பதிவு செய்த நாள் :
பெருமிதம்
'டிஜிட்டல் இந்தியா' திட்டம் புரோக்கர்களுக்கு எதிரான போர்
வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடில்லி : ''மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டம், இடைத் தரகர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்; இதனால், கறுப்புப்பணம், கறுப்பு சந்தை ஒழியும்; சிறு நகரங்களில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

India,Modi,Narendra modi,இந்தியா,நரேந்திர மோடி,மோடி,டிஜிட்டல் இந்தியா,புரோக்கர்களுக்கு,எதிரான போர்


மத்திய அரசின், டிஜிட்டல் இந்தியா திட்டங்களில் பலன் பெற்ற, பல்வேறு பயனாளிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, அவர் கூறியதாவது: இடைத் தரகர்களின் குறுக்கீடு இல்லாமல், மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காத நிலை இருந்தது. தலையணைக்கு அடியில், ஏராளமான பணத்தை மறைத்து வைக்கும் வழக்கம், நம் நாட்டில் இருந்தது. இத்தகைய சூழலில், மின்னணுவியல் முறையில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, பலர் கேலி செய்தனர்.

பதிலடி :


ஆனால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் பயன் அடைந்தோர், தங்கள் அனுபவங்களை நேரடியாக பகிர்ந்துள்ளனர். இதன் மூலம், இத்திட்டத்தை கேலி செய்தோருக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம், இடைத் தரகர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்;

இதனால், கறுப்புப்பணம், கறுப்பு சந்தை ஒழியும்; சிறு நகரங்களில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாகும்.

டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றங்கள் வந்துள்ளதால், உணவு பொருட்கள் பெற, இடைத் தரகர்களின் உதவி, இனி தேவைஇல்லை. ஏழைகள், தங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை, தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக, டிஜிட்டல் முறையில் பெற முடியும். கிராமங்களில் ஏழை விவசாயிகள், தங்களுக்கு உரிய பணத்தை, டிஜிட்டல் முறையில் பெறத் துவங்கி உள்ளனர். இதையடுத்து, இந்த திட்டம் பற்றி, புதிய வதந்திகளை, இடைத் தரகர்கள் பரப்பி வருகின்றனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால், இடைத் தரகர்களுக்கு, கமிஷன் கிடைக்காது. எனவே, நல்ல திட்டத்துக்கு எதிராக, அவர்கள் வதந்திகளை பரப்புகின்றனர்.

லாபம் :


கடந்த, 2017 - 18 நிதியாண்டில், மத்திய அரசின், 'பீம்' எனப்படும், டிஜிட்டல் பணப்பரிமாற்ற, 'மொபைல் ஆப்'பை, பயன்படுத்தி, 10 ஆயிரத்து, 983 கோடி ரூபாய் மதிப்பில், 91.5 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற்றோர், 'பீம்' ஆப்பை பயன்படுத்தும்படி, வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அழுத்தம் தர வேண்டும்.

பிற கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துவதால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தான் லாபம் சென்றடையும். எனவே, இந்தியாவில் உருவான, 'ரூபே' கார்டை, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும்.

நாட்டுப் பற்று பற்றி பேசும் அனைவரும், எல்லைக்கு சென்று போரிடுவது சாத்தியமல்ல; மாறாக, நாம், ரூபே கார்டுகளை

Advertisement

பயன்படுத்தியும், நாட்டுக்கு சேவை செய்யலாம். தற்போது, நாடு முழுவதும், 50 கோடி ரூபே கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு:


டிஜிட்டல் இந்தியா திட்ட பயனாளிகளுடன் நேற்று பேசிய, பிரதமர் மோடி, தமிழகம், மஹாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தோரிடம், அவர்களின் தாய் மொழியில் பேசியது, பெரியளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுடன் பேச பிரதமர் மோடி திட்டம் :

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன் பெற்றோருடன், வீடியோ கான்பரன்ஸ் முறையில், நேரடியாக, பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். நாடு முழுவதும், இலவச சமையல், 'காஸ்' இணைப்பு பெற்ற, நான்கு கோடி பெண்களுடன், வீடியோ கான்பரன்ஸ் முறையில், சமீபத்தில், மோடி பேசினார். அதைத் தொடர்ந்து, சுகாதார திட்டம், 'ஸ்டார்ட் அப்' திட்டம் ஆகியவற்றின் பயனாளிகளுடன் மோடி பேசினார். நேற்று, டிஜிட்டல் இந்தியா திட்ட பயனாளிகளுடன் பேசி, பல்வேறு கருத்துகளை, மோடி பகிர்ந்தார். இந்நிலையில், வரும், 20ல், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் முறையில், விவசாய துறை சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக, மோடி பேசவுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
18-ஜூன்-201813:45:29 IST Report Abuse

