அமலாக்க துறையில் சிதம்பரம் நேரில் ஆஜர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமலாக்க துறையில் சிதம்பரம் நேரில் ஆஜர்

Added : ஜூன் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேடு வழக்கில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான, சிதம்பரம், அமலாக்கத் துறை அலுவலகத்தில், இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜரானார்.ஏர்செல் - மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கில், சிதம்பரம் மகன், கார்த்தியிடம், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி முடித்து விட்டது. மேலும், இந்த வழக்கு குறித்து விசாரிக்க, சிதம்பரத்திற்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியது.இதையடுத்து, சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் உருவானதால், கைது செய்வதில் இருந்து தடை விதிக்கக் கோரி, அவர், உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், 'ஜூலை, 10 வரை கைது செய்யக் கூடாது' என, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.இதையடுத்து, விசாரணைக்கு வரும்படி, அமலாக்கத் துறையினர், சிதம்பரத்திற்கு, 'சம்மன்' அனுப்பினர். அதன்படி, ஜூன், 5ம் தேதி, சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. பல மணி நேரம், அவரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதையடுத்து, 'ஜூன், 12ல் ஆஜராக வேண்டும்' என, சிதம்பரத்துக்கு, அமலாக்கத் துறை சார்பில், மீண்டும், 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று காலை, 11:00 மணிக்கு, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில், சிதம்பரம் நேரில் ஆஜரானார். அவரிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டது.நேற்று நடந்த விசாரணையின் போது, சிதம்பரம் அளித்த வாக்குமூலத்தை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு

செய்ததாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-ஜூன்-201807:36:37 IST Report Abuse
ஆரூர் ரங் ஆஜர் என்பது தமிழ்ச்சொல்லல்ல எனவே நேர் நின்றார் அல்லது கால்கடுக்க நின்றார் என்றுபோடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X