அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடவுளுக்கு தந்த காசில் எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரசாதம்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement

சட்டசபையில், அறநிலையத் துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு, பிரசாதம் வழங்க, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது, சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், கட்சி பிரமுகர்களுக்கு, 'சூட்கேஸ், மிக்சி, வாஸ்து மீன், டிராவல் பேக்' என, விதவிதமாக பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து துறை செயலர் கள், அவர்களின் அலுவலக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என, 3,000க்கும் மேற்பட்டோருக்கு, காலை உணவு, மதியம் பிரியாணி வழங்கப்படுகிறது.
இதற்கு, துறை சார்பில், நிதி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், ஏதேனும் கணக்கு எழுதி, பணம் எடுக்கின்றனர். நேற்று, அறநிலையத் துறை மானிய கோரிக்கை நடந்தது. அதையொட்டி, அறநிலையத் துறை சார்பில், 4,000 பிரசாத பைகள் தயார் செய்யப்பட்டன. இந்தப் பையில், பழநி பஞ்சாமிர்தம், மதுரை முறுக்கு, ராமேஸ்வரம் அதிரசம், சென்னை, அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோவில் லட்டு. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி புகைப்படம், குங்குமம், மஞ்சள், விபூதி, கந்த சஷ்டி கவசம் புத்தகம், அபிராமி அந்தாதி புத்தகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
பை தயார் செய்யும் பணியில், நான்கு மாவட்ட, அறநிலையத் துறை ஊழியர்கள், இரண்டு நாட்களாக ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்க, 2,000 ரூபாய் மதிப்புள்ள, 450 'ஹாட் பாக்ஸ்' வாங்கப்பட்டுள்ளன. இதற்காக, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.இத்தொகை, கோவில் நிதியிலிருந்து செலவிப்பட்டதாக கூறப்படுகிறது. இது, பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, பக்தர்கள் கூறுகையில், 'சட்டசபை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு துறை சார்பிலும், பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டும் என, எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.
'ஆனால், பரிசுப் பொருட்களுக்கு, பொய் கணக்கெழுதி, ஒவ்வொரு துறை சார்பிலும், லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்' என்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
14-ஜூன்-201817:02:27 IST Report Abuse
muthu Rajendran பொதுவாக 50 வருடங்களுக்கு முன்வரை ஒரு துறையின் மானிய கோரிக்கை புத்தகம் பழைய சினிமா பாட்டு அளவிற்குத்தான் இருக்கும் குறிப்பாக அந்த துறையின் கொள்கை அதுகுறித்த நடவடிக்கைகள் மட்டுமே இருக்கும்.அதன் பிறகு கிட்டத்தட்ட துறையின் கட்டமைப்பு உள்பட வரலாறு அணைத்து செயல்பாடுகள் என பக்கங்கள் கூடியது. அதன் பிறகு மானிய கோரிக்கை புத்தகம் தவிர மக்கள் சாசனம் என்ற துறை குறித்த அணைத்து விபர குறிப்பு அது போக performance ரிப்போர்ட் என்று கொடுக்க ஆரம்பித்தார்கள். மானியக்கோரிக்கை அன்று விவாதம் நடைபெறும் நிறைவேறும் அவ்வளவு தான் முடிந்ததும் துறை அதிகாரிகளை தனது அறைக்கு அழைத்து அமைச்சர் நன்றி தெரிவிப்பார் தற்போதெல்லாம் இது துறை கொண்டாடும் திருவிழா போல ஆகிவிட்டது.ஒவ்வொரு துறையும் தங்களது மானிய கோரிக்கை வரும்போது எம் எல் ஏக்கள் அமைச்சர் அலுவலகம் கட்சி அலுவலகம் பத்திரிக்கை நிருபர்கள் என்று அனைவருக்கும் பரிசுப்பொருள்கள் மிக விலை உயர்ந்த ஹோடேல்களிருந்து உணவு பொட்டலங்கள் என்று வழங்க படுகிறது. இதற்கு எந்த கணக்கிலிருந்து செலவிடப்படுகிறது என்ற தகவல் ஏதும் இல்லை.ஓரளவாக இருந்த இந்த விருந்தோம்பல் அளவுக்கு மீறி கடந்த பத்தாண்டுகளில் மிக பெரிய அளவில் வளர்ந்து விட்டது.இதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தைத்தான் இந்த செய்தி சொல்கிறது அதை அரசும் கவனிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R.CHELLAPPA - Vadodara,இந்தியா
14-ஜூன்-201812:31:34 IST Report Abuse
R.CHELLAPPA ஏழை எளியவர்க்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பிக்கறார்கள். பாவம் அவர்களும் ஏழைகள் தானே?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூன்-201808:57:17 IST Report Abuse
Bhaskaran சிவன் சொத்து குலநாசம் அம்மன் சொத்து அனைத்தும் நாசம் என்று முதுமொழி உள்ளது நினைவில் வைக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X