balஇந்தியாவில் 60 - 70 சதவீத பேர் தரகர்கள்தான்....ஏன் அரசியவாழ்வதிகூட தரகர்தான்....மொத்த இந்தியாவும் அழிய வழிவகுக்கிறது...இந்த டிஜிட்டல் மற்றும் ஒன்லைன் வர்த்தகம். இதெல்லாம் மேற்கத்திய சமூகத்துக்கு ஒத்து வரும்..ஏனென்றால் அங்கு மக்கள் தொகை குறைவு...இங்குள்ளவர்கள் ஏதாவது செய்து பொழப்பு நடத்த வேண்டியிருக்கு.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-201821:19:10 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மக்களை ஏமாற்றும் தந்திரம். நமக்கு தெரிந்த புரோக்கர்கள் கண்ணுக்கு தெரிந்தார்கள். ரத்தமும் சதையுமாக. அன்று தியேட்டர் வாசலில் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் வைத்து லேட்டாக வருபவனுக்கு "ரிசர்வ்" பண்ணிய சீட்டை விற்றால் அது "கள்ள டிக்கெட்".. இன்று பதிவுக்கட்டணம் (செர்வீ சார்ஜ், கன்வீனியன்ஸ் சார்ஜ் என்று 30 ரூபாய். கிரெடிட் கார்டில் தேய்த்தால் இன்னொரு கூடுதல் பணம் பாக்கெட்டில் இருந்து மாயம். இதுக்கு பேரு "டிஜிட்டல் இந்தியா". இப்போ கள்ளன் கண்ணுக்கு தெரியலை. அப்புறம்... கிரெடிட் கார்டில் வாங்கினால் நீங்கள் வட்டி கட்டுவதை விடுங்கள், ஆனால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வியாபாரி கிரெடிட் கார்டு கம்பெனிக்கு 3-5% வரை கட்டணம் கட்டணும். அது எங்கேருந்து வரும். நீங்கள் வாங்கும் பொருளில் இருந்து தான் வியாபாரி எடுக்கிறான். அப்போ அந்த 5% யாருக்கு போகுதுன்னு சொல்றார் இவர்? புரோக்கர் அந்த டிஜிட்டல் கம்பெனிகளுக்கு இவர் தான் இப்போ புரோக்கர் வேலை செய்கிறார் என்கிறேன். மறுத்து கூற யார் இருக்கிறீர்கள். டிஜிட்டல் புரோக்கர்.

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
17-ஜூன்-201810:07:23 IST Report Abuse

Ramamoorthy Pமனிதக் குலம் தோன்றிய காலத்தில் இருந்தே எல்லா சர்விசுகளுக்கும் சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறது பத்து ரூபாய்க்கு வாங்கிய பொருளை அதே விலைக்கு விற்க எந்த வணிக கொள்ளையன் முன் வருவான்.? எவனும் தர்மத்துக்கு வியாபாரம் செய்யமாட்டான். இது டிஜிட்டல் வியாபாரத்துக்கும் பொருந்தும். இது தவறு என்றால் அரசு சர்விஸ் டாக்ஸ் போடும்போது எங்கே போயிருந்திர்கள்?...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-201821:07:36 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்யுக்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ராணுவ விற்பனை செய்ததற்கு கமிஷன் போகிறது. அந்த நாடு தான் அதை சொல்கிறது. அண்ணன் இங்கே முழு பீரங்கியை சப்பாத்திக்குள் மறைக்கிறார். ரபேல் விமானம் யார் மூலம் வாங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ரபேல் நிறுவனம் நடுவில் என்ன செய்கிறது? ரபேல் விமான ஒப்பந்தத்தில் பராமரிப்பு ஏன் இந்திய விமான படையிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டது? அதுக்கு ப்ரோக்கர் யார்? "டிஜிட்டல் இந்தியாவில்" புரோக்கர்கள் இல்லையாம். வெளிநாட்டுக்கு, கார்ப்பரேட் ஒப்பந்தங்களில் இந்திய வங்கிகளை பிணைக்கைதிகளாக மாட்டி விட்டு செல்பி எடுத்து வரும் இவர் யாராம்?

Rate this:
Manian - Chennai,இந்தியா
18-ஜூன்-201803:43:18 IST Report Abuse

Manianஎன்னமோ மதுரையிலே இருக்குற நீ கூடவே இருந்து கமிஷன் வாங்குனமாதிரி கூவாதே தம்பி. லஞ்சம் வாங்குற பயலுக மஞ்சள் துண்டார் மாதிரி கம்முனு ஹவாலா மூலம் வாங்கி துபாயில் வீடு வாங்குவானுக. எப்படி எனக்கு தெறியும். ஒரு ஹவாலா காரர் சத்தியம் செய்து வாங்கி கொண்டு ஒரு முஸ்லீம் நண்பருக்கு சொன்னது. அதை அவர் எங்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டது....

Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X