ஆப்பிள் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்| Dinamalar

ஆப்பிள் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆப்பிள் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்

வாஷிங்டன் : ஆப்பிள் நிறுவன டிம் குக்கை விட அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்தியர் நிகேஷ் அரோரா.
உத்தரப்பிரதேசம் காஜியாபாதில் 1968ஆம் ஆண்டு பிறந்த நிகேஷ் அரோரா. சாப்ட் பேங்க், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். இணைய குற்றங்களை கண்காணிக்கும் நிறுவனம் பாலோ ஆல்டோ சைபர் செக்யூரிட்டியில் தலைமை பொறுப்பேற்றுள்ள நிக்கேஷ் அரோரா, தொழில்நுட்ப துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர். இவருக்கு ஆண்டு ஊதியம் 12.8 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 857 கோடி ரூபாய்.
2011 ஆண்டு முதல் இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மார்க் மைக்கல்கோலினுக்கு பதிலாக நிகிஷ் அரோரா இந்த பதவிக்கு வந்துள்ளார். 2014ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து நிகேஷ் விலகியபோது அவர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகு சாப்ட் பேங்கில் பதவியேற்ற அவர், அங்கு 483 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கினார். 2016ஆம் ஆண்டுவரை நிகேஷ் அங்கு பணிபுரிந்தார்.
2011 ல் கூகுள் நிறுவன வர்த்தக தலைவராக பொறுப்பேற்றபோது, கூகுளின் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களின் வரிசையில் இடம் பெற்றார். ஆண்டுக்கு 119 மில்லியன் டாலர் ஊதியம் பெறும் டிம் குக்தான் இதுவரை அதிக ஊதியம் பெறுபவராக இருந்தார். தற்போது அரோரா ஆண்டு ஊதியம் 12.8 கோடி அமெரிக்க டாலர் பெற்று, அந்த பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
14-ஜூன்-201816:52:58 IST Report Abuse
kalyanasundaram LETTERHEAD PARTIES TAKE A NOTE OF THIS. THEY MAY BLAME ALONG WITH PAPU THAT SC AND BC ARE NOT TAKEN CARE BY THIS COMPANY. AND RESERVATION PRINCIPLE NOT FOLLOWED. PAPU IDEAL NEWS FOR ACCUSING MODI GOVERNMENT
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201815:16:27 IST Report Abuse
ருத்ரா Proud of you Sir. வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-201804:56:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X