பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

Added : ஜூன் 11, 2018 | கருத்துகள் (49)
Advertisement
Modi,Rajnath singh,மோடி,ராஜ்நாத்சிங்

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய, மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம் ஆனது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை அதிகாரிகள் பங்கேற்றனர். பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
12-ஜூன்-201813:06:47 IST Report Abuse
Sahayam மாட்டு மூளையும் மாவோயிஸ்டுகளும் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்வார்களாம், அந்த சதியை அப்படியே விவரித்து ஒரு முழு நீள கடிதம் எழுதுவார்களாம், அதில் ஏன் மோடியை கொல்ல வேண்டும் என்று காரணங்களைக் கூறுவார்களாம், எந்த இடங்களில் எல்லாம் இந்த தாக்குதலை நடத்தலாம் என்று ஒரு பட்டியலை அந்தக் கடிதத்திலேயே தருவார்களாம், அதே கடிதத்தில் பாஜகவின் தேர்தல் பொறுப்பு என புகழ்வார்களாம், இந்தத் தாக்குதலை நடத்த ஏராளமான செலவு ஆகும், அப்ப தான் நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடியும் என்பார்களாம், இந்த தாக்குதல் திட்டத்திற்கு தங்கள் மேலிட ஒப்புதலுக்கு காத்திருப்பதை குறிப்பிடுவார்களாம், இந்தத் தாக்குதலை எந்த எந்த தோழர்கள் நிகழ்த்துவார்கள் என்று அவர்களின் பெயர்களை குறிப்பிடுவார்களாம், அந்த கடிதம் எழுதிய தேதி 18/4/17 என்றும் அதில் குறிப்பிடுவார்களாம். அந்தக் கடிதத்தை அஜாக்கிரதையாக ஒரு வீட்டில் காவல்துறை ஒரு ஆண்டுக்கு பின் வரும் போது எடுக்கும் படியாக வைப்பார்களாம். காவல்துறையும் கடிதத்தை சம்மந்தப்பட்ட புலனாய்வு நிறுவனங்களுக்கு/ நீதிமன்றங்களில் கொடுத்து ரகசியமான முறையில் இந்த சதியை முறியடிக்காமல், மாறாக உடன் ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டுவார்களாம். இந்த கடிதப் போக்குவரத்து எல்லாம் எப்ப நடக்குதுனு பாருங்கள், இந்தியாவில் டிஜிட்டல் யுகத்தில், இன்று செய்தியை ஒருவர் மற்றொருவருக்கு ENCRYPTED MESSAGING-ன் பல்வேறு சாத்தியங்களுடன் ஒவ்வொரு பிரஜையும் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் காலகட்டத்தில்.. மாவோயிஸ்டுகள் அத்தனை முட்டாள்களா அல்லது இந்தக் கதையை உடனடியாக நம்புவார்கள் என மோடி அரசு இந்தியாவின் சாமானிய மக்களை எல்லாம் அவரது மாட்டு மூளை அடிமுட்டாள்கள் போல் நினைக்கிறதா??? இந்தக் கடிதங்களை வைத்துக் கொண்டு அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், ஃபட்னாவிஸ் தொடங்கி பலரது புனைவுகளை இன்றைய நாளிதழ்களில் வாசிக்கையில் இந்த கடித விவரனைகள் அரசாங்கம் பாராளுமன்ற தாக்குதல்களில் 2.0 வெர்சனை (அப்சல் குரு வழக்கில்) திட்டமிட தொடங்கி விட்டது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது. மோடி தன் நான்கு ஆண்டு தோல்வியை மறைக்க மீண்டும் மாவோயிஸ்டுகள் / தீவிரவாதிகள் / தேசத்துரோகிகள் ஆயுதத்தை பட்டை தீட்ட தொடங்கிவிட்டார் என்பதை இந்த தேசத்திற்கு உணர்த்துகிறது. பீம் கோரேகாவ்ன் நினைவு நிகழ்ச்சியில் தலித்துகளின் பெரும் அணிதிரட்டலை பார்த்து மிரண்டு போன பாஜகவினர் தலித்துகளையும் வன்முறையாளர்களின் பட்டியலில் இணைக்க முடிவு செய்து விட்டனர். அதாவது இஸ்லாமியர்கள், மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், மனித உரிமை ஆர்வலர்கள் என அருண் ஜெட்லி யாரெல்லாம் தேசதுரோகிகள் என்று ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். இந்த பட்டியல் ஒரு புறம் இருக்கட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளின் மோடியும் யோகியும் செய்த சட்டபூர்வ கொலைகளின் பட்டியலை உலக அரங்கில் வெளியிட நாம் முனைய வேண்டும். மாட்டை வைத்து இவர்கள் செய்த நூற்றுக்கணக்கான கொலைகளில் மொத்த வட இந்திய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மோடி இன்னும் ஒரு கோத்ராவை நிகழ்த்த தயங்கமாட்டார்.... - அ.முத்துகிருஷ்ணன் ஆய்வாளர், எழுத்தாளர்
Rate this:
Share this comment
Thirumal Kumaresan - singapore,இந்தியா
12-ஜூன்-201814:51:42 IST Report Abuse
Thirumal Kumaresanபோன் தகவல்கள் பாதுகாப்பு இல்லாதது என்பது நக்ஸல்களுக்கு தெரிந்தது உமக்கு தெரியவில்லை என்ன செய்வது...
Rate this:
Share this comment
Thirumal Kumaresan - singapore,இந்தியா
12-ஜூன்-201814:53:49 IST Report Abuse
Thirumal Kumaresanநக்சல் எந்த வார்த்தையை இந்தியாவிலிருந்து மாற்றிவிடல் நல்லது.அதற்க்கு நமது ராணுவமும்,அரசுகளும் முயற்ச்சி எடுக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
anbu - Hamilton,நியூ சிலாந்து
12-ஜூன்-201812:05:34 IST Report Abuse
anbu அவசர ஆலோசனை ஆஹா இதே வேலை தூத்துக்குடிக்கு செய்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அனைவரும் இந்திய குடி மகன்கள் தான் என்ற உணர்வு இருக்க வேண்டும் அன்பு, நியூ ஸிலண்ட்
Rate this:
Share this comment
Cancel
அமுதவாணன் - chennai,இந்தியா
12-ஜூன்-201811:53:36 IST Report Abuse
அமுதவாணன் மோடி, பிஜேபி, ரஸ், அமித் ஷாவால் அனைவர் உயிருக்கும் அச்சுறுத்தல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X