இவர் இப்படி: மஹாராஷ்டிராவின் பிடிவாத தலைவர்

Added : ஜூன் 18, 2018 | கருத்துகள் (2)
Advertisement
இவர் இப்படி: மஹாராஷ்டிராவின் பிடிவாத தலைவர்

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அதிரடி அரசியல் தலைவரும், சிவசேனா கட்சியின் நிறுவனருமான, மறைந்த பால் தாக்கரேவின் மகன், உத்தவ் தாக்கரே, 57. 'தந்தையைப் போல, பரபரப்பான அரசியல் செய்யத் தெரியவில்லை' என, இவர் மீது விமர்சனங்கள் இருந்தா-லும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, மாநில ஆட்சியில் அங்கம் வகிக்கிறார்.

பா.ஜ., உடனான உறவில் விரிசல் விழுந்திருக்கும் நிலையில், இனிவரும் தேர்தல்களில், தனித்து களம் காணப் போவதாக அறிவித்துள்ளார். உத்தவின் இந்த முடிவு, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிடக்கூடும் என, பல மூத்த தலைவர்கள் எச்சரித்தும், தன் முடிவில், உறுதியாக உள்ளார். பால் தாக்கரே உயிருடன் இருந்தவரை, தங்கள் கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வை நிர்வகித்து வந்தார். தேர்தல் நேரங்களில், தந்தையுடன் சேர்ந்து, பிரசாரங்களில் ஈடுபட்டார்.

மும்பை மாநகராட்சி தேர்தலில், 2002ல், சிவசேனா வெற்றி பெற்றது. 'இந்த வெற்றிக்கு, உத்தவ் தாக்கரேவின் உழைப்பு தான் காரணம்' என, கட்சியினரால் பாராட்டப்பட்டார். அதன் பின், 2003ல், சிவசேனா கட்சியின் தலைவர் பதவி, இவரை தேடி வந்தது.உத்தவ் தாக்கரேக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். 2012ல், இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும், இதய அடைப்பு நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின், இன்னும் உற்சாகமாக அரசியலில் ஈடுபட துவங்கினார்.

புகைப்படக் கலையில் தீவிர ஆர்வம் உடையவரான, உத்தவ், மஹாராஷ்டிரா முழுவதும் பயணித்து, பழங்கால அரண்மனைகளை புகைப்படம் எடுத்துள்ளார்; இதை, அவர் கண்காட்சியாகவும் வைத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.'மஹாராஷ்டிர மாநில அரசியலில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகள், செல்வாக்குடன் இருப்பதால், உத்தவ் தாக்கரேயின் பிடிவாதம் தளர்ந்தால் மட்டுமே, சிவசேனா, தன் செல்வாக்கை தக்க வைக்க முடியும்' என, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். உத்தவின் பிடிவாதம் தளருமா என்பதை பார்க்க, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் வரை காத்தி-ருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balaji -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-201806:57:12 IST Report Abuse
balaji Ivar ilama Maharashtra la bjp win pana mudiadu nu kavalai pola ungaluku
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
18-ஜூன்-201804:52:17 IST Report Abuse
Renga Naayagi கடைசியில் இந்துத்துவா ஒன்று சேர்க்கும் ...நாகபூரில் RSS எதுக்கு இருக்கு ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X