புதுடில்லி : உண்ணாவிரத போராட்டத்தை கைவிட டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உத்திரடக்கோரி பா.ஜ., எம்எல்ஏ விஜேந்தர் குப்தா, டில்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான டில்லி அரசு வழக்கறிஞர், அமைச்சர்களின் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்பதை ஐஏஎஸ் அதிகாரிகளே நேற்று ஒப்புக் கொண்டனர் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தர்ணா பற்றியது மட்டுமே. இது போன்ற தர்ணாவுக்கு உத்தரவிட்டது யார், முடிவு செய்தது யார்? என கேள்வி எழுப்பினர்.
இது தனிநபர் முடிவு என வழக்கறிஞர் பதிலளித்தார். இந்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இது போராட்டம் இல்லை. மற்றொருவரின் வீட்டிற்குள் அல்லது அலுவலகத்திற்குள் சென்று உங்களால் போராட்டம் நடத்த முடியாது என கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.