மதபோதகர் மீது போக்சோவில் வழக்கு பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதபோதகர் மீது 'போக்சோ'வில் வழக்கு பதிவு

Added : ஜூன் 16, 2018

திருச்சி: திருச்சியில், ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், மதபோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, உறையூரில், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராகவும், பள்ளியில் பெண்கள் விடுதி வார்டனாகவும் இருப்பவர், மதபோதகர், குணாஜோதிமணி, 50. இவர், விடுதியில் தங்கி, படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், மேலிடத்து அழுத்தம் காரணமாக, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், புகாரை கிடப்பில் போட்டனர்.இந்நிலையில், மாணவி தரப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளதை தெரிந்து கொண்ட அனைத்து மகளிர் போலீசார், கடந்த 4ம் தேதி, குணா ஜோதிமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, அதை ரகசியம் காத்தனர். இதையறிந்த, மதபோதகர், குணா ஜோதிமணி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து தன்னை கைது செய்ய தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்நிலையில், புகாரை வாபஸ் பெற நெருக்கடி கொடுக்கப்படுவதாக, சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X