கெஜ்ரிவால் 3வது நாளாக போராட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கெஜ்ரிவால் 3வது நாளாக போராட்டம்

புதுடில்லி : வீடுகளுக்கு, ரேஷன் பொருட்களை நேரில், 'டெலிவரி' செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி துணை முதல்வர், மணீஷ் சிசோடியா நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். இதற்கிடையே, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது நாளாக, நேற்றும், கவர்னர் மாளிகையில் தங்கி, போராட்டம் நடத்தினார்.

Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்,3வது நாளாக,போராட்டம்


டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும்; நான்கு மாதங்களாக பணிக்கு வராதோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்;

'வீடுகளுக்கு நேரடியாக, ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும்' என, துணை நிலை கவர்னரை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர், சத்யேந்தர் ஜெயின், உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற அமைச்சர்கள், கவர்னர் மாளிகை அலுவலகத்தில் மூன்று நாட்களாக தங்கி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கவர்னர் மாளிகை அலுவலகத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில், துணை முதல்வர், மணீஷ் சிசோடியாவும் நேற்று குதித்தார். இதனால், டில்லி அரசியலில் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக, முதல்வர் கெஜ்ரிவால், கவர்னர் அலுவலகத்தில் இருந்தபடி, 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், 'பிரதமர் அலுவலகம் பச்சைக் கொடி காட்டாமல், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணிக்கு திரும்புவது

Advertisement

சாத்தியமில்லையா என்பதை அறிய விரும்புகிறேன். 'டில்லி அரசு நிறைவேற்றி வரும் நல்ல பணிகளை தடுக்கும் வகையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மத்திய அரசு பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறது' என, கூறியுள்ளார்.

இதற்கிடையே, டில்லி மாநில பா.ஜ., தலைவர்கள், கெஜ்ரிவால் அலுவலக வரவேற்பு அறையில் புகுந்து போராட்டம் நடத்தினர்.கவர்னர் அலுவலகத்தில், டில்லி முதல்வரும், அமைச்சர்களும் தங்கி போராட்டம் நடத்தி வருவது, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவது போல் உள்ளதாக, மாநில, பா.ஜ., விமர்சித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
14-ஜூன்-201816:01:00 IST Report Abuse

muthu Rajendranதேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை ஆளுநர் சந்திக்க அதுவும் மூன்று நாளாகியும் மறுக்கிறார் ஒரு மாநில (நம்ம முதல்வரைத்தான் ) நேரில் சந்திக்க பிரதமர் அனுமதி தரவில்லை. புதுச்சேரியில் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப்போன வேட்பாளர்களை நியமன எம் எல் ஏக்களாக துணை ஆணையர் நியமிக்கிறார். அவர்களை சபாநாயகர் பதவி ஏற்க அனுமதி மறுக்கிறார் ..114 எம் எல் ஏக்கள் இருந்தால் தான் நிலையான ஆட்சி கொடுக்கமுடியும் என்று இருந்தபோதிலும் 104 எம் எல் ஏக்கள் உள்ள கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கிறார்.இது தான் இந்திய ஜனநாயகம்

Rate this:
JOY - Chennai,இந்தியா
14-ஜூன்-201813:45:48 IST Report Abuse

JOYmakalukaaka king keji

Rate this:
14-ஜூன்-201813:20:53 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். ஆனாலும் கெஜ்ரிக்கு வேறு வழி இல்லை. ஏதோ தான் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா ? பிரதமர் பதவிக்கு துடித்தவர் இன்று டம்மி பீஸாகிவிட்டாரே . அடுத்து உலகத்திற்கு ஒரு பிரதமர் என்று தன்னை தானே அறிவித்துக்கொள்வார்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X