மம்தாவுக்கு காங்., தூது| Dinamalar

மம்தாவுக்கு காங்., தூது

Added : ஜூன் 18, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 காங்கிரஸ்  ,மம்தா பானர்ஜி, அகமது பட்டேல், கெஜ்ரிவால், பாஜக, காங்கிரஸ் மெகா கூட்டணி, திரிணாமுல் காங்கிரஸ், மம்தா கூட்டணி, மேற்கு வங்க முதல்வர் மம்தா,

புதுடில்லி : தேசிய அளவில் பா.ஜ.,க்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, மெகா கூட்டணியை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி.

நேற்று நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி வந்த அவர், துணை நிலை கவர்னருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வரும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார். மேலும் நிடி ஆயோக் கூட்டத்தின் ஒரு பகுதியாக கெஜ்ரிவால் - துணைநிலை கவர்னர் பிரச்னைக்கு முடிவு கட்டும்படி மம்தா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் டில்லியில் முதல்வருக்கும், துணைநிலை கவர்னருக்கும் இடையே நிலவும் பிரச்னை குறித்து பேசுவதற்காக காங்., கட்சியைச் சேர்ந்த அகமது பட்டேல், மம்தாவை சந்தித்துள்ளார். ஆனால் உண்மையில், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணியில் இணைவதற்கு காங்., சார்பில் பேசுவதற்காக தான் அகமது பட்டேல் வந்ததாக திரிணாமுல் காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்., முன்னாள் தலைவர் சோனியா கூறியே அகமது பட்டேல், மம்தாவை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணிக்கு மம்தாவே தலைமை வகிப்பதால், அவரிடம் பேசுவதற்காக அகமது பட்டேல் வந்ததாகவும், டில்லி மாநில அரசியல் விவகாரத்தை காரணமாக வைத்து கூட்டணி பேச்சை காங்., துவக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூன்-201819:21:21 IST Report Abuse
Pasupathi Subbian தீதீ ஒரு காட்டாற்று வெள்ளம் அதை பாட்டிலில் அடைக்கமுடியாது. காங்கிரஸ் இவரை அடக்கி தங்களுக்கு படிக்கட்டாக ஆக்க நினைப்பது ஒரு பகல் கனவு, எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பிய்த்துக்கொண்டு போகும் தன்மை இவருக்கு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூன்-201816:44:09 IST Report Abuse
இந்தியன் kumar காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தது தான் திரிணாமுல் ,தேசியவாத , YSR , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள், தன் கட்சியினரை அரவணைக்க முதலில் இந்திரா காங்கிரஸ்கற்று கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஜூன்-201816:09:07 IST Report Abuse
Endrum Indian அம்மாடி இந்த போட்டோவிலே ஏன்னா மேக்கப்பு???அன்னக்கிளியை ஷிசு மங்கள் ஹாஸ்பிடல் (கொல்கத்தா) வீதியில் காரில் போகும் போது ஒரு மினி வானில் சென்று கொண்டிருந்தார் நின்று கொண்டு (அதே நீ ஒழிக , அவன் ஒழிக கோஷத்தோடு) அப்போ மேக்கப்பு இவ்வளவு பிரமாதமாக இல்லையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X