அனுமதியின்றி மரங்கள் வெட்டி சாய்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மரங்கள் வெட்டி சாய்ப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement

அவிநாசி: கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவிநாசி அருகே கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வேம்பு உட்பட மரங்கள் உள்ளன.இதில், ஐந்து வேம்பு மரங்கள் திடீரென்று வெட்டப்பட்டன. இதையறிந்த அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், நேற்று மாலை, பள்ளிக்கு சென்று, 'எந்த அனுமதியதின் பேரில் மரம் வெட்டப்பட்டது' என, ஆசிரியர்களிடம், கேள்வி எழுப்பினர். ஆசிரியர்களால் உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. 'தங்களுக்கு மரம் வெட்டப்பட்டது குறித்து எதுவும் தெரியாது' என கூறினர். தலைமையாசிரியரும், பள்ளியில் இல்லை. விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கும் போது, தலைமையாசிரியை அணுகி, மரம் வெட்டப்பட்டது குறித்து, விளக்கம் கேட்பதென முடிவெடுத்து, பொதுமக்கள் கிளம்பினர். இதனால், பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட, வருவாய் துறையின் அனுமதியை பெற வேண்டிய நிலையில், மரம் வெட்டப்பட்டது குறித்து, வருவாய் துறையினருக்கும் எதுவும் தெரியவில்லை. வருவாய் துறையினர் கூறுகையில், 'பள்ளி வளாகத்தில் மரம் வெட்டியது குறித்து எவ்வித அனுமதியும் நாங்கள் அளிக்கவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.மரங்கள் வளர்ப்பதை பள்ளி மாணவர்களிடம் ஊக்கப்படுத்தும் பள்ளியில், இதுபோல் மரங்கள் வெட்டப்படுவது வேதனையை தருகிறது.அதிலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடமாடும் போது, மரங்களை வெட்டி கடத்தியவர்களையும், அதற்கு துணையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X