பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டம், நடிகர் மன்சூர் அலிகான், பியுஷ் மனுஷ்,  வருவாய்த்துறை , சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை, சென்னை - சேலம் ,எட்டு வழிச்சாலை, 
Chennai-Salem Eight way Roads Project, Actor Mansoor Ali Khan, Piyush Manush, Revenue department, Chennai - Salem, Eight ways Roads, Chennai - Salem,

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, முறைப்படி அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள் நேற்று பணியை துவக்கினர். இதனால் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்ட போர்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நில அளவீட்டு பணியின் போது முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த பலரை போலீசார் சுற்றிவளைத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை - சேலம் இடையே 277 கி.மீ.,க்கு எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த கடந்த மாதம், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதன்பின் எட்டு தனி தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு கிராமங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் விவசாயிகளை அழைத்து பேச்சு நடத்தினர்.
ஆனால் வடமாநிலத்தைச் சேர்ந்த இயற்கை

ஆர்வலர் என தன்னை கூறிக் கொள்ளும் பியுஷ் மனுஷ், 43, உள்ளிட்ட போர்வையாளர்கள் மேற்கொண்ட மூளைச்சலவையின் காரணமாக விவசாயிகள் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த சிலரையும், நடிகர் மன்சூர் அலிகானையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட துாண்டும் வடமாநில வாலிபர் பியுஷ் மனுஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக தனி தாசில்தார்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டனர். தொடர்ந்து சேலம் - அரூர்

சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் நில அளவீடு பணியை துவக்கினர். முதலில் வனத்துறை, வருவாய்த் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் அதிகாரிகள் கற்கள் பதித்தனர். தொடர்ந்து அடிமலைப்புதுார், கத்திரிபட்டி, அரமனுார், ஆச்சாங்குட்டப்பட்டி பகுதிகளில் நேற்று 8 கி.மீ.,க்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன.
வருவாய் துறையினர் நிலத்தை அளந்து 70 மீட்டர் அகலத்துக்கு கற்களை பதித்தனர். அடிமலைபுதுார் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தும் அவர்கள் கலைய மறுத்தனர்.

இதனால் ஏழு பேரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் மாலையில் விடுவித்தனர்.
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்ட பணிகளை முடக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதால் போர்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

5 பேர் மீது வழக்கு


சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இதை விரிவாக்கும் பணிகள் துவங்க உள்ளன. இத்திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து அப்பகுதி மக்களிடம் நேற்று வி.ஏ.ஓ., அறிவழகன் தொழில், பொருளாதாரம், கல்வி போன்ற விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர் விமான நிலைய விரிவாக்கம் குறித்து யாரையும் சந்திக்கக் கூடாது என மிரட்டினர். அறிவழகன் புகார்படி ஓமலுார் வன்னியர் சங்கத் தலைவர் முருகன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (164)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
23-ஜூன்-201813:38:20 IST Report Abuse

Vaduvooraan வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால் வறுமையை காட்டி மக்களை அதே நிலையில் வைத்திருந்து அரசியல் செய்ய முடியாது. மாவோயிஸ்டுகளை பாருங்கள் அரசு பள்ளிக்கூடமோ பாலமோ கட்டினால் அவற்றை முதலில் குண்டு வைத்து தகர்த்து விட்டு சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையை கடினமாக்குவார்கள். பிறகு அவர்களே அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, தேர்தல் பாதை திருடர் பாதை என்று அரசு நிர்வாகத்துக்கான அடிப்படை கட்டமைப்பை சிதைப்பார்கள் ஜனநாயகம் பயனற்றது என்கிற கருத்தை உருவாக்குவார்கள் அவ்வப்போது எந்த ஜனநாயகத்தை ஒழிக்க முற்படுகிறார்களோ அதே ஜனநாயக அமைப்பு தரும் தனி நபர் சுதந்திரம் அடிப்படை உரிமைகள் இவை பற்றியெல்லாம் பிரமாதமாக பேசுவார்கள். தமிழகத்தில் தற்போது தேசிய சிந்தனையுள்ள வலுவான தலைமை இல்லாததால் தான் இந்த சீமான், கோமான், அமீர், கவுதம் திரு(டன்)முருகன் காந்தி இவர்களெல்லாம் தலை தூக்கி இருக்கிறார்கள். இவர்களை போய் நம்ம ஊடகங்கள் போராளி, ரஸ்தாளி பெருச்சாளி என்று அடைமொழி தந்து தலைமேல் வைத்துக் கொண்டு கூத்தாடிக்கொண்டிருக்கின்றன ஆண்டவன் தான் காப்பாத்தணும் இந்த மாநிலத்தை

