இந்தியாவுக்கு 6 அதிநவீன அமெரிக்க ஹெலிகாப்டர்கள்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
Apache Helicopters,Helicopters,அதிநவீன அமெரிக்க ஹெலிகாப்டர்கள்

வாஷிங்டன் : இந்திய ராணுவத்துக்கு 6 அதிநவீன அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களை 930 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க சட்டத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போயிங் விமான நிறுவனமும், இந்திய கூட்டு நிறுவனமான டாடாவும் இந்தியாவில் இருக்கும் தங்களுடைய தொழிற்சாலைகளில் அப்பாச்சி ஹெலிகாப்டரின் முக்கிய பாகங்களைத் தயாரிக்கும் வேலை தொடங்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா ஒப்புதல் அளித்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவிலிருந்து முழுமையாகத் தயாரிக்கப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரேய்தியன், ஜெனரல் எலக்ட்ரிக், லாக்ஹீட் மார்ட்டின், இன்ஜினீரிங் ஜெயண்ட்ஸ் மற்றும் ஏவியஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்க ராணுவத்தின் முக்கிய ஒப்பந்ததாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கூடுதலாக விமானங்களுக்கு இரவு நேரங்களிலும் பார்க்கும்படியான சென்சார்கள், ஜிபிஎஸ் வழிகாட்டிகள், குண்டு துளைக்காத கவசங்கள், மற்றும் வான் ஏவுகணைகளை வழங்குவது பற்றியும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு ஏஎச்-64இ ஹெலிகாப்டர்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்கவும் மேலும் மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று அமெரிக்க ராணுவ பாதுகாப்பு கூட்டு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
14-ஜூன்-201814:28:22 IST Report Abuse
MaRan நம் நாட்டில் திறமையானவர்களை வைத்து கொள்வதில்லை, எனக்கு இந்தியாவில் பேராசிரியராகும் எல்லா தகுதியும் இருக்கிறது,, அப்ளை பண்ணினாள் ஒரு ரிப்ளைம் இல்லை,, மாறாக என்னைவிட பலமடங்கு குறைவான தகுதி உள்ளவரை எடுக்கிறார்கள் ,,, இப்படியே போனால் ஒரு நாள் இந்தியா கீழ்த்தரமான நாடுகளின் பட்டியலில் வரும்,,
Rate this:
Share this comment
Cancel
sudharman - chennai,இந்தியா
14-ஜூன்-201811:02:37 IST Report Abuse
sudharman 6 அப்பச்சி 6 ஆயிரம் கோடி/ அதாவது தோராயமாக 1 ஒரு கோடி. இது போல ரஷ்யா விடம் வாங்கும் s400 ஒன்று பத்தாயிரம் கோடி. அதுவும் 5 வாங்குகிறோம். சீனா ரஷ்யாவிடம் ஏற்கனவே வாங்கிட்டான். அதுபோக அவனாகவும் சிலவற்றை செய்கிறான். நாம் வாங்குவதோடு சரி. இத்தனை ஆயிரம்கோடி செலவிற்கு நாம் கண்டு பிடித்து விற்கலாம் . எதுவும் மாறவில்லை
Rate this:
Share this comment
Cancel
Selvaraj - லண்டன்,யுனைடெட் கிங்டம்
14-ஜூன்-201802:06:06 IST Report Abuse
Selvaraj செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட நமக்கு இந்த சின்ன ஹெலிகோப்டேரை செய்யும் தொழில் நுட்ப்பம் தெரியாதா? மேக் இன் இந்தியா என்னவானது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X