Mehbooba calls it quits as BJP pulls the plug | ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா டாட்டா! Dinamalar
பதிவு செய்த நாள் :
J&K BJP, காஷ்மீர், பா.ஜ., பாரதிய ஜனதா, மெகபூபா முப்தி

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதல்வர் மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., நேற்று வாபஸ் பெற்றது. இதனால் வேறு வழியின்றி முதல்வர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து எட்டாவது முறையாக அந்த மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலாகிறது.
ஜம்மு - காஷ்மீரில் 2014 டிசம்பரில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 87 தொகுதிகளில் மெஹபூபா முப்தி தலைமையிலான பி.டி.பி., 28 இடங்களிலும், பா.ஜ., 25 தொகுதிகளிலும் வென்றன; காங்., 12, தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், பிற கட்சிகள் ஏழு இடங்களிலும் வென்றன.

முற்றுப்புள்ளி


யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி நிலவியது. இரண்டு மாதங்களுக்கு பின் பா.ஜ., - பி.டி.பி., கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தன.காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் உருவான இந்த கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், பல்வேறு விஷயங்களில் முரண்பட்டன.
பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து நடந்து வந்ததால், மாநிலத்தின் பாதுகாப்புநிலை கடுமையாக சீர்கெட்டது.தினசரி நிகழ்வுகளாக அரங்கேறிய வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் மெஹபூபா முப்தி திணறினார்.


பிளவு அதிகரித்தது


பயங்கரவாத தலைவர்கள், பாதுகாப்பு படையின் தாக்குதலில் கொல்லப்படும் போதெல்லாம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் விஷயத்தில், முதல்வர் மெஹபூபா மென்மையான போக்கை கடை பிடிப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வந்தது. இதனால் பா.ஜ., - பி.டி.பி., இடையே பிளவு அதிகரித்தது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ., அமைச்சர்கள் டில்லிக்கு வரும்படி கட்சி மேலிடம் சார்பில், நேற்று அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின் ''வன்முறை,

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் மெஹபூபாவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்,'' என பா.ஜ., பொதுச் செயலாளர் ராம் மாதவ் நேற்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
பெரும்பான்மையை இழந்த முதல்வர் மெஹபூபாவுக்கு உதவிக்கரம் நீட்ட, பிற கட்சிகள் தயாராக இல்லை. இதையடுத்து சில மணி நேரத்துக்கு பின், வேறு வழியின்றி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக மெஹபூபா அறிவித்தார்.
இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில் ''ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலவும் வகையில், பேச்சு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்; வேறு கட்சி களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை,'' என்றார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, ''முதல்வர் பதவியில் இருந்து, மெஹபூபா முப்தி ஏற்கனவே ராஜினாமா செய்திருக்க வேண்டும்,'' என்றார்.
மெஹபூபா ராஜினாமா செய்துள்ள நிலையில், தேசிய மாநாட்டு கட்சியும் காங்.,கும், கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க மறுத்து விட்டன. ஜம்மு - காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடப்பதை பா.ஜ., விரும்புவதாக தெரிகிறது. இதனால் அந்த மாநிலத்தில் நீண்ட காலம் கவர்னர் ஆட்சி நீடிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் ஜம்மு - காஷ்மீரில் 1977க்கு பின், எட்டாவது முறையாக கவர்னர் ஆட்சி அமைய உள்ளது.

தாக்குதலுக்கு தயாராகும் படைகள்


ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவமும், பாதுகாப்பு படைகளும் தயாராகி வருவதாக தகவல்கள்கூறுகின்றன. அதற்கு கவர்னர் ஆட்சி நீடிப்பதே சரியாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
மேலும் ஜம்மு - காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாகி விட்டதால் கடந்த ஒரு ஆண்டாக அனந்த்நாக் லோக்சபா தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. முழு அமைதி திரும்பாத நிலையில் சட்டசபை தேர்தல் நடத்துவது சாத்தியப்படாது என கூறப்படுகிறது. கவர்னர் ஆட்சி அமைந்தபின் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
20-ஜூன்-201820:31:39 IST Report Abuse

சுப்பையா, கருப்பட்டி வியாபாரம்.காஷ்மீரில் ஆட்சியை கலைத்தவுடன் கூடுதல் ராணுவப்படை, மத்திய போலீஸ் படை மற்றும் சிறப்பு கமாண்டோ படைகள் களமிறக்கப்பட்டது.. தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை பந்தாட முடிவு - செய்தி.... தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி... புரிந்தவன் புத்திசாலி

Rate this:
Navasudeen - covai,இந்தியா
20-ஜூன்-201815:57:43 IST Report Abuse

NavasudeenAppaavi பிண்ணிட்ட சூப்பர்,

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஜூன்-201813:35:19 IST Report Abuse

இந்தியன் kumarஇனிமேலும் பொறுமை அவசியமில்லை கடுமையன நடவடிக்கை மூலம் ஜம்மு காஸ்மீரில் தீவிரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும் இல்லை என்றால் பாகிஸ்தானுக்கு விரட்டி அடிக்க பட வேண்டும். ஆளுநர் திறமையாக செயல்பட வாழ்த்துக்கள்.

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X