குழந்தை தொழிலாளர் கண்டறிந்தால் மூன்றாண்டு சிறை, வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் கண்டறிந்தால் மூன்றாண்டு சிறை, வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் விழிப்புணர்வு

Added : ஜூன் 14, 2018
Advertisement

பொள்ளாச்சி: 'குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்,' என குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.கோவை மாவட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு இயக்கத்தின் கீழ், பொள்ளாச்சியில் உள்ள நிறுவனங்கள், கடைகளில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பல்வேறு சூழ்நிலைகளால் பள்ளி சென்று படிக்க வேண்டிய சிறுவர்களை, வருவாய்க்காக பணியில் ஈடுபடுத்தும் செயல் நடக்கிறது. குடும்ப வருமானத்துக்காக பெற்றோரே இதற்கு உடந்தையாக இருக்கின்றனர்.படிப்பை கைவிட்டு, பணியில் ஈடுபடும்சிறுவர்களின் எதிர்காலம் சிதைந்து விடுகிறது. இது சட்டப்படி குற்றமாகும். இதை தடுக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டரின் நேரடி கண்காணிப்பின் கீழ் தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் பணியாற்று அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் ஆய்வு நடத்தி கண்காணித்தனர்.குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை மீட்கவும், பணியில் ஈடுபடுத்தியவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.பொள்ளாச்சியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட அலுவலர்கள் நேற்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'நாட்டில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை அபாயகரமான பணிகளில்ஈடுபடுத்தக் கூடாது.மீறினால், 20,000 முதல், 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X