காஷ்மீர் பற்றிய ஐ.நா., அறிக்கை; மத்திய அரசு ஏற்க மறுப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
காஷ்மீர் பற்றிய ஐ.நா., அறிக்கை;
மத்திய அரசு ஏற்க மறுப்பு

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில், மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், மீறப்படுவதாகவும், ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்துள்ள, மத்திய அரசு, 'இது, தவறான துாண்டுதலால் உருவாக்கப்பட்ட அறிக்கை' என, கருத்து தெரிவித்து உள்ளது.

Kashmir,U.N,United Nations,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை,காஷ்மீர்


ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

வீரர்கள் பதிலடி:


இந்த மாநிலத்தில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், மக்களிடையே பிரிவினையை துாண்டிவிட்டு, கலவரத்தை

ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல், ஆங்காங்கே தாக்குதல் நடத்தி, பொது அமைதியை சீர் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம், நம் நாட்டு எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நம் வீரர்களும், தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்துள்ள, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன், காஷ்மீரில், மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், மீறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. காஷ்மீர் நிலவரம் குறித்த, ஐ.நா., அறிக்கைக்கு, மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காஷ்மீர் நிலவரம் குறித்து, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை தவறானது. உண்மை நிலவரத்திற்கும், அறிக்கையில் இடம் பெற்றுள்ள சம்பவங்களுக்கும் சிறிதும் தொடர்பு இல்லை. இது, ஏதோ

Advertisement

துாண்டுதலின் அடிப்படையில், தவறான தகவல்கள் அடங்கிய அறிக்கையாகவே உள்ளது.

உரிமை மீறல் :


காஷ்மீர் முழுவதும், எப்போதும், இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்து வருகிறது. அதன் சில பகுதிகளை, பாக்., ஆக்கிரமித்து அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், இந்தியா, ஒருபோதும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டது கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201817:28:44 IST Report Abuse

rajavery good ,well done ,un inteligents had show the shameless india ,verygood,

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201815:16:05 IST Report Abuse

Kasimani Baskaranஇதே போல இஸ்ரேல் மீது புகார் கூறி அரபுநாடுகள் ஒரு அறிக்கையை 2017 இல் தாக்கல் செய்தன... அந்த விவாதத்தில் பொழுது இஸ்ரேல் பிரதிநிதி கேட்ட கேள்விக்கு அரபு நாடுகள் தூக்கில் தொங்கி இருக்கவேண்டும்... பல லட்சம் யூதர்களை அரபு நாடுகள் கொன்று விட்டன / அல்லது விரட்டி அடித்து விட்டன... ஆனால் இஸ்ரேல் இன்னும் அரேபியர்களை அவர்களது நாட்டில் குடி மக்களாக நன்றாகவே நடத்துகிறார்கள்...

Rate this:
Being Justice - chennai ,இந்தியா
18-ஜூன்-201810:27:00 IST Report Abuse

Being Justice உனக்கு விபரம் தெரியவில்லையா அல்லது நடிக்கிறாயா என்று தெரியவில்லை. யூதர்களை அதிகம் கொன்றது ஜெர்மனி. ஐநா சபையில் அதிகம் கண்டிக்கப்பட்டு கண்டன நடவடிக்கை எடுக்கப்பட்டு அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் பதினெட்டு முறை தண்டனையில் இருந்து தப்பித்த நாடு இஸ்ரேல். உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட எல்லையுடனா இஸ்ரேல் இன்று இருக்கிறது? பாலஸ்தீனத்தை தன்னுடைய பேராபத்து விளைவிக்கும் ஆயுதங்களினால் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்து கொண்டுள்ளது. காலம் பதில் சொல்லும். உன் கூற்று படி இரு நாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகம் இழந்தது பாலஸ்தீனமே. அநீதி இழைக்கப்பட்டதும் பாலஸ்தீனத்திற்கே....

Rate this:
Being Justice - chennai ,இந்தியா
15-ஜூன்-201810:58:05 IST Report Abuse

Being Justice ஒரு பக்கம் போராடினால் போராளிகள் மற்றோர் இடத்தில் போராடினால் தீவிரவாதிகள். விபரம் தெரியாத குறை மதியினர் குற்றம் கூறுவார்கள். சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சட்டம் மற்றும் நீதி ஒரு சாராருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாகவும் இருந்தால் போராட்டம் வெடிக்கத்தான் செய்யும். சிலருக்கு அவர்கள் போராளியாகவும் வேறு சிலருக்கு அவர்கள் தீவிரவாதியாகவும் தெரிவார்கள்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X