ரஜினி மீது வழக்கு பதிவு; உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி மீது வழக்கு பதிவு
உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை : நடிகர் ரஜினிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, போலீசுக்கு உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சட்டப்படி உரிய நிவாரணம் தேடிக் கொள்ளும்படி, வழக்கு தொடுத்தவருக்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை ஐகோர்ட்,  நடிகர் ரஜினி, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,  ஓசூர் சிலம்பரசன், தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ரஜினி, ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றம், 
Chennai High Court, Actor Rajini,Thoothukudi Sterlite Plant, Hosur Silambarasan,
Thoothukudi riots, Sterlite plant, Thoothukudi firing, Rajini, Rajinikanth,


துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ௧௩ பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். பலியானோரின் குடும்பத்தினரையும், காயம் அடைந்தோரையும், ரஜினி சந்தித்தார். பின்,

சென்னையில் பேட்டி அளிக்கும்போது, 'துாத்துக்குடியில் நடந்த சம்பவத்துக்கு, சமூக விரோதிகள் காரணம்' என்றார்.

இந்நிலையில், ஓசூரைச் சேர்ந்த, சிலம்பரசன் என்பவர் தாக்கல் செய்த மனு: அமைதியான போராட்டத்தால் தான், நமக்கு பல உரிமைகள் கிடைத்துள்ளன. ரஜினியின் பேச்சு, பொது மக்களின் உரிமைக்கு எதிராக உள்ளது. அமைதியாக போராடு வோரை, அவதுாறு செய்வதாக உள்ளது. ரஜினிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும்படி, ஓசூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை அணுகினேன். புகாரை பெற, அவர் மறுத்து விட்டார்.

இன்ஸ்பெக்டர் மற்றும் கிருஷ்ணகிரி, எஸ்.பி.,க்கு, புகார் அனுப்பினேன். புகார் கிடைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் புகாரை பதிவு செய்யும்படி, ஓசூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மனுவை விசாரித்த, நீதிபதி, பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு: புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய, உத்தரவிட முடியாது. போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.பி., மாஜிஸ்திரேட்டை அணுகாமல், நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதை, ஏற்க முடியாது என, ௨௦௧௬ செப்டம்பரில் உத்தரவிட்டுள்ளேன். எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஏற்கனவே அளித்த உத்தரவின்படி, உரிய முறையில், மனுதாரர் நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-201820:38:37 IST Report Abuse

rameshரஜினி உண்மையைச் சொன்னதுக்கு எப்படியெல்லாம் கிளப்புறானுக ...ரஜினி எதற்கெடுத்தாலும் போராட்டம் கூடாதுனுதான் சொன்னார் . தேவையில்லாமல் வழக்கு தொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தமைக்கு அந்த சிலம்பரசனை 15 நாள் ரிமாண்ட் செய்யனும்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201817:11:59 IST Report Abuse

Endrum Indianஓசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், கிருஷ்ணகிரி எஸ்.பி.,, நீதிபதி எல்லாரும் ரஜினி ரசிகர்களா மக்கள் / ஜன சேவைக்கு இருக்கும் அதிகாரிகளா???

Rate this:
Jayvee - chennai,இந்தியா
14-ஜூன்-201811:42:19 IST Report Abuse

Jayveeஇவன் சிலம்பரசனா அல்லது சிலுவை அரசனா ?

Rate this:
sivakumaran - Coimbatore,இந்தியா
18-ஜூன்-201813:43:03 IST Report Abuse

sivakumaranநாட்ல எவன் எதுத்து பேசுனாலும் அவனை உடனே மதம் மாத்திருங்கடா. காமாலை கண்ணு ....

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X