அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எந்த அணியில்
எந்த எம்.எல்.ஏ.?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எந்த அணிக்கு செல்வது என, முடிவெடுக்க முடியாத நிலையை, உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.க்கள்,எந்த அணி


அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், சசிகலாவுக்கு ஆதரவாக, முதல்வரை மாற்றக்கோரி, கவர்னரிடம் மனு அளித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வெளியானது. இரண்டு நீதிபதிகளில் ஒருவர், 'சபாநாயகர் தீர்ப்பு செல்லும்' என்றும், மற்றொருவர், 'செல்லாது' என்றும் தீர்ப்பளித்தனர். இதனால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள், 2017 செப்., முதல், பதவி இன்றி உள்ளனர். அ.தி.மு.க.,விலிருந்து அவர்கள் நீக்கப்படாததால், கட்சியில் உறுப்பினர்களாக தொடர்கின்றனர். ஆனால், தினகரனுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் சிலரிடம், முதல்வர் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. அவர்கள், 'தீர்ப்பு வந்த பின் முடிவெடுக்கலாம்' என, காத்திருந்தனர். ஆனால், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், முதல்வர் பக்கம் வர நினைத்தோருக்கு, முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

திரிசங்கு நிலையில்...


அதேபோல், தினகரன் அணியில் நீடிக்க விரும்பியோருக்கும், இது, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எந்த அணியில் இருப்பது என்ற குழப்பம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அ.தி.மு.க., உறுப்பினர்களாகவும், தினகரன் ஆதரவாளர்களாகவும், திரிசங்கு நிலையில், 18 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
15-ஜூன்-201819:30:09 IST Report Abuse

எல்.கே.மதிஅரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணைப்படி பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக மட்டுமேயன்றி, நம்பிக்கையை குலைப்பதற்காக அல்ல. மக்களின் நம்பிக்கையே இவர்களுக்குத் தேவை இல்லையே? கால்பாட்டில் டாஸ்மாக் சாராயம், ரேஷன் கடையில் கொள்ளை அடித்த அரிசியில், பிரயாணி போட்டேஊரை வளைத்துவிடும் கொள்ளைக் கூட்டமாயிற்றே?

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
15-ஜூன்-201815:49:45 IST Report Abuse

தங்கை ராஜாபஜகாவின் வரலாற்று தவறுகளில் ஒன்று எடப்பாடி ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வழிநடத்திக் கொண்டிருப்பது என்பதை விரைவில் உணருவார்கள்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201816:23:44 IST Report Abuse

Kasimani Baskaranசுடலைக்கு முட்டுக்கொடுக்க முடியாது... ...

Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
15-ஜூன்-201817:24:14 IST Report Abuse

மூல பத்திரம் திமுக வை தவிர யார்வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ...

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201814:16:58 IST Report Abuse

Kuppuswamykesavan/////balakrishnan - coimbatore,இந்தியா 15-ஜூன்-2018 09:31 ஆளும் தற்போதைய உறுப்பினர்களில் சிலரும் இன்றும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஆகையால் எதுவும் நடக்கலாம், ஆட்சியை தக்க வைக்க எடப்பாடியை நீக்கிவிட்டு செங்கோட்டையனை கொண்டுவரலாம், எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது, பணம், பதவி தான் முக்கியம், ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி ஒருவர் தான் பிரச்சனை என்றால் மற்ற உறுப்பினர்கள் எட்டப்படியை தூக்கி எறியவும் தயங்கப்போவதில்லை.///// - என்னாச்சு உங்களுக்கு, கட்டுமர விசுவாசியே?. என்ன பகல் கனவு கண்டீர்கள், இப்ப?. ஏன் இப்படி, சிறு கதை எழுதறீங்க?.

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
15-ஜூன்-201816:06:05 IST Report Abuse

madhavan rajanஎல்லாத்தையும் நினைச்சுப் பார்க்க வேண்டியதுதான். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ராகுல் குமாரசாமியை ஆதரிப்பார் என்று தேர்தல் முடிவு வருவதற்கு முன் யாராவது எதிர்பார்த்திருப்போமா? அரசியல்வியாதிகளுக்கு விவஸ்தை கிடையாது என்பது ஊரறிந்த உண்மை. ...

Rate this:
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
15-ஜூன்-201817:08:43 IST Report Abuse

Sadagopan Varadhachariகர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் கூறியது JD (S ) ல் உள்ள " S " செக்யுலர் அல்ல அது சங் பரிவார் என்று கூறிவிட்டு ,தேர்தலுக்கு பிறகு சங் பரிவார் ஆடசி அமைக்க ஆதரவு அளித்துள்ளார். ...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X