எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நிறுத்தம்!
17 இன்ஜி., கல்லூரிகளில் சேர்க்கை..
3,182 பி.இ., இடங்களுக்கு அனுமதி மறுப்பு

பல்வேறு பிரச்னைகளால், 17 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உட்பட, 20 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு குறைவாக இருந்த, 134 கல்லுாரிகளில், 3,182 இன்ஜினியரிங் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

17 இன்ஜி., கல்லூரிகளில் சேர்க்கை நிறுத்தம்; 3,182 பி.இ., இடங்களுக்கு அனுமதி மறுப்பு


தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளிலும், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிலும், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பல ஆண்டுகளாக, இன்ஜினியரிங் சேர்க்கையில் பெரும் சறுக்கல் ஏற்படுவதால், பல கல்லுாரிகள், நிர்வாகத்தை நடத்த முடியாமல், சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

மேலும், நிதி பற்றாக்குறையால், சரியான பேராசிரியர்களை நியமிக்க முடியாமலும்,

ஆய்வகங்களை பராமரிக்க முடியாமலும், பல கல்லுாரிகள் திணறுகின்றன. சில கல்லுாரிகளில், அனைத்து வசதிகளும் இருந்தும், மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், அண்ணா பல்கலை வெளியிட்ட தேர்ச்சி பட்டியலில், 10 கல்லுாரிகளில், 10 சதவீதத்திற்கும், குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

மூன்று கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாததும் தெரியவந்தது. இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்கும் குழுவினர், நேரில் ஆய்வு நடத்தினர். இதில், பல கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக பராமரிக்காததும், சில கல்லுாரிகளில், சரியான ஆசிரியர்கள் இல்லாததும் தெரிய வந்தது.

இதையடுத்து, உள்கட்டமைப்பு வசதியை சரிசெய்யாதது ஏன் என, விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை சார்பில், 255 கல்லுாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்ட கல்லுாரிகளில்,

Advertisement

134 கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு பிரச்னையால், 3,182 இன்ஜி., இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த கல்லுாரிகள், 8,752 இடங்களை கேட்ட நிலையில், அவற்றுக்கு, 5,570 இடங்களில் மட்டும், மாணவர்களை சேர்க்க, அண்ணா பல்கலை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு, கல்லுாரிகளில் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், 20 கல்லுாரிகள், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.

இதனால், அந்த கல்லுாரிகள், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. அவற்றில், 17 இன்ஜினியரிங் கல்லுாரிகள், மற்ற மூன்றில், இரண்டு மேலாண்மை கல்லுாரிகள், ஒன்று பி.ஆர்க்., கல்லுாரி. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2017ஐ விட, இந்த ஆண்டு, 19 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

இருப்பினும், பெரும்பாலான மாணவர்கள், முன்னணி கல்லுாரிகளில் மட்டுமே சேர முயற்சிப்பதால், தரவரிசையில் பின்தங்கும் கல்லுாரிகள், படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து, கல்லுாரிகளை மூட திட்டமிடுவதாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-201810:35:41 IST Report Abuse

குறிஞ்சி நில கடவுள்இதெல்லாம் கண் துடைப்பு... ஒரு முறை நான் படித்துக்கொண்டிருக்கும் போது கல்லூரி கட்டட வேலை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு பக்கம் M.E படித்துக்கொண்டே வேலைபார்க்கும் 'அனுபவமிக்க' ஆசிரியர் பாடம் நடத்துவார். கட்டட வேலை செய்த கொத்தனாரிடம் 'கொத்தனார் அண்ணா கொஞ்ச நேரம் வேலைய நிறுத்துங்க பாடம் எடுக்றது புரியலனு' சொன்னோம் உடனே அந்த கொத்தனார் என்னைய broனே கூப்புடுங்க நான் பக்கத்து காலேஜ்லதான் B.E Civil முடிச்சேன். 74 பர்சன்டேஜ்னு சொன்னார்.. டிப்ளமோ ஹோல்டர் அதிகமா சம்பளம் வாங்குறான் மக்களே. எத்தனயோ பேர் B.E படிச்சிட்டு கமெண்ட், meme போடுறதையும் fulltime வேலையா பாக்குறாங்க..உடனே திறம இல்லனு சொல்வீங்க. இப்பெல்லாம் கல்விதுறை அமைச்சருக்கே 8th standard தான் eligibilityனு சொல்றாங்க...

