பதிவு செய்த நாள் :
ராஜிவ் கொலையாளிகளை
விடுவிக்க ஜனாதிபதி மறுப்பு

புதுடில்லி : முன்னாள் பிரதமர், ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைகளில் உள்ள, ஏழு கைதிகளை விடுவிக்கும்படி, தமிழக அரசு விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

ராஜிவ்,கொலையாளி,விடுவிக்க,ஜனாதிபதி,ராம்நாத் கோவிந்த்,மறுப்பு


முன்னாள் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, ராஜிவ், 1991ல், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்,

நளினி ஆகிய ஏழு பேருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் ஏழு பேரையும், 20 ஆண்டுக்கு மேல் சிறையில் இருந்ததால், விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு அறிவித்தது. அந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 'சி.பி.ஐ.,யால், மத்திய சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் முன், மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும்' என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது' என்றது, அதைத் தொடர்ந்து, ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க அனுமதி கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தை பரிசீலித்த ஜனாதிபதி, தமிழக அரசின் கோரிக்கையை நேற்று நிராகரித்தார்.

Advertisementஇது குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்த முடிவு, தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும், ராஜிவ் கொலையாளிகள் விடுதலை அடைவது சாத்தியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Iyer - Austin,இந்தியா
18-ஜூன்-201805:50:32 IST Report Abuse

Hari Iyerபுலனாய்வு அதிகாரி கார்த்திக் புலனாய்வு துறையில் நீண்ட அனுபவம் பெற்ற போலீஸ் அதிகாரி இல்லை.அவர் ஒரு IAS அதிகாரி.பெரும்பாலும் காங்கிரஸ் செல்வாக்கில் அவர் வந்திருக்க வேண்டும்.திரு மோகன்ராஜ் இது பற்றி அறிந்தவர்.ரகோத்தமன் விசாரணைக்காக அமெரிக்கா சென்ற்றார் அங்கெ ஒரு பெண்ணிடம் விசாரணை செய்திருக்க வென்ட்டும்.அனால் அவர் விசாரிக்க வில்லை.அந்த விசாரணையை தடை படக் .காரணம் தெரியவில்லை.மூன்றாம் முறை பயன் படுத்தி விசாரணை நடை பெற்றது.அது சரியா என்பது தெரியவில்லை.பாட்டரி வாங்கின கட்டைப்பற்றித்தரும் விவரமும் சந்தேகத்திற்கு உரியது.துப்பு துலக்குவதில் நிபுணரான ஒருவர் தலைமை ஏற்க வில்லை.அதன் விளைவுதான் பேரவாளன்,நளினி சிறையில் வாடுகின்றார்கள்.அதை வைத்து போராட்ட ஆம் நடத்த அரசியல் காட்சிகள் பத்திரிகைகள் ஊடகங்கள் தயார் இல்லை.காங்கிரசும் BJPum ivarkal vitayatthil ore முடிவை கொண்டுள்ளார்கள்.

Rate this:
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
17-ஜூன்-201806:41:35 IST Report Abuse

