'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்'

Added : ஜூன் 20, 2018 | கருத்துகள் (38)
Share
Advertisement
கவுரி லங்கேஷ்,கொலை,13000 ரூபாய்,வாங்கினேன்

பெங்களூரு: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ததற்காக, 13 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக, இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும், பரசுராம் வாக்மோர் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருரைச் சேர்ந்த, பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பரில், அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஸ்ரீராம் சேனாவை சேர்ந்த, பரசுராம் வாக்மோர் உட்பட, ஆறு பேரை போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். இதில், முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் பரசுராம், போலீசாரிடம் கூறியதாவது:

ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும், கவுரி லங்கேஷ் தொடர்ந்து எழுதி வந்தார். இதனால், அவர் மீது, மிகவும் கோபமாக இருந்தேன். ஹிந்து விரோதி என்பதால் தான், கவுரி லங்கேஷை கொலை செய்தேன். சிந்தகி பகுதியில் ஒருவரை சந்திதேன், அவர், கவுரி லங்கேஷை கொலை செய்தால், அதற்கு முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து எனக்கு முன் பணமாக, 3,000 ரூபாய் கொடுத்து, பெங்களூரில் தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார். கவுரி லங்கேஷை கொலை செய்தபின், அறிமுகமில்லாத ஒருவர், என்னை சந்தித்து, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இவ்வாறு பரசுராம் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201814:09:11 IST Report Abuse
Susainathan but he was not mentioned which article against for the Hindus
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஜூன்-201813:25:07 IST Report Abuse
Natarajan Ramanathan காஷ்மீரில் கல்லெறிபவர்களுக்கு ஆதரவாக யார் எழுதினாலும் அவர்கள் கொல்லப்படவேண்டியவர்களே.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
20-ஜூன்-201813:18:12 IST Report Abuse
தமிழர்நீதி ஒரு பிரபல எழுத்தாளரை கொலை செய்திட 13000 கூலி கொடுத்துள்ளது காவி கூட்டம் . இந்த தொகைக்கு கொலை செய்திடும் வறுமையா அல்லது அதிக கொலை செய்வதால் கூலி குறைவா . கடவுள்தான் தேசத்தை காவிகளிடமிருந்து காத்திட வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X