பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சலுகை!
வீடு வாங்குவோருக்கு பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தில்..
அரசுக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பாராட்டு

புதுடில்லி : ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், மானியம் பெறுவதற்கான வீட்டு அளவை, 2,152 சதுர அடியாக, மத்திய அரசு உயர்த்தியதற்கு, கட்டுமான தொழில் நிறுவனங்களும், துறை சார் நிபுணர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அளித்துள்ள சலுகையால், வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரதமர் வீட்டு வசதி திட்டம்,வீடு வாங்குவோருக்கு,பி.எம்.ஏ.ஒய்.,சலுகை,ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்,பாராட்டு


நகர்ப்புறத்தை சேர்ந்த, குறைந்த வருவாய் உள்ளோர் வீடுகள் வாங்க, பி.எம்.ஏ.ஒய்., - யு திட்டத்தில், வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், நடுத்தர வருவாய் பிரிவு - 1ன் கீழ், 120 சதுர மீட்டர் அல்லது, 1,291 சதுர அடி, 'கார்பெட் ஏரியா' உள்ள வீட்டுக்கான வட்டிக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த சலுகை, 160 சதுர மீட்டர் அல்லது, 1,722 சதுர அடி கார்பெட் ஏரியா உள்ள வீடுகள் வரை உயர்த்தப்படுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நடுத்தர வருவாய் பிரிவு - 2ன் கீழ், 150 சதுர மீட்டர் அல்லது, 1,614 சதுர அடி, 'கார்பெட் ஏரியா' உள்ள வீட்டுக்கான வட்டிக்கு, மானியம்

அளிக்கப்பட்டு வந்தது. இந்த சலுகை, 200 சதுர மீட்டர் அல்லது, 2,152 சதுர அடி கார்பெட் ஏரியா உள்ள வீடுகள் வரை உயர்த்தப்படுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கார்பெட் ஏரியா என்பது, வீட்டின் சுவர்கள் தவிர்த்த, நாம் புழங்கக்கூடிய தரைப்பகுதி. மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, மானியம் பெறக்கூடிய வீட்டின் கார்பெட் ஏரியா அளவு, 30 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், பயனாளிகள், 2.35 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும்.

மத்திய அரசின் அறிவிப்பால், வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, கட்டடத் தொழில் நிறுவனங்களும், இத்துறை சார்ந்த நிபுணர்களும் எதிர்பார்க்கின்றனர். 'கிரெடாய்' எனப்படும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர், ஜக்ஸே ஷா, 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், 'அரசின் புதிய அறிவிப்பு, நடுத்தர வருவாய் பிரிவில் வீடுகள் வாங்குவோருக்கு, பெரிய வரப்பிரசாதம். 'இதனால், இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவு நகரங்களில், வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, கூறியுள்ளார்.

'நரெட்கோ' எனப்படும், தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தலைவர், ராஜிவ் தல்வார், ''நாட்டில், நடுத்தர வகுப்பு பிரிவில் வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கையே அதிகம். ''இந்த பிரிவினர் வீடுகள் வாங்குவதை எளிதாக்கும் வகையில், அரசின் புதிய அறிவிப்பு உள்ளது,'' என்றார்.

Advertisement

'அனைவருக்கும் வீடு' திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதி :

டி.எச்.எப்.எல்., நிறுவன தலைமை நிர்வாகி, ஹர்ஷில் மேத்தா கூறியதாவது: பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தில், மானியம் வழங்கப்படும் வீடுகளுக்கான அளவை அதிகரித்து, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவும், வீட்டுக் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை அதிகரித்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவும், 2022க்குள், அனைவருக்கும் வீடு திட்டத்தை நிறைவேற்றுவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளதை காட்டுகிறது. இந்த உத்தரவுகளால், வீடுகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். குல்ஷான் ஹோம்ஸ் நிறுவன இயக்குனர், தீபக் கபூர் கூறுகையில், ''அரசின் உத்தரவால், குறைந்த விலை வீடுகள் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். வீடுகள் கட்டும் பணிகள் பல மடங்கு அதிகரிக்கும்,'' என்றார். எஸ்.ஜி.எஸ்டேட்ஸ் நிறுவன இயக்குனர், கவுரவ் குப்தா, ''சிறு நகரங்களில் உள்ள நடுத்தர வருவாய் பிரிவினர், பெரிய வீடுகள் வாங்கும் வகையில், மத்திய அரசின் உத்தரவு அமைந்து உள்ளது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
14-ஜூன்-201813:48:44 IST Report Abuse

Needhiyin Pakkam Nil நீங்கள் கொடுக்கிற 2.35 லட்சம் ரூபாய், வீட்டு பிளான், கார்ப்பரேஷன் அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, இதை பெறுவதற்காக கொடுக்கப்படும் லஞ்சத்திற்கு கூட போதாது, இதற்கு பெயர் வீடு கட்டும் மானியம் கிடையாது, வீட்டு கட்ட அனுமதி பெறுவதர்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வழங்கப்படும் மானியம் என்று சொல்லுங்கள்...............

Rate this:
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-ஜூன்-201812:39:05 IST Report Abuse

Narayanமக்கள் நலன் சோஷலிச திட்டங்களும், பாப்புலிச திட்டங்களும் செய்தாலும், அதை சைலண்டாக ஊழல், லஞ்சம், விளம்பர செலவு, அரசு இயந்திர அலுவல் செலவு, எதுவும் இல்லாத வகையில் டைரெக்ட்டாக மக்களை சென்று சேரும் வண்ணம் பாஜக அரசு செய்கிறது. ஈரோப்பிலும் இது போன்றே வீட்டுக்கடன் சலுகை மக்களுக்கு நேராக செல்லும் வண்ணம் உள்ளது. திறந்த மனதுடன் இருக்கும் மக்கள் இதை பாராட்டுவார்கள். பல லட்சம் ஓட்டுக்கள் அள்ளும் இது போன்ற திட்டங்களையும் அலட்டல் இல்லாமல் கட்சி-கொள்கை-குடும்ப பெயரில்லாமல் பொதுப்பெயரில் செயல்படுத்துவதற்கே மோடி-பாஜகவை பாராட்டலாம்.

Rate this:
sam - Doha,கத்தார்
14-ஜூன்-201811:16:29 IST Report Abuse

samவரும். எப்ப வரும். வாயால் varum

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X