டிரைவரை மகள் தாக்கிய வழக்கு போலீஸ் உயர் அதிகாரி பதவி நீக்கம் | Dinamalar

டிரைவரை மகள் தாக்கிய வழக்கு போலீஸ் உயர் அதிகாரி பதவி நீக்கம்

Added : ஜூன் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement

திருவனந்தபுரம்,: கேரள மாநிலத்தில், போலீஸ் டிரைவரை, மகள் அடித்த வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, ஏ.டி.ஜி.பி., பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது சாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது.திருவனந்தபுரம் ஆயுதப்படை பட்டாலியனில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, சுதேஷ் குமார், ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தார். இவரது அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றுபவர், கவாஸ்கர்.சமீபத்தில், ஏ.டி.ஜி.பி.,யின் மனைவி மற்றும் மகள் ஸ்னீக்தா ஆகியோர், போலீஸ் காரில், மியூசியம் பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு சென்றனர்.பயிற்சி முடிந்து, வீடு திரும்பும் போது, காரை, டிரைவர், கவாஸ்கர் தாமதமாக எடுத்து வந்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஸ்னீக்தா, டிரைவரை கடுமையாக திட்டினார். ஒரு கட்டத்தில் கவாஸ்கர், தன்னால் கார் ஓட்ட முடியாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்னீக்தா, டிரைவரை அடித்தார்.மருத்துவமனையில் சேர்ந்த கவாஸ்கர், மியூசியம் போலீசில், ஸ்னீக்தா மீது புகார் செய்தார்.உயர் அதிகாரிகள், அவரை சமரசம் செய்தும் கேட்காததால், ஸ்னீக்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்னீக்தா புகாரின் அடிப்படையில், டிரைவர் கவாஸ்கர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், கவாஸ்கரின் மனைவி, மாநில முதல்வர், பினராயி விஜயனை நேரில் சந்தித்து, புகார் அளித்ததையடுத்து, 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் உறுதி அளித்தார்.இதையடுத்து, பதவி மற்றும் அரசு வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, ஏ.டி.ஜி.பி., பதவியில் இருந்து, சுதேஷ் குமாரை நீக்கி, டி.ஜி.பி., லோக்நாத் பெஹேரா, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
17-ஜூன்-201813:34:03 IST Report Abuse
Biil Brace ஒரு மலையளிக்கு வேறு ஒரு மாநிலத்து அதிகாரியை பதவி நீக்கம் செய்யும் மாநிலத்தை பார்த்து நாம் கற்று கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X