பதிவு செய்த நாள் :
சர்ச்சை!
'நிடி ஆயோக்' கூட்டத்தில் டில்லி கவர்னர்?
கெஜ்ரிவால் டுவிட்டரில் எதிர்ப்பு பதிவிட்டார்

புதுடில்லி: மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், டில்லி துணை நிலை கவர்னர், அனில் பைஜால் பங்கேற்றதாக வெளியான தகவலால், டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளார். 'அரசியல் சாசனத்தின்எந்த பிரிவின்படி, நிடி ஆயோக் கூட்டத்தில், கவர்னர் பங்கேற்றார்; அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரத்தை, கவர்னருக்கு நான் அளிக்க வில்லை' என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நிடி ஆயோக்,கூட்டத்தில், பங்கேற்றாரா, டில்லி கவர்னர்? சர்ச்சை!


டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம் மாநிலத்தில், அரசின் திட்ட பலன்களை, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அளிக்க அனுமதி அளித்தல் உட்பட பல்வேறு கோரிக் கைகள் குறித்து பேச, கவர்னர் மாளிகைக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில அமைச்சர்கள், சமீபத்தில் சென்றனர்.

அதிர்ச்சி


அவர்களை சந்திக்க, கவர்னர் அனில் பைஜால் மறுப்பு தெரிவித்ததால், கவர்னர் மாளிகை அலுவலகத்தில், கெஜ்ரிவாலும், பிற அமைச்சர் களும், ஒரு வாரமாக தங்கியுள்ளனர். இந் நிலையில், டில்லியில் ஜனாதிபதி மாளிகை யில், நிடி ஆயோக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.


இக்கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்

மற்றும் மத்திய அமைச்சர்கள், ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதற்கிடையே, நிடி ஆயோக் கூட்டத்தில், டில்லி சார்பில், கவர்னர் அனில் பைஜால் பங்கேற்றதாக தகவல் வெளியானது. இது, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர் களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவால், 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், 'நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க செல்லும்படி, கவர்னருக்கு நான் அதிகாரம் வழங்கவில்லை.'அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு அடிப்படையில், நிடி ஆயோக் கூட்டத்தில், கவர்னர் பங்கேற்றார் எனத் தெரியவில்லை' என, கூறியுள்ளார்.

ஆனால், நிடி ஆயோக் கூட்டத்தில், கவர்னர் அனில் பைஜால் பங்கேற்றதாக கூறப்படும் தகவலை, நிடி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி, அமிதாப் காந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது குறித்து, அமிதாப் காந்த் கூறுகையில், ''கவர்னர் தொடர்பாக வந்த தகவல், முற்றிலும் தவறானது. ''டில்லி அரசு சார்பில், நிடி ஆயோக் கூட்டத்தில், அம்மாநில கவர்னர் அனில் பைஜால் பங்கேற்க வில்லை,'' என்றார்.

சமரசம்


டில்லி முதல்வர், துணை நிலை கவர்னர் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு தீர்வு காண, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நான்கு மாநிலங்களின் முதல்வர்கள், 'டில்லி முதல்வர் மற்றும் கவர்னர் இடையே, அரசியல் சாசன ரீதியிலான பிரச்னை ஏற்பட்டுள்ளது.'இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்' என, வலியுறுத்திஉள்ளனர்.

வரும், 2019ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க, எதிர் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, நான்கு

Advertisement

மாநில முதல்வர்கள் அணி திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.டில்லியில், கவர்னர் மாளிகை அலுவலகத்தில்தங்கி போராட்டம் நடத்தி வரும், ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, பிரதமர் இல்லம் நோக்கி, பேரணி நடத்த, ஆம் ஆத்மி கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.இப்பேரணிக்கு, போலீஸ் அனுமதி அளிக்கப்படவில்லை.

இது குறித்து, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் அலுவலகம் அல்லது இல்லம் நோக்கி பேரணி நடத்த, ஆம் ஆத்மி கட்சியினர், போலீசில் முறையாக அனுமதி பெறவில்லை; அதற்கான விண்ணப்பத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. அவர்கள் பேரணி நடத்தவுள்ள பகுதிகளில் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, பிரதமர் இல்லம் நோக்கி நடத்தப்படும் பேரணியில், பங்கு பெறுவதை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளதாக, ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ் சாட்டி உள்ளனர்.


சந்திரபாபுவுக்கு ஆதரவு


நிடி ஆயோக் கூட்டத்தில் பேசிய, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்தினார். அவரது கோரிக்கைக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Srinivasan - trichy,இந்தியா
18-ஜூன்-201819:43:08 IST Report Abuse

B Srinivasan மற்றொருவர் வீட்டிலோ அலுவலகத்திலோ நீங்கள் போராடுவீர்களா? என்ற கோர்ட்டின் கண்டனம் எதைக்குறிக்கிறது. வெளியேறிவிட்டால் நல்லது இல்லையென்றால் கோர்ட்டின் நடவடிக்கை மிக மோசமாக இருக்கும். போராட்டத்தில் மொத்த டெல்லியும் வரவில்லை. வெறும் ஐந்தாயிரம் பேர் டெல்லி இல்லை.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
18-ஜூன்-201810:28:42 IST Report Abuse

நக்கீரன்ஒரு முதல்வரை மக்களால் தேர்ந்தெடுக்க வைத்து பிறகு அவரை செயல்பட விடாமல் மடக்கி வைப்பது அநியாயம். டெல்லிக்கு தேர்தல் வைக்காமல் பேசாமல் நேரடி மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிடலாமே.

Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18-ஜூன்-201814:20:59 IST Report Abuse

கல்யாணராமன் சு.நக்கீரன், அவரை யாரும் வேலை செய்யவேண்டாம்னு சொல்லலை வேலை செய்யும் அதிகாரிகளை ஆள் வெச்சு அடிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க அதிலே உங்களுக்கு ஏதேனும் தவறாக தெரிகிறதா? ...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூன்-201814:22:08 IST Report Abuse

ஆரூர் ரங்என்னது டெல்லி ஒரு முழு மாநிலமா? எப்போதிலிருந்து? சொல்லவேல்ல ...

Rate this:
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
18-ஜூன்-201810:20:25 IST Report Abuse

சுப்பையா, கருப்பட்டி வியாபாரம்.கெஜ்ரி தான் சோபால படுத்து தூங்கிகிட்டு இருக்காரே.....

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X