Rate this:
Sakthi Ponnampalam - trichy,இந்தியா
23-ஜூன்-201813:30:54 IST Report Abuse

Sakthi Ponnampalamநான்குவழி சாலையில் ஏற்கனவே எதிர்காலத்தில் எட்டுவழி சாலை அமைக்க இடம் கையகப்படுத்தபட்டு சாலையின் இரண்டுபுறமும் இடம் ஒதுக்கப்பட்டுத் தான் இருக்கிறது. இதை எட்டுவழி சாலையாக தாராளமாக மாற்றலாம். இதில் பாதி அளவு பணம் மிச்சம் ஆகும் மேலும் மீதம் உள்ள பணத்தில் சென்னையில் இருந்து மதுரை வரை உள்ள நான்கு வழி சாலையை எட்டுவழியாக மாற்றலாம். இது தவிர சென்னையில் இருந்து கோவை வரை செல்லவே இந்த சாலை பயன்படும். ஆனால் சென்னயில் இருந்து திருச்சி வரை உள்ள சாலையை சீரமைத்தால் தஞ்சாவூர், திருச்சி ,பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், ஓட்டாஞ்சத்திரம்,பழனி, தேனீ, கம்பம், போடி, பெரியகுளம், வத்தலகுண்டு என இத்துணை பகுதிகளுக்கும் செல்லும் ஊர்மக்கள் பயன் அடைவார்கள். மேலும் திருச்சில் இருந்து மதுரை வரை செல்லும் நான்கு வழியை எட்டு வழியாக மாற்றினால் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி வழியாக செல்லும் மக்களும் பயன் அடைவார்கள் இதில் ஏற்கனேவே நிலம் கையகப்படுத்தப்பட்டு காலியிடமாக இருப்பதால் மக்களுக்கு எந்தவிதத்தில் பாதிப்பு வராது. இது தவிர சேலம் மற்றும் கோயமுத்தூர் என இரண்டு முக்கிய நகரங்களை மட்டுமே இந்த சாலை இணைப்பதால். ஏற்கனவே உள்ள நான்கு வழிச்சாலை மற்றும் எட்டுவாழிச்சாலையாக மாற்ற கையகப்படுத்தப்பட்ட நிலங்களும் எந்த வித உபயோகமும் இல்லாமல் போகும். இந்த பசுமைவழி சாலையில் மக்களுக்கு எந்தவித பயனும் இருக்காது. பயனில்லாத இந்த சாலையை அமைப்பதற்கு இந்த பணத்தில் தூர்வாறாத எத்துணையோ எரிகுளங்களை தூர்வாரினால் நிலத்தடி நீர் உயரும் மக்கள் தண்ணீர் பஞ்சம் தீரும். நல்ல உட்கட்டமையிப்பு வசதியுடன் கூடிய சர்வதேச தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களை காட்டினால். நன்றாக படிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும்.

Rate this:
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
25-ஜூன்-201809:04:55 IST Report Abuse

Adhvikaa Adhvikaaபுதிய எட்டு வழிச்சாலை சுமார் எண்பது கிலோமீட்டருக்கு மேல் தூரம் குறைவு எனவே பயணநேரமும் , பெட்ரோல் அல்லது இதர எரிபொருள் செலவும் எவ்வளவோ மிச்சமாகும்.இந்த சாலையை பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்களுக்கு மிச்சமாகும் நேரத்தில் வேறு உருப்படியான வேலைகளை பார்க்கலாம். பயண நேரம் குறைவு, எரிபொருள் மிச்சம். வரவேற்கவேண்டிய திட்டம். சில கிராமங்களை காலி செய்து தான் மேட்டூர் அணையே கட்டப்பட்டது. சில இழப்புக்கள் இல்லாமல் பெரிய வசதிகளை எங்குமே பெற முடியாது....

Rate this:
Nandha - Chennai,இந்தியா
25-ஜூன்-201813:45:38 IST Report Abuse

Nandhaஅந்த காசை டோல் வாங்கி ஈடு கட்டிருவாங்க... டோல் வாங்கிறதா வெளிப்படையாக இருக்க முடியுமா...? அதற்கப்புறம் சேமிப்பை பத்தி பேசுவோவ்ம்...

Rate this:
23-ஜூன்-201809:52:08 IST Report Abuse

சௌக்கிதார் வேலங்குடியான்8 வழி சாலை போட்டதுக்கு அப்பறம் அதை எதிர்த்தவன் எவனும் அந்த சாலையை பயன்படுத்தக்கூடாதுனு சொல்லணும் குறிப்பா சுடலை கட்சி காரனுங்க மற்றும் டுமீல் போராளீஸ்......

Rate this:
மேலும் 159 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X