ஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்

Added : ஜூன் 18, 2018 | கருத்துகள் (12)
Advertisement
மேட்டூர் அணை,  கர்நாடகா, கபினி அணை, கேஆர்பி அணை, காவிரி,  கர்நாடகா கனமழை, காவிரி ஆறு ,   கர்நாடக அணைகள் நீர்மட்டம், தொடர் கனமழை ,
Mettur Dam, Karnataka, Kabini Dam, KRP Dam, Cauvery, Karnataka Heavy Rain, Cauvery River, Karnataka Dams Water Level, Continuous Heavy Rain,

சேலம் : கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கேஆர்பி அணைகளில் இருந்து அதிக அளவு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியதை அடுத்து, அணைக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளதால், அணையின் நீர்வரத்து 19,000 கனஅடியில் இருந்து 32,421 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி வரை அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.05 அடியாகவும், நீர்இருப்பு 14.83 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 500 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதே சமயம் கர்நாடகாவில் மழை குறைந்ததால் தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு 30,000 கனஅடியில் இருந்து 23,000 கனஅடியாக குறைந்துள்ளது.இருப்பினும் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை 2வது நாளாக தொடர்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
18-ஜூன்-201814:56:08 IST Report Abuse
ganapati sb வரப்புயர என்பது போல அணைநீர் உயர விரைவில் மேட்டூர் அணை நீர் மட்டம் பாசனத்திற்கு திறந்து விடும் அளவிற்கு உயரட்டும்
Rate this:
Share this comment
Cancel
Maaruthi - Chennai,இந்தியா
18-ஜூன்-201813:49:47 IST Report Abuse
Maaruthi Subramanian summa irunga summa kedakkura stalina sorinju vidareenga ungala edhithu porattamnu yella katchiyum kootittu kelambidaporar
Rate this:
Share this comment
Cancel
raja -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-201813:30:14 IST Report Abuse
raja mr subramani, people will kick off all tha peedai in 2019,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X