நடப்பதை நன்கறிய இது சரியான முடிவு!

Added : ஜூன் 20, 2018
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் ரமலான் மாதத்தைக் கருதி, மோதல் இன்றி அமைதி காக்க, பாகிஸ்தான் அரசுடன், மத்திய அரசு பேசி முடிவு எடுத்த போதும், அந்த அரசு தொடர் மீறல்களையும், தாக்குதல்களையும் கைவிடவில்லை. புனித ரமலான் நாளில், ஜம்மு - காஷ்மீர் நலன் விரும்பிய பத்திரிகையாசிரியர் சுஜாதா புகாரியும், அவரது பாதுகாவலர்கள் இருவரையும் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், தங்கள் வழக்கப்படி ஜனநாயகத்தை நசுக்க முயன்று இருக்கின்றனர். அதே சமயத்தில், நமது எல்லைப் படை வீரர் அவுரங்கசீப்பை மடக்கி இழுத்து சென்று, தங்கள் எல்லைக்குள் சுட்டுக்கொன்ற, பாக்., செயல் அராஜக மானது. ஹிஸ்புல் பயங்கரவாதி ஒருவரை, நமது ராணுவம் நடத்திய தேடுதலில், அவனை அழிக்க காரணமாக இருந்த சிறந்த தேசியவாதி. சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற திருமணி என்ற இளைஞர், கல்வீச்சுக் கும்பல் தாக்குதலுக்கு இலக்கானார் என்பதை மறக்க முடியாது.காஷ்மீரில், பா.ஜ., மற்றும் பி.டி.பி., என்ற கொள்கை முரண் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சட்டசபையில்,மொத்தமுள்ள, 84 சீட்டு களில் மக்கள் ஜனநாயக கட்சி - பி.டி.பி.,க்கு, 28 இடங்களும், பா.ஜ.,விற்கு, 25 இடங்களும் உள்ளன. அதற்காக தேச நலனை புறக்கணிக்க முடியுமா என்ற அடிப்படையில், மத பயங்கரவாதி களை கட்டுப்படுத்தி, அரசால் ஒடுக்க முடியாததால், பா.ஜ., இக்கூட்டணியில் இருந்து விலகி விட்டது.சில மாதங்களில், 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தாக்குதல், எல்லைப் பகுதியில் அத்துமீறித் தாக்குதல், இவை காஷ்மீரில் அதிகரித்திருக்கின்றன.அதே சமயம், காஷ்மீர் இளைஞர் பலர், ராணுவத்தில் சேர்வது, விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் முன்னிலை, பள்ளிகளில் படிக்க மாணவ - மாணவியர் அக்கறை அதிகரிப்பு ஆகியவை, அங்கே ஏற்பட்டிருக்கும் புதிய சூழ்நிலைகள்.அங்கு பயங்கரவாதிகளுக்கு பணம் தந்து உதவிடும் ஹுரியத் அமைப்பில் கூட, சில முரண்கள் வந்திருக்கின்றன. அந்த அமைப்பில் உள்ள தலைவர்கள் மகன், மகள் ஆகியோர், முன்னணி கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் படிப்பதும், மற்ற சிலரோ காசு வாங்கி கல் எறிய துாண்டப்படுவதையும் புகாராக பேசும் ெவளிப்படைத் தன்மை வந்திருக்கிறது.அம்மாநில கவர்னர் வோரா பதவிக்காலம் முடிவடைவதால், அவர் மாற்றப்படுவாரா என்ற பேச்சும் உள்ளது. தவிரவும், ஜனாதிபதி ஆட்சியை திறம்பட நடத்துபவர் அவர், என்ற பின்னணியும் உள்ளது.இந்த நேரத்தில், பாக்., அத்துமீறலைத் தடுக்க பதிலடி தரும் இந்தியா, பேச்சுவார்த்தையை, எவருடன் நடத்துவது... அங்குள்ள அரசும் அதிக பலவீனம் ஆகியிருக்கிறது. இதற்கிடையில், 'இன அடிப்படைத் தாக்குதல், ஜம்மு - காஷ்மீரில் நடக்கிறது என்ற, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் அறிவிப்பு பாரபட்சமானது' என, இந்திய அரசு சாடியிருக்கிறது.ஆனால், அமெரிக்காவும், சீனாவும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வளர்க்கும் நாடு, பாகிஸ்தான் என்பதை, பல்வேறு சமயங்களில் ெவளிப்படுத்தி வருகின்றன.ஜம்மு - காஷ்மீரில் அமைதிக்கான ஆட்சி அல்லது நடவடிக்கைகள் நடைபெறுவதை ஏற்காத சில சக்திகள், புரளிகளை கிளப்பும் சமயத்தில் கூட்டணி ஆட்சி முடிவுற்றது நல்லதே.தொடர்ந்து ஸ்திரமற்ற ஆட்சி, ஊழல் மிகுந்த ஆட்சி, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ராணுவத் தலைமை ஆகியவற்றை கொண்ட நாடான பாகிஸ்தான், எப்போது அமைதியான சூழ்நிலையில் வாழும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப்படையும் கையைக் கட்டி அமைதி காக்க வேண்டும் என, நமது ராணுவ அமைச்சகமும், உள்துறையும் விரும்பவில்லை. அதே சமயம், இச்சமயத்தில் வழக்கமாக ரமலான் நாளில், வாகா எல்லையில் பரஸ்பரம் ஸ்வீட் தந்து இரு தரப்பும் மகிழ்ச்சி தெரிவிக்கும் சம்பவம் நடக்கவில்லை.இன்று, ஜம்மு - காஷ்மீரில், பாகிஸ்தானிடம் பணம் பெறும் குழு, கல்வீச்சு கும்பல் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அதை அங்குள்ள மாநில போலீசாரும் எல்லைப்படையினரும் தடுப்பது சரியானதே.அமர்நாத் யாத்திரைக் காலமும் வந்துவிட்டதால், இனி அம்மாநில முதல்வர் மெகபூபா, அமைதி காக்க என்ன செய்வார் என்ற சூழ்நிலையில், பி.டி.பி., தலைமையிலான கூட்டணியில் இருந்து பா.ஜ., விலகியதும், முதல்வர் மெஹபூபாவும் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 'தொலைநோக்கு பார்வையுடன் அமைந்த கூட்டணி' என்ற கருத்தை அவர் இப்போது தெரிவித்தது, அவர் காங்கிரஸ் அல்லது அந்த மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர் உமர் போல இல்லை என்று கருதலாம்.

அதே சமயம், ஜம்மு - காஷ்மீரில் நடப்பது அனைத்தும், இனி அதிக ெவளிப்படையாக மாறி தகவல்களாக வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X