PM vows 'important' measures to take growth to double digits | இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி: பிரதமர் சபதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி: பிரதமர் சபதம்

Updated : ஜூன் 17, 2018 | Added : ஜூன் 17, 2018 | கருத்துகள் (21)
Advertisement
பிரதமர் மோடி, நிடி ஆயோக், வளர்ச்சி, NITIAayog

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக்கின் 4வது நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு கருவியாக நிடி ஆயோக் கவுன்சில் இருக்கும். வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும். ஒத்துழைப்பு மற்றும் துடிப்பு மிகுந்த கூட்டாட்சி நிர்வாகத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளை நிடி ஆயோக், கவுன்சில், 'டீம் இந்தியா' என்ற வகையில் அணுகியது. இதற்கு ஜிஎஸ்டி சமூகமாக அமல்படுத்தப்பட்டது உதாரணமாக உள்ளது. ஒத்துழைப்பு, கூட்டாட்சி முறை ஆகியவை வளர்ச்சிக்கு முக்கியம்.
கொள்கைகள் வடிவமைப்பதில் மாநில முதல்வர்கள் முக்கிய பங்காற்றினர். பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்ட வேண்டும். கடந்த 2017 - 18 நிதியாண்டின் 4ம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக ஆரோக்கியமான நிலையில் இருந்தது.
வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கமாக உயர்த்துவதே நமது அரசின் முன் உள்ள சவால். 2020ம் ஆண்டிற்குள் புதிய இந்தியா என்ற இலக்கினை நாம் அடைய முக்கிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravisankar K - chennai,இந்தியா
17-ஜூன்-201819:52:24 IST Report Abuse
ravisankar K பெங்களூரு , ஆந்திரா , தெலுங்கானா வில் இப்போதும் வளர்ச்சி இருந்துகொண்டுதான் உள்ளது . தமிழ் நாட்டில் மட்டும் வளர்ச்சி இல்லை . தமிழ் நாட்டுக்கு வர வேண்டிய அத்தனை தொழில்களும் பெங்களூரு , ஹைதெராபாத் , ஆந்திரா சென்றுவிட்டன .
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
17-ஜூன்-201818:47:34 IST Report Abuse
makkal neethi .அந்த ஈரிலக்கம் என்பது வடை அண்ட் பக்கோடாவா மாஸ்டர்
Rate this:
Share this comment
Cancel
Manimaran - Chennai ,இந்தியா
17-ஜூன்-201818:43:43 IST Report Abuse
Manimaran இதில் எந்த வித பயனும் தமிழ் நாட்டிற்கு கிடைக்காது// சாம் , உங்க ஆண்டவரு தமிழ் நாட்டிற்கு இப்படி ஒரு நிலைமை கொண்டு வந்து இருக்கிறார் . 10 % போதவில்லை . நீங்கள் உங்கள் வருமானத்தில் 20 % உங்கள் ஆண்டவருக்கு கொடுத்தால் நன்மை செய்வார் போல .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X