இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட தீவிர நடவடிக்கை: பிரதமர் மோடி Dinamalar
பதிவு செய்த நாள் :
இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட
தீவிர நடவடிக்கை: பிரதமர் மோடி

புதுடில்லி:''நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, இரட்டை இலக்க விகிதத்தில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 இரட்டை, இலக்க, வளர்ச்சி, எட்ட, தீவிர, நடவடிக்கை,மோடி


மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்' நிர்வாக கவுன்சிலின் நான்காம் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

7.7 சதவீதம்கூட்டத்துக்கு தலைமை வகித்து, பிரதமர்

நரேந்திர மோடி பேசியதாவது:வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும்; அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு உள்ளன.கடந்த நிதியாண்டின் இறுதியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சிறப்பான வகையில், 7.7 சதவீதத்தை எட்டியுள்ளது.

அடுத்ததாக, பொருளாதார வளர்ச்சியை, இரட்டை இலக்கங்களில் உயர்த்துவது, மத்திய அரசின் முன் உள்ள முக்கியமான சவாலாக உள்ளது. இந்த சவாலை சாதிக்கும் வகையில்அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப் பாக்குதல், மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள், ஆயுஷ் மான் பாரத், இந்திரதனுஷ் திட்டம் ஆகியவை, 2020க்குள், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான கனவுத் திட்டத்தை நிறைவேற்றஅவசியமானவை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வரலாற்று சிறப்பு வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப் பாக, நிடி ஆயோக் நிர்வாக கவுன்சில் உள்ளது. திட்டங்கள் உருவாக்கலில், மாநில முதல்வர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.துாய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, திறன் மேம்பாடு ஆகிய திட்டங்களுக்கு அமைக்கப்பட்ட துணை குழுக்களின்

Advertisement

பரிந்துரைகள், மத்திய அரசின்பல்வேறு துறை களால் ஏற்கப்பட்டுள்ளன.

இந்த துணை குழுக்கள் மூலம், மாநில முதல்வர் கள், சிறப்பான ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.மத்திய அரசின், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 1.5 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், 10 கோடிகுடும்பங்களுக்கு,ரூ. ஐந்து லட்சம்மதிப்பில், சுகாதார பாதுகாப்புறுதி வழங்கப்படுகிறது.

முத்ரா திட்டம்சமக்ரா ஷிக் ஷா அபியான் திட்டம் மூலம், கல்வித்துறைக்கு விரிவான அணுகுமுறை கையாளப்பட உள்ளது.முத்ரா திட்டம், ஜன்தன் திட்டம், 'ஸ்டேண்ட் அப் இந்தியா' திட்டம் ஆகியவை, அனைத்து பிரிவினருக்கும் உதவும் வகையில், நிதி சார்ந்த பங்களிப்பை அளிக்கின்றன.


லோக்சபாவுடன் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால், பெரியளவில் நிதி மிச்சமாகும். இதை கருத்தில் வைத்து, விவாதம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
18-ஜூன்-201818:28:19 IST Report Abuse

Narayanவளர்ச்சி விகிதம் பற்றி மட்டும் பேசுபவர்கள் பிஸ்கல் டிபிசிட் எனும் நாட்டின் மொத்த கடன் பற்றி பேச மாட்டார்கள். ஜீ டீ பியில் 6 க்கும் மேலே இருந்த பிஸ்கல் டிபிசிட் எனும் நிதி பற்றாக்குறை, மோடி அரசு மேலும் கடனே வாங்காததாலும் வாங்கிய சில கடன் திருப்புவதாலும் இப்போது 3.5 ஆக குறைந்து உள்ளது. இதை கருத்தில் கொண்டால் நாட்டின் வளர்ச்சி விகிதம் இப்போதே இரண்டிலக்கம்தான் சார்... இதெல்லாம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் புரிந்தால் மட்டுமே உங்களுக்கு வோட்டு.

Rate this:
Anandan - chennai,இந்தியா
20-ஜூன்-201809:05:33 IST Report Abuse

Anandanமோடி அரசு கடன் வாங்கவே இல்லாது என்பது நீங்கள் இட்டு காட்டும் பொய்....

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
18-ஜூன்-201815:59:59 IST Report Abuse

ganapati sbநாடு முழுதும் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் அமைப்பது பெரும் திட்டம் பிரதமர் மோடி தேச சராசரி விவசாய வளர்ச்சி 6 % இருந்த பொது குஜராத்தில் பல்லாயிரம் தடுப்பணை கொண்ட பாசன திட்டங்கள் தடையற்ற மின்சாரம் மற்றும் நுணுக்கமான விவசாயம் சார்ந்த கொள்கைகளால் மூலம் 11 % வளர்ச்சியை உருவாக்கியவர் அதுபோலவே தொழில் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை உருவாக்கியவர் குஜராத் மாடலை மற்ற மாநிலங்கள் காபி செய்தாலே இரட்டை இலக்க வளர்ச்சி நிச்சயம் மற்ற மாநில முதல்வர்கள் ஊழல் சுயநலத்தை விட்டு ஐந்தாண்டு மோடியோடு இணைந்து செயல்படவேண்டும் அப்போது இந்திய 2022 இல் அணைத்து துறையிலும் வளர்ந்த வல்லரசாகும்

Rate this:
Anandan - chennai,இந்தியா
20-ஜூன்-201809:07:02 IST Report Abuse

Anandanஅப்பு கணபதி, மத்தவங்களுக்கு புத்தி சொல்றது அப்புறம் இருக்கட்டும். இந்த நாலு வருடத்தில் நீங்க பண்ணினதையும், இன்னும் உங்க மட்டமான கொள்கையால் சீரழிந்த தொழில் வளர என்ன செய்வதுனு சொல்லுங்க?...

Rate this:
bal - chennai,இந்தியா
18-ஜூன்-201813:26:56 IST Report Abuse

balஎன்ன ஒரே ஒரு நிம்மதி... காங்கிரஸ் 50 வருடம் ஏமாற்றியது...பிஜேபி 5 வருடம் ஏமாற்றியது....அனுபவிப்பது மக்கள்தான்...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X