பண மதிப்பிழப்பால் பொருளாதாரத்தில் சரிவு : சிதம்பரம்| Dinamalar

பண மதிப்பிழப்பால் பொருளாதாரத்தில் சரிவு : சிதம்பரம்

Updated : ஜூன் 11, 2018 | Added : ஜூன் 11, 2018 | கருத்துகள் (120)
Advertisement
பெட்ரோல் விலை உயர்வு,பொருளாதாரம் சரிவு, ப சிதம்பரம், சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சமையல் எரிவாயு விலை உயர்வு ,பண மதிப்பிழப்பு, கச்சா எண்ணெய் விலை , டீசல் விலை உயர்வு, 
Petrol price hike, diesel price hike, Chidambaram, former Union Minister P Chidambaram, cooking gas price hike, demonetization, crude oil prices, decline in economy,

புதுடில்லி : டில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வேண்டுமென்றே உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
2014 மே - ஜூன் மாதத்திற்கு பிறகு எவ்வித காரணமும் இன்றி விலை உயர்த்தப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதாரம் நலிந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை கசக்கி பிழியும் நடவடிக்கையே அன்றி வேறு ஒன்றும் இல்லை. இணைச் செயலாளர் பதவி நியமனம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
விலை ஏற்றம் செயற்கை தனமானது என்ற எண்ணம் எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனையில் கூட தெளிவான முடிவு இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் வரிகளே காரணம். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வந்தால் விலை குறையும். பா.ஜ., தான் மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. அப்படி இருக்கையில் அவர்கள் மாநில அரசுகளுக்கு குறை கூறுவது ஏன்? அவர்களிடம் பெரும்பான்மை உள்ளது. அவர்கள் செய்ய வேண்டியது தானே. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. சமீபத்தில் ரெப்போ வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டதற்கும் காரணம் தெரியவில்லை. இதனால் வட்டிவிகிதம் உயரும். இதனால் வாடிக்கையாளர்களும், உற்பத்தியாளர்களும் தான் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
17-ஜூன்-201809:30:19 IST Report Abuse
Devanatha Jagannathan காங்கிரஸ் கட்சியும் உங்க கூட்டணி கட்சிகளும் அடித்த கொள்ளையில் தான் இந்தியாவின் பொருளாதாரம் நலிந்து விட்டது. திஹாருக்கு போக நேரமாச்சு.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
12-ஜூன்-201819:17:39 IST Report Abuse
ravichandran சபாஷ் வெங்கட்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
12-ஜூன்-201805:46:15 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எல்லாம் பேசலாம், எழுதலாம், ஆனா உண்மையான காரணத்தை உன்னால் இன்று வரை கணிக்கவே முடியவில்லையா? எல்லா இடங்களிலும் கடனை வாங்கி தள்ளி விட்டுட்டு எங்களையெல்லாம் படுகுழியில் தள்ள இருந்தீங்களே, இந்த கடனெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக என்று கதை அளக்காதே, இன்று வரை என்ன முன்னேற்றத்தை காட்டியுள்ளீர்கள்? மீண்டும் மீண்டும் மோசடி செய்வோருக்கு கோடி கணக்கில் கடன், சாமானியனுக்கு ரெப்போ விகிதம் அதிகரிப்பு, இதுவா வங்கிகளை முறைப்படுத்தும் திறன்? இதுவா வங்கிகளுக்கு நீ போட்டுள்ள சட்ட திட்டம்? உன்னை போன்ற அடிமுட்டாளுக்கு பொருளாதாரம் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை, மீண்டும் காங்கிரஸே ஆட்சிக்கு வந்தாலும் உன்னை போன்ற தகுதியற்ற மனிதனை பொருளாதாரம் பேச அனுமதிக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X