கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு
எதிராக என்ன நடவடிக்கை: நீதிபதி கேள்வி

சென்னை: 'சமூக வலைதளங்கள், ஊடகங்களில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவதுாறாக விமர்சித்தவர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தலைமை நீதிபதி,விமர்சனம், நடவடிக்கை,நீதிபதி,கேள்வி

சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த, டாக்டர் விஜய பீஷ்மர் தாக்கல் செய்த வாடகை பிரச்னை தொடர்பான வழக்குநீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'முன்பு நேற்று விசாரிக்கப்பட்டது.


அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரலைப் பார்த்து, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: நீதிபதிகள், நீதித்துறையை விமர்சிப்பவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதியை விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக விமர்சித்து பதிவிட்டால், அவர்களுக்குஎதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது; கைது செய்கின்றனர். தலைமை நீதிபதிக்கு எதிராக அவதுாறாக பதிவிட்டவர்கள், 'மீடியா'க்களில் பேட்டி அளித்தவர்கள் மீது, நீங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

Advertisement

தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளுக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க முடியாது. எனவே, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, அடுத்த விசாரணையின் போதுதெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.பின், விசாரணையை, வரும், ௨௫க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shankar - chennai,இந்தியா
20-ஜூன்-201816:31:13 IST Report Abuse

shankarவழக்குக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை வழக்கறிஞர் கேட்கக்கூடாது ஆனால் நீதிபதி ஒரு வழக்கு நடக்கும்போது சம்பந்தமே இல்லாத மற்றொரு வழக்கை பற்றி கேள்வி எழுப்பலாமா. சட்டத்தை பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தரவும். ஒரு வேளை நீதிபதியை விமர்சித்திருந்தால் அதை பற்றி ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கலாம். அதுவும் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு. இதுதான் எனக்கு தெரிந்த சட்டம்.

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
20-ஜூன்-201812:53:53 IST Report Abuse

Raj Puமுன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் ஓய்வு பெரும் நாளுக்கு முதல் நாள் ஒரு நபரை ஜாமீனில் விட 150 கோடி பேசி அதில் முதல் கட்டமாக 100 கோடி கொடுத்ததாக ஒரு செய்தி வந்தது, நீதிமன்றங்களும் கருப்பு பண ஒழிப்பு ஊழல் ஒழிப்பு யோக்கியவான்களும் கண்டுகொள்ளவேயில்லை

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-ஜூன்-201812:12:13 IST Report Abuse

Needhiyin Pakkam Nil ஒரு மாணவன் வீட்டு பாடம் எழுதவில்லை என்றால் அவனை ஆசிரியர் விமர்சிப்பதோடு இல்லாமல் அடிக்கவும் செய்கிறார் ஏன், அப்போது தான் அந்த மாணவன் தான் தவறு செய்தால் தண்டனை உண்டு எம்பதை உணர்ந்து அடுத்த முறை சரியாக வீட்டு பாடம் எழுதி கொண்டு வருவான், ஆனால் அதிகம் படித்த மேதாவிகளாகிய நீதிபதிகள் என்ன தீர்ப்பு சொன்னாலும் அது சரியோ தவறோ ஆளுக்கொரு தீர்ப்பு சொன்னாலும் அதை எதிர்த்து யாரும் கேள்விகேட்க முடியாது அப்புறம் எப்படி நீங்கள் உங்களை திருத்தி கொள்ள முடியும், ஓராண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தொகுதிகள் சம்பத்தப்பட்ட வழக்கில் சட்டம் படித்த உங்களால் ஒரு தெளிவான தீர்ப்பை சொல்ல முடியவில்லை என்றால், வேறு நாங்கள் எங்கு செல்வது, அதை நாங்கள் ஏன் விமர்சிக்க கூடாது, இன்னமும் எத்தனை காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும், காலத்தின் மதிப்பு ஏன் உங்களுக்கு தெரிவதில்லை, தவறான தீர்ப்பு சொல்லும் மேலும் ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக காலம் தாழ்த்தும் நீதிபதிகளுக்கு தண்டனை கொடுக்கும் நடைமுறையை வரைமுறையுடன் கட்டாயப்படுத்த வேண்டும், நீங்கள் என்ன பெரிய கடவுளா, உங்களுக்கு சம்பளம் கொடுத்க்கும் முதலாளிகள் நாங்கள் நீங்கள் சரியான நேரத்தில் நேர்மையுடன் செயல்படவில்லை என்றால் நாங்கள் கட்டாயம் விமர்சிப்போம், எங்களுக்கு வாக்களிக்க தெரியாது தான் அதற்காக எதையும் ஏற்று கொள்ளும் மணம் கொண்ட அடிப்படை அறிவில்லாத மக்கள் நாங்கள் என்று நீங்கள் எங்கள் மீது உங்களின் சர்வாதிகாரத்தை திணிக்க முயற்சிக்க வேண்டாம்..........

Rate this:
Raajan - Mumbai,இந்தியா
20-ஜூன்-201813:00:40 IST Report Abuse

Raajanதங்களுடைய ஆணித்தரமான பதில். தவறாக தீர்ப்பு அளித்த குமாரசாமிக்கு ஏன் தண்டனை வழங்கவில்லை, குறைந்தது சரியாக தீர்ப்பு கொடுத்த ஜான் குன்ஹாவை பாராட்டியிருக்கலாம் அதேநேரம் தவறாக தீர்ப்பு கொடுத்த குமாரசாமி அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கலாம். ...

Rate this:
Sudarsanr - Muscat,ஓமன்
20-ஜூன்-201813:44:21 IST Report Abuse

Sudarsanrமாக்களே அவர்கள் சொல்வது தனி நபர் விமர்சனத்தைத்தான். தீர்ப்பை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு. அனால் தனி மனிதனை விமர்சிக்க - அதுவும் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. ...

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
20-ஜூன்-201814:49:43 IST Report Abuse

BoochiMarunthuஅப்போ ராகுல் சோனியா வை நாகரீகமா விமர்சனம் செய்கிறார்களா ? ...

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
20-ஜூன்-201817:56:19 IST Report Abuse

RameshThe same is applicable to Sonia and Rahul or Any other politicians....Have they also followed the DECORAM? Sonia has told then CM and Present PM Modi as MAUT KA SAUDAGAR for Gujarat Riots where 1000 people were killed (400 hindus and 500 Muslims) which started when group of Muslims have killed 70 Hindu Sanyasi in the train.She has told as if there were no riots before 2001...With the same YARDSTICK 5000+ SIKHS were killed by her Husband's order in 1984...Not sure what she will tell him? Double standards + Bias ...

Rate this:
Sudarsanr - Muscat,ஓமன்
20-ஜூன்-201819:00:53 IST Report Abuse

Sudarsanrபூச்சி அப்போ நீ உன் குரூப் எல்லாம் மோடியை நாகரிகமா விமர்சனம் செய்யறீங்களா ...

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X