5வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: டில்லி கவர்னர் இல்லத்தில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.5வது நாள்டில்லியில், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும். நான்கு மாதங்களாக பணிக்கு வராதோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க
டில்லி கவர்னர் அனில் பைஜால், ஆம் ஆத்மி, கெஜ்ரிவால்,  கெஜ்ரிவால் உண்ணாவிரத போராட்டம்,  துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கெஜ்ரிவால் மனைவி சுனிதா , Arvind Kejriwal,Aam Aadmi Party,  Kejriwal,Delhi Governor Anil Bhajal, AAP, Kejriwal, Kejriwal fasting, Deputy chief minister Manish Sisodia, Kejriwal wife Sunita,

புதுடில்லி: டில்லி கவர்னர் இல்லத்தில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.


5வது நாள்

டில்லியில், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும். நான்கு மாதங்களாக பணிக்கு வராதோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 'வீடுகளுக்கு நேரடியாக, ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும்' என, வலியுறுத்தி, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மாநில சுகாதாரத் துறை அமைச்சர், சத்யேந்தர் ஜெயின், உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற அமைச்சர்கள், கவர்னர் மாளிகை அலுவலகத்தில் மூன்று நாட்களாக தங்கி, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தர்ணா போராட்டம், 5வது நாளாக நீடித்து வருகிறது.


திட்டம்

இந்நிலையில், கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற உள்ளதாக தெரிகிறது. இதற்காக ஆம்புலன்ஸ்கள் கவர்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மக்களுக்காக

இது தொடர்பாக கெஜ்ரிவால், டுவிட்டரில் கூறியதாவது: அமைச்சர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திட்டமிடுவது ஏன்? போராட்டம் துவங்கி 4 நாட்கள் தான் ஆகிறது. அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். டில்லி மக்களுக்காக போராடி வருவதாக கூறியுள்ளார்.

இதனிடையே, கவர்னர் அலுவலகத்தில் உள்ள தனது கணவர் கெஜ்ரிவாலை சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக, அவரது மனைவி சுனிதா குற்றம்சாட்டியுள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூன்-201808:04:35 IST Report Abuse
Srinivasan Kannaiya சத்தியம் வெற்றி கொள்ள நாட்கள் ஆகும்... காந்திஜியின் சத்திய சோதனையை படியுங்கள்...
Rate this:
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஜூன்-201820:54:42 IST Report Abuse
balakrishnan பி.ஜெ.பி க்கு உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு கட்சியாக இருந்தால், ஏன் இப்படி ஒரு ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், ஆளுநர் குறைந்த பட்சம் முதல்வரை அழைத்து பேசலாம், ஏதாவது குறைகள் இருந்தால் எடுத்து சொல்லலாம், ஒரு அரசாங்க ஏஜென்ட், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி தலைவரை, அவமானப்படுத்துகிறார், இதெல்லாம் ஜனநாயகத்தில் வன்மையாக தண்டிக்கப்படவேண்டும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அடுத்தடுத்து வரும் ஆட்சியில், ஆளுநர் பதவியை தூக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும்
Rate this:
Cancel
jagadeesan - Hosur,இந்தியா
15-ஜூன்-201820:17:29 IST Report Abuse
jagadeesan கேஜரிவாளின் உண்மையான முகத்தை தோலுரித்து காட்டியுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X