வொருமுறை மூடி திறக்கும் போதும் இரு புறமும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சரக்கு லாரிகள், நெரிசலில் சிக்கி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகம், மருத்துவ மனைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை. இது தினமும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசு ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளதாக நன்றி தெரிவித்து விளம்பர போர்டு வைத்து வெகு நாட்கள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு எவ்வித முயற்சியும் நடை பெறுவதாக தெரியவில்லை. இப்பகுதி மக்கள் தினமும் அவதி பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மாநில மத்திய அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரயில்வே மேம்பால வேலையை முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். .

Rate this:
mupaco - Madurai,இந்தியா
09-ஜூன்-201817:41:15 IST Report Abuse

mupacoதாம்பரம் செங்கோட்டை அந்தியோதயா என்னாச்சு?

Rate this:
Kailash Anand - chennai,இந்தியா
09-ஜூன்-201813:06:48 IST Report Abuse

Kailash Anandகண்ணிய குமாரி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாதலம் மேலும் திருநெல்வேலி நெல்லைப்பர் காந்திமதி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள நவ கைலாயம், நவ திருப்பதி, குற்றாலம், மணிமுத்தாறு, பாபநாசம் எல்லாம் மனதில் வைத்து மதுரை டு கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை விரிந்து முடித்தால் எல்லோரும் பயன் பெறலாம் சுற்றுலா துறை வருமானம் ஈட்டலாம். முதலில் திருநெல்வேலியில் இருந்து மணியாச்சி ரயில் நிலையத்திற்கு இரட்டை ரயில் பாதை விரைந்து முடித்தால் விரைவு ரயில்கள் கிராஸிங்கில் நிற்பதை தவிர்க்கலாம் நேரம் விரையம் ஆவதும் தவிர்க்கலாம். நன்றி

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X