ஒரு கிராம் தங்கத்தில் 'பிபா' உலகக் கோப்பை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கிராம் தங்கத்தில் 'பிபா' உலகக் கோப்பை!

Added : ஜூன் 14, 2018
Advertisement

கோவை: 'பிபா' உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக, குனியமுத்துாரை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரு கிராம் தங்கத்தில், பிபா உலகக் கோப்பையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கால்பந்து ரசிகர்களின் துாக்கத்தை தொலைக்க வைக்கும், 'பிபா' உலகப் கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது; ஜூலை, 15ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில், ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே, மொராக்கோ, ஈரான், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து உள்ளிட்ட, 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை ரஷ்யா நடத்துவதால், நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று களம் இறங்கியுள்ளது.இக்கால்பந்து தொடரை வரவேற்கும் விதமாகவும், வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திலும், குனியமுத்துாரை சேர்ந்த நகைத் தொழிலாளி ராஜா ஒரு கிராம் தங்கத்தில் உலக கோப்பையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.ராஜா கூறுகையில், ''கடந்த, 20 ஆண்டுகளாக நகை தொழிலாளியாக உள்ளேன். உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி பங்கேற்காததால் கால்பந்து ரசிகர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போட்டியை வரவேற்கும் விதமாக ஒரு கிராம் தங்கத்தில் உலகக் கோப்பையை வடிவமைத்துள்ளேன். ''இதுமட்டுமின்றி, தேர்தல் சமயத்தில் ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட, 'ஸ்கேலை' வடிவமைத்து, அதன்மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X