பொது செய்தி

தமிழ்நாடு

ஆடலூரில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement

தாண்டிக்குடி, தாண்டிக்குடி அருகே உள்ளஆடலுாரில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.ஆடலுார் ஊராட்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நீராதாரங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் ஊராட்சி நிர்வாகம் உரியமுறையில் சப்ளை செய்யவில்லை. பொதுமக்கள்தனியாரிடம் பேரல் ஒன்றுக்கு ரூ.50 விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.மலை போல்அள்ளப்படாத குப்பை, துார்வாராத சாக்கடையால் சுகாதாரக்கேடு, தொற்று நோய் பரவும்அபாயம் உள்ளது. மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்களில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நேற்று காலை 7:00 மணிக்கு காலி குடங்களுடன் பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.ஒட்டன்சத்திரம் டி,எஸ்.பி., சந்திரன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் , கிராம நிர்வாக அலுவலர் அடிப்படை வசதிகளைசில வாரங்களில் சரி செய்து தருவதாக உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X