விழுப்புரம் ரயில்வே பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் ரயில்வே பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

Added : ஜூன் 15, 2018
Advertisement

சென்னை:''சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கட்டப்படும், விழுப்புரம் ரயில்வே மேம்பாலம், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,'' என, முதல்வர், பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
தி.மு.க., - பொன்முடி: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஜனவரியில் திறக்கப்படும் என, கலெக்டர் அறிவித்தார்.தற்போது அவரே, 'என்னை மீறிய சக்தி உள்ளதால், திறக்க இயலாது' என, கூறி உள்ளார்.இப்பணி நிறைவு பெறாததால், பொது மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, பாலப் பணியை முடித்து, விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருக்கோவிலுார் - சென்னை புற வழிச்சாலையில், இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.
முதல்வர், பழனிசாமி: விழுப்புரம் மக்களின், நீண்ட நாள் கோரிக்கை அடிப்படையில், ரயில்வே மேம்பாலம் அமைக்க, 31.60 கோடி ரூபாய்க்கு, 2010ல், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. 2014ல், பணி துவக்கப்பட்டது. பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, சென்னை மார்க்கத்தில், அணுகு சாலை அமைக்கும் பணி, தடுப்பு சுவர் மற்றும் சேவை சாலை அமைக்கும் பணி முடிந்துள்ளது.விழுப்புரம் மார்க்கத்தில், அணுகு சாலை மற்றும் சேவை சாலை அமைக்க, 42 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணி நடந்து வருகிறது.
இப்பகுதியில், விழுப்புரம் நகராட்சியின் பாதாள சாக்கடை குறுக்கிடுகிறது. இதை மாற்றி அமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.இப்பணி முடிந்ததும், விழுப்புரம் பகுதி அணுகு சாலை முடிக்கப்பட்டு, விரைவில், பாலம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X