பதிவு செய்த நாள் :
வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி
சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

பிலாய் : ''வளர்ச்சி மட்டுமே, வன்முறைக்கு சரியான பதிலாக இருக்க முடியும் என நம்புகிறேன். வளர்ச்சிப் பணிகளின் மூலம் உண்டாகும் நம்பிக்கையால், வன்முறை முடிவுக்கு வரும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,வளர்ச்சியே, வன்முறைக்கு,சரியான பதிலடி


சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் சில மாவட்டங்களில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மத்திய - மாநில அரசுகளின், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல், அவர்கள் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் இதுபோன்ற செயல்பாடுகளால், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பொது அமைதியும் சீர்குலைகிறது. எனவே, நக்சல்களை ஒடுக்கி, சரணடைய செய்து, அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில், மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

அரசுடனான பேச்சுக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து, நாச வேலைகளில் ஈடுபடும் நக்சல்களை ஒடுக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.

திட்டங்கள் :


நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மக்கள் மத்தியில் நம்பிக்கையை

வளர்க்கும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்து வதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், வன்முறைக்கு முடிவு கட்ட முடியும்.

இந்த மாநிலத்தில் கிடைக்கும் கனிம வளங்களில் இருந்து பெறும் வருவாய் மூலம், மாநில மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாநிலத்தில், மருத்துவமனைகள், பள்ளிகள், கழிப்பறைகள் மற்றும் சாலைகள் அமைக்க, கூடுதலாக, 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வருமானத்தை உயர்த்த, மத்திய, பா.ஜ., அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சாதாரண செருப்பு அணிந்தவர் கூட, விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவு. அதற்காகவே, சிறு நகரங்களை இணைக்கும் வகையில், 'உடான்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு முன், ராய்ப்பூர் விமான நிலையம், ஒரு நாளில், ஆறு விமானங்களை மட்டுமே கையாளும் திறன் படைத்ததாக இருந்தது. தற்போது, 50 விமானங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு முன், மத்தியில் ஆட்சி செய்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சத்தீஸ்கரை முழுவதும் புறக்கணித்தது.

இங்கு, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என, முதல்வர் ரமண் சிங், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தார். ஆனால், காங்., தலைமையிலான அரசு, அதை புறக்கணித்தது.

வாஜ்பாயின் கனவு :


மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்ததும், பிலாயில், ஐ.ஐ.டி., அமைக்கப்பட்டது. காடுகள்,

Advertisement

பழங்குடியினத்தவர் என்பது மட்டுமே, சத்தீஸ்கரின் அடையாளமாக இருந்த நிலையில், நாட்டின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி அமைந்துள்ள மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ளது. நயா ராய்ப்பூரால் இந்த பெருமை கிடைத்துள்ளது.

மாநில முதல்வர் ரமண் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றியுள்ளார். சத்தீஸ்கர், ம.பி., மாநிலத்தின் ஒரு அங்கமாக இருந்தபோது, இந்த இடத்திற்கு, நான், இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன்.

அடையாளம் :


அப்போதெல்லாம், இவ்வளவு வளர்ச்சி அடையாத இந்த பகுதி, தற்போது, மாநிலத்தின் அடையாளமாக காட்சிஅளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின், கட்ச் முதல் கோல்கட்டா வரை மற்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான, நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்க, ரயில்வே தண்ட வாளங்களுக்கு தேவையான இரும்பு, பிலாய் இரும்பு தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநிலத்தில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த, பிரதமர் மோடிக்கு, மாநில முதல்வர் ரமண் சிங் நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து, அரசின் சாதனைகளை விளக்கும் பேரணி துவக்கி வைக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
15-ஜூன்-201813:01:00 IST Report Abuse

ganapati sbஇளைஞர்கள் முன்னேற்றத்திற்கு எல்லா காலத்திற்கும் உதவும் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய கருத்துக்கள்

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூன்-201810:22:18 IST Report Abuse

Visu Iyerபுரியவில்லை வளர்ச்சி என்றால்... ?

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
15-ஜூன்-201810:06:11 IST Report Abuse

நக்கீரன்வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி என்பது சரியானதுதான். வளர்ச்சி என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். ஆனால், மக்களே இல்லாமல் வளர்ச்சி வந்து என்ன செய்வது? வெளிநாட்டுக்காரன் தனக்கு தேவைப்படாத, தங்களுடைய மக்களுக்கும், சுற்று சூழ்நிலைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை கொண்டு வந்து நம்மிடம் திணிக்கிறான். அதை நாம் வளர்ச்சி என்ற பெயரில் அனுமதித்து நம் நாட்டை சுடுகாடாக்கிக்கொண்டு இருக்கிறோம். வெறும் கட்டிடங்களும், இயந்திரங்களும், ராக்கெட்டுகளும் மட்டும் வளர்ச்சியல்ல. மக்கள் அனைவருக்கும் சுத்தமான காற்று, தூய குடிநீர், சுகாதாரமான மருத்துவம், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை தர முடிந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி. மோடிஜி புரிந்து கொள்வார் என்று நம்புவோம்.

Rate this:
Siddharadiyan sivasubramaniyam - virudhunagar,இந்தியா
15-ஜூன்-201811:44:27 IST Report Abuse

Siddharadiyan sivasubramaniyamசரியாக சொன்னீர்கள் .இலவச கல்வியும், மருத்துவமும் கொடுத்தார்களேயானால் இந்தியாவில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் .இதை எவன் தருகிறேன் என்று சொல்கிறானோ அவனுக்கு ஓட்டு போடுங்கள் மக்களே. ...

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X