சுப்பையா, கருப்பட்டி வியாபாரம்.சென்னை புத்தக கண்காட்சியில் தமிழினி எழுதிய "ஒரு கூர்வாளின் நிழலிலிருந்து எனும் புத்தகம் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றதாம், என்ன தெரிகின்றது? தமிழக மக்கள் உண்மையினை அறிந்துகொள்ள துடியாய் துடித்திருக்கின்றார்கள், மகா ஆர்வமாய் இருந்திருக்கின்றார்கள். பிரிவினை வாதிகளுக்கு செருப்படி கொடுக்க ஆதாரம் தேடுகின்றார்கள் தமிழக மக்கள் இப்படித்தான், யாரும் என்ன பேசினாலும் அப்படியா? என கேட்பார்கள், ஆனால் யார் எப்படி பட்டவர்கள் என்று மனதிற்குள் வைத்துகொள்வார்கள், 1991க்கு பின் புலி விரட்டபட்டது, வைகோ அனாதை ஆனது எல்லாம் இப்படித்தான் தமிழினி 30 வருடம் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் நிலை தளபதி, இயக்கத்தின் அடி ஆழம் வரை அறிந்தவர், அப்புத்தகம் புலிகளின் மாய தோற்றத்தை, வெறும் மண் குதிரை பிம்பத்தை உருக்கமாக சொல்கிறது, புற்றுநோயால் பாதிக்கபட்டு மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவரின் வார்த்தைகள் உண்மையானவை இந்த இடத்தில் நான் அவளை நினைக்கின்றேன், அவள் ராஜனி திராணகம யாழ்பாணத்து பெண், அன்று அவளுக்கு 34 வயதுதான் ஆகியிருந்தது, டாக்டர், அதுவும் லண்டனில் படித்து வந்த திறமையான டாக்டர், ஆனால் யாழ்பாண டாக்டர் என்ன செய்திருக்கவேண்டும்? புலிகளுக்கு மட்டும் மருந்து கொடுத்து கட்டுபோட்டு பாதுகாத்திருக்கவேண்டும், அது தமிழ் உணர்வு, அது போராட்டம், அவள் தமிழச்சி ஆனால் இவள் செய்ததென்ன? அதிதீவிரவாதத்தை விமர்சித்தாள், கடும் மூர்க்கமான போராட்டம் அடுத்த சந்ததியினை பாதிக்கும் என குரல்கொடுத்தாள். மனித உரிமைகளை மதிக்கா போராளிகள் உலகில் இருந்து அப்புறபடுத்தபடுவார்கள் என பகிரங்கமாக சொன்னாள், இந்த கொடூர மூர்க்கம் யாருக்கும் எந்த பலனும் தராது என அன்றே சொன்னாள். உச்சகட்டமாக முறிந்த பனை என புத்தகமும் எழுதினாள், அது உலகளவில் கடும் சலசலப்பினை ஏற்படுத்தியது, விடுமா புலி யாழ்பாண பல்கலைகழகத்தில் இருந்த புலி உளவாளி ஸ்கெட்ச் போட்டது, வீட்டுக்கு வரும் வழியில் தலையில் மும்முறை சுடபட்டு நடுவீதியில் இறந்துகிடந்தாள் அந்த்த சிந்தனையாளர், வீதியெல்லாம் சிதறிகிடந்தது மருத்துவம், சமூக சிந்தனையும் நிரம்பிய மூளை அவளது இரு குழந்தைகள் அவள் உடலை பிடித்து கதறிகொண்டிருந்த கொடுமை எல்லாம் மறக்க முடியாது என்பார்கள். பின் அப்புத்தகம் புலிகளால் தடை செய்யபட்டது, அமைதிபடை காலம் என்பதால், தமிழகத்தில் அப்புத்தகம் காணமலே போனது மாறாக பேரரிவாளனும் அவன் சகாக்களும் அமைதிபடையினை விமர்சித்து புலிகளை தேவதூதர்களாக்கிய "சாத்தானின் படைகள்" எனும் புத்தகம் பெரும் பிம்பமாயிற்று இன்று எல்லாம் கடந்துவிட்ட மயான நிலை முறிந்த பனை புத்தகம் மறுபடியும் கிடைக்கின்றது, அதில் புலிகளை 27 ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டித்த ராஜினியின் குரல் கேட்கின்றது. இன்று புலிகளோடு 30 ஆண்டுகாலம் தோட்டா கொட்டிய தமிழியின் குரலில் இப்புத்தகம் வந்து தமிழக புத்தக கண்காட்சி விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றது இதே ஈழ புலிக்காலம் அல்லது புலிஆதரவு உச்ச தமிழகம் என்றால் என்ன ஆகும்? புத்தகம் தடை செய்யபடும், பதிப்பகம் துரோகி என அறிவிக்கபடும், வாங்கியவர்கள் துரோகி என புத்தகம் பறிக்கபடும், வாசகர் மேல் தோட்டா பதிக்கபடும், புத்தகம் மொத்தமாய் போட்டு எரிக்கபடும் , முன்பு புலி ஆட்சியில் தமிழக பத்திரிகைகள் தணிக்கை செய்யபட்டு, அதாவது புலி விமர்சன இந்திய செய்தி பக்கம் கிழிகபட்டே ஈழ மக்களிடம் கொடுக்கபடும். பின் அதற்கான காரணம் போராட்டம் எனும் வார்த்தையில் மறைக்கபடும். சில தமிழக ஊடகங்கள் புலிகளை ஆதரித்த மர்மமும் இப்படித்தான், எல்லாம் வியாபாராம். ஆனால் சில உண்மை எழுதும் பத்திரிகைகள் முன்பு இருந்தது, பத்மநாபா கொலை நடந்த காலங்களில் தமிழகத்தில் தராசு என்றோரு பத்திரிகை உண்டு, பின்னாளில் தமிழகத்தில் நடக்க இருக்கும் பயங்கர ரத்த வெறி தாக்குதல்களை அது முன்கூட்டியே எழுதியது, ஆனால் அப்பத்திரிகை காணாமல் போனது, ராஜிவும் கொல்லபட்டார். தமிழகத்தில் இப்படி ஊடக கொடுமைகளும் உண்டு. எல்லா வேடங்களும் கலைந்துகொண்டிருக்கின்றன. முன்னாள் புலி தமிழியின் அந்த புத்தகத்தில் என்னை பாதித்த வரி உண்டு "தலமை மக்களின் மனங்களை விட விலகி நின்றது, எதுவும் புரியும் நிலையில் அது இல்லை, உலகெல்லாம் பகைத்துவிட்டு ஒரு இனம் விடுதலை அடைவது சாத்தியமா? என்று கூட சிந்திக்கவில்லை" உலகம் எழும்பும் முன் பொய் உலகம் சுற்றிவிடும் என்பார்கள், அப்படித்தான் இங்கு உண்மை மெதுவாக வந்துகொண்டிருக்கின்றது ஹிட்லர் வீழ்த்தபடும் வரை அவன் கொடுமைகள் உலகிற்கு தெரியாது, கோயேபெல்ஸ் என்பவன் மிக திறமையான வாதங்களால், வார்த்தைகளால் அதனை மறைத்து கொண்டிருந்தான். ரஷ்யபடைகள் ஹிட்லரை வீழ்த்திய பின்பே அவன் கொடூரம் கண்டு உலகம் அலறிற்று. இப்படி தமிழக கோயபல்ஸ் கும்பல் யார் என்று உங்களுக்கே தெரியும் என்பதால் அவர்களை யார் என சொல்ல அவசியமில்லை. இப்படி ஈழத்தில் பிறந்து புலிகளோடு வாழ்ந்து, புலிகளோடு போராடிய இவர்களுக்கு தெரியாதெல்லாம், சீமானுக்கும் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும், திருட்டு காந்தி திருமுருகனுக்கும் மட்டும் தெரியுமாம்

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
16-ஜூன்-201820:39:00 IST Report Abuse

ramanathanசுபாஷ் சந்திரபோஷ் ஆங்கிலேயர்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடவில்லை. நேரு.. .காந்தியின் சதிச்செயலால் மான்டுபோனார்

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X