Rate this:
Manian - Chennai,இந்தியா
16-ஜூன்-201803:36:59 IST Report Abuse

Manianஇதை வேறு கோணத்திலும் பாற்கலாம். அந்த நாளில் இருந்த மதிப்பு இந்தநாளில் கல்விக்கு இல்லை. மேலும், புதிய கடடங்கள் எப்போதும் கட்டுவதில்லை. மேலும், லபரடரி கூட இல்லை தற்போது என்பது பரிதாபம். நான் தற்போது சென்ற சில கல்லுரிகளில் நூலகங்கள் பாடாவதி. இதுபோலவே, எதுவோ இல்லம், ஒரு வீட்டில் காலூன்றி ஆரம்பிப்பது என்பது கொடுமை. மோதியின் கல்வி முன்னேற்றங்கள், மாற்றங்கள் சிறிது சிறிதாக வருகிறது. எதிர்ப்பு, லஞ்சம் என்ற வேக தடைகளை உடைக்க நாளாகும் என்பது வருத்தமானதே. "எத்தனயோ பேர் B.E படிச்சிட்டு கமெண்ட், meme போடுறதையும் fulltime வேலையா பாக்குறாங்க..உடனே திறம இல்லனு சொல்வீங்". இவர்கள் மின் வலைதளத்தில் இதை இணைந்த மாறு பாதிப்புக்களை ஈபி காரகவில்லை. ஒரே ஒரு விஷயத்தில் படிப்பவர்களுக்கு அமெரிக்கா, சைனா , ரஷியா போன்ற எந்த நாடிலிம் வேலை இல்லை என்பது தெரியாதா? மாறிவரும் முன்னேற்றங்களால் நாமும் மாறவேண்டும். செயறிக்கை நுண்ணறிவு என்ற பில்வகள் கலவை கல்விக்கு இன்று மிக அதிக தேவை. ஆனால் அவ்வரை கற்பிக்க ஆசிரியர்கள் உலகிலேயே மிக மிட குறைவு. சைனா மட்டும்தான் கோடிக்கணக்கில் சிலவு செய்து அந்த தொழில் முறைகளில் முன்னேறப் பார்க்கிறார்கள். இரெண்டு அல்லது அதற்கு மேற்படட, தோற்கடிப்புள்ள, ஒன்றில் கற்ற ஒய்வு ணுக்கத்தை மாராயத்தில் புகுத்தும் திறமை உள்ளவர்களுக்கே இனமே வேலை கிடைக்கும்.சரியான வழி காட்டுதல் இல்லாமை, எனக்கு தெறியும் என்றார் மமதையால், எப்படியும் வேலை கிடைக்கும் என்று ஆதாரமில்லாத நம்ம்பிக்கையும், 127 கோடி ஜங்களில் 4 % சதவிகிதம் தெறமை இருக்கிறது என்று கனம்பெனிகள் சொன்னாலும் அதை அலட்சியப்படுத்துபவர்களின்,BE, ME , bogus Phd., எதுவும் வேலை தாராது. வரதடச்சினை வாங்க மட்டுமே உபயோகப்படும். இந்த கருத்தில் உள்ள உண்மைகளை மின் வலை தளத்தில் தேடி காணுங்கள். ஏளனம் செய்ய இதை சொல்லவில்லை. ...

Rate this:
Prabhakaranjohn John - chennai,இந்தியா
11-ஜூன்-201807:00:25 IST Report Abuse

Prabhakaranjohn Johnகாலேஜ் பேரை இந்த முறை போட்டுட்டாங்க

Rate this:
Manian - Chennai,இந்தியா
16-ஜூன்-201803:21:15 IST Report Abuse

Manianஎன் கருத்தும் அதுவே, ஊர், மாவடடம் பெரும் இருந்தால் அதை படித்து சிலருக்காவது சிலர் அட்வைஸ் பண்ணுவார்கள். தினசரி நாளேடுகளை படிப்பவர்கள் குறைவே. ...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X