விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்ற அகிலேஷ்: பா.ஜ., குற்றச்சாட்டு| Dinamalar

விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்ற அகிலேஷ்: பா.ஜ., குற்றச்சாட்டு

Added : ஜூன் 10, 2018 | கருத்துகள் (37)
Advertisement
Akhilesh Yadav,B.J.P,BJP,Bharatiya Janata Party,அகிலேஷ்,அகிலேஷ் யாதவ்,பா.ஜ

லக்னோ : உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அரசு சார்பில், தனக்கு வழங்கப்பட்ட பங்களாவை காலி செய்யும்போது அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்று சேதப்படுத்தி விட்டதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து, அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் முதல்வருமான, அகிலேஷ் யாதவ், தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை, நேற்று முன்தினம் இரவு காலி செய்து, அதை அரசிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் அகிலேஷ் பங்களாவை காலி செய்த போது அங்கிருந்த விலை உயர்ந்த குளியல் தொட்டி, விலை உயர்ந்த தண்ணீர் குழாய், அழகுக்காக வைக்கப்பட்ட செடிகள், விளக்குகள் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டதாக அம்மாநில பா.ஜ., அமைச்சர் ஸ்வதந்திரா தேவ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பங்களாவின் சமையல்கூடம், சைக்கிள் ஓட்டும் இடம், பூங்கா உள்ளிட்ட இடங்களை அவர் சேதப்படுத்தி விட்டதாக தெரிவித்தார். இச்செயல் சிறுபிள்ளைதனமானது எனவும் விமர்சித்துள்ளார். இந்நிலையில் பா.ஜ.,வின் குற்றச்சாட்டை சமாஜ்வாதி மறுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-201811:12:59 IST Report Abuse
amuthan,Karaikudi நீபாட்டுக்கு மனசாட்சி உறுத்தி வரிசைல நின்னுராதே...
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
11-ஜூன்-201809:58:26 IST Report Abuse
raja பிஜேபி நாடகத்தில் இதுவும் ஒன்று...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
11-ஜூன்-201808:08:59 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கலாம் அய்யா ஜனாதிபதி மாளிகை விட்டுவரச்ச தான் தன்னுடன் கொண்டுபோன ரெண்டு பெட்டிகளையேதான் எடுத்துண்டு போனாரு என்று படிச்சோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X