பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'வாராக்கடனை குறைத்து
வங்கிகளை வலிமையாக்குவேன்'
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் உறுதி

புதுடில்லி : ''வாராக்கடன் உட்பட, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, வங்கித் துறையை வலிமையாக்குவேன்,'' என, பார்லி., நிலைக்குழுவிடம், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்து உள்ளார்.

Governor,RBI,Reserve Bank,ஆளுநர்,கவர்னர்,ரிசர்வ் வங்கி,உர்ஜித் படேல்


டில்லியில் நேற்று, முன்னாள் மத்திய அமைச்சர், வீரப்ப மொய்லி தலைமையில், நிதி துறைக்கான பார்லி., நிலைக் குழு கூட்டம் நடந்தது.

கூடுதல் அதிகாரம் :


இக்குழு முன், உர்ஜித் படேல், இரண்டாவது முறையாக ஆஜரானார். இது குறித்து, நிலைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: உர்ஜித் படேலிடம், குழு உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, அதிகரித்து வரும் வங்கிகளின் வாராக் கடன் சுமையும், அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு, 'வாராக் கடன் பிரச்னையில் இருந்து வங்கித் துறை மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; மத்திய அரசு அறிமுகப்படுத்திய திவால் சட்டம், நல்ல பலனை தந்து வருகிறது' என, உர்ஜித் படேல் தெரிவித்தார்.

திவால் சட்டம் காரணமாக, வாராக் கடன் வசூல் அதிகரித்துள்ளது; இந்த சட்டத்தில், பல நிறுவனங்களின் வாராக் கடன்கள்

மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளன. எனவே, வாராக் கடன் வளர்ச்சி விகிதம் கட்டுக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுத் துறை வங்கிகளை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஒருசில உறுப்பினர்கள், 'பெருகி வரும் வங்கி மோசடிகளை தடுக்க, போதுமான நடவடிக்கை எடுக்காதது ஏன்...' என, கேள்வி எழுப்பினர்.

மேலும், 'நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர் மூலம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற, 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிக்கு, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு குறைபாடுகள் தான் காரணமா...' எனவும் வினவினர்.

பணத் தட்டுப்பாடு :


சமீபத்தில், நாடு முழுதும், ஏ.டி.எம்., மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என, சில உறுப்பினர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது: ஒரு சில மாநிலங்களில், ஏ.டி.எம்.,மில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது, ரிசர்வ் வங்கி விரைந்து எடுத்த நடவடிக்கையால், சில தினங்களில், இயல்பு நிலை திரும்பியது. ரிசர்வ் வங்கியின், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், அறிமுகமாகி உள்ள கடுமையான விதிமுறைகள் ஆகியவற்றால், வங்கிகள் வலிமை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

வங்கி ஊழியர்களின் துணையுடன் நிரவ் மோடி செய்த மோசடி குறித்து, புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன; இனி, இதுபோன்ற மோசடிகள் நடைபெறாத வகையில், விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கி உள்ளது.

Advertisement

ரத்து :


இந்த மோசடிக்கு அச்சாரமாக இருந்த, 'லெட்டர் ஆப் கிரெடிட்' எனப்படும், கடன் பொறுப்பேற்பு ஆவண நடைமுறையை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. திரிணமுல், காங்., தலைவரும், நிலைக்குழு உறுப்பினருமான, தினேஷ் திரிவேதி, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், திரும்ப வந்த, 'செல்லாத நோட்டுகள்' குறித்து கேட்ட கேள்விக்கு, அவற்றை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு உர்ஜித் படேல் கூறினார்.

இரு வங்கிகள் :

Governor,RBI,Reserve Bank,ஆளுநர்,கவர்னர்,ரிசர்வ் வங்கி,உர்ஜித் படேல்

கடந்த, 2017- - 18ம் நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகியவை தான் லாபம் ஈட்டியுள்ளன. இதர வங்கிகளுக்கு, 87,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கித் துறையின் மொத்த வாராக் கடன், 2017 டிசம்பர் நிலவரப்படி, 8.31 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sulikki - Pudukkottai,இந்தியா
19-ஜூன்-201818:09:51 IST Report Abuse

Sulikkiஎப்படி வரா கடனை குறைப்பார்? வர வேண்டிய கடனை வசூலித்தா அல்லது இது அதுன்னு மக்களிடம் தண்ட கட்டணம் வசூலித்தா? இன்னொரு யோசனை இருக்கு. வரா கடனே இல்லைன்னு அறிவிச்சுட்டா வராகடன் போயிடுமில்ல. இதை யாராவது இவரிடம் சொல்லுங்களேன்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜூன்-201807:07:34 IST Report Abuse

balakrishnanஅவர் கேட்பது அதிக அதிகாரம், நிர்வாகத்தை மேம்படுத்த வெளியில் இருந்து ஆட்களை பிடித்து இழுத்து வர நினைக்கும் அரசு, திறமையானவர்களை ஏன் பயன்படுத்திக்கொள்ள முயல்வதில்லை, என்று புரியவில்லை

Rate this:
skv - Bangalore,இந்தியா
14-ஜூன்-201802:08:46 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கடன் களுக்கு வட்டியேதாராது ஏமாற்றும் நிலை ஒழியனும் ,கடனைத்தள்ளுபடி செய்றானுகளே எவன் ஆட்ச்சிக்கு வந்தாலும் இப்படியேபோனால் வங்கிகள் திவால் தான் ஆவும் , மழை கொட்டினாலும் வெள்ளாமை இல்லீன்னு ஒப்பாரி வைக்குறானுக எல்லோரும் என்பதுதான் உண்மை கடன்வாங்குவானுகள் கணிசமான தங்கம் லே இன்வெஸ்ட் செய்றானுக என்பதுதான் உண்மை

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X