சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நக்சல் ஆதரவு மாணவி மீது தே.பா., சட்டம் பாயுமா? : மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடரும் போராட்டம்

Added : ஜூன் 21, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 நக்சல் ஆதரவு மாணவி மீது தே.பா., சட்டம் பாயுமா? : மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடரும் போராட்டம்

நக்சல், மாவோயிஸ்ட் அமைப்புகளின் ஆதரவுமாணவி வளர்மதி, தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பொதுமக்களை போராட்டத்துக்கு துாண்டி வருவதால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், வீராணத்தைச் சேர்ந்த, மாதையன் என்பவரது மகள் வளர்மதி, 23. மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பழனிவேலுவின் உறவினர். இந்திய மக்கள் முன்னணியை சேர்ந்த சாலமன் உள்ளிட்டோருடன் சேர்ந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர், தற்போது, சேலம், பெரியார் பல்கலையில், முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, 2017 ஜூலை, 12ல், சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு கலை கல்லுாரியில், மாணவ - மாணவியரிடம், 'நோட்டீஸ்' வினியோகித்த போது, கைது செய்யப்பட்டார்.மேலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், மாணவர்கள் மத்தியில் போராட்டத்தை துாண்டியதாக, இவர் மீது, 2015ல் கடலுார் மாவட்டம், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடந்த, 2017 ஜூலை, 3ல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாணவர்களை துாண்டியதாக, சிதம்பரம், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதே புகாரில், குளித்தலை போலீசார், 2017 ஜனவரியில், வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்தனர். சேலம், பள்ளப்பட்டி, டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இவர் மீது கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், மாணவர்களை துாண்டியதாகவும், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நக்சல், மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ள வளர்மதி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால், 2017 ஜூலை, 17ல், கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கருணாகரன், குண்டர் தடுப்பு சட்டத்தில் இவரை கைது செய்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக, விவசாயிகளை போராட்டத்துக்கு துாண்டி வந்தார். நேற்று முன்தினம், சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டியில், விவசாயிகளை போராட்டத்துக்கு துாண்டியதை அடுத்து, வீராணம் போலீசார் கைது செய்து, சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.இவர் மீது, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராக, பொதுமக்களை போராட்டத்துக்கு துாண்டியதாக, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'எனவே, இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saki - vandavasi ,இந்தியா
21-ஜூன்-201817:19:06 IST Report Abuse
saki இவா் என்ன தியாகியா? சும்மா விளம்பரத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துவது பொதுமக்களுக்கு இடையுறு செய்வது இதற்கு சொம்படிக்கும் கருப்பு சட்டை காக்கைகள் வேண்டுமானால் ஆதரவு தொிவிக்கலாம் ( ஊடகங்கள் உட்பட ) நான் இவரை கேட்கிறேன் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு பற்றி போராட தயாரா? லுாசு மாதிாி எதையாவது செய்ய வேண்டியது பிறகு தற்கொலை செய்து கொண்டாா் என்றால் கருப்பு சட்டை காக்கைகள் ஊடக காக்கையுடன் சோ்ந்து ஊளையிடுவது ( அனிதா சம்பவம்) பிறகு என்ன கடையடைப்புதான் சாலை மறியல்தான் சில திருடா்கள் கழகம் இணைந்து போராடுவது இது தான் இவருடைய இலக்கு திருடா்கள் கழகம் கொடுத்த பணம் வேலை செய்கிறது
Rate this:
Share this comment
Cancel
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201815:44:09 IST Report Abuse
Nalanvirumbi தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை எழுப்பியது யார்?
Rate this:
Share this comment
Cancel
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
21-ஜூன்-201815:03:23 IST Report Abuse
Selvam Pillai இதுவரை போராட்ட காலத்தில் தீவிரவாதம் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இது போல் அப்பாவிகளை பிடித்து அரசும் காவல்துறையும் கைது செய்து போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று நினைத்தால், அதனால் கண்டிப்பாக தீவிரவாதம் ஏற்படும். அந்த சூழலை உருவாக்கி கொடுப்பது அரசும் காவல்துறையும் தான். அதன் பிறகு தமிழ் நாட்டின் நிலைமை? தற்போது உள்ள சூழலில் மத்திய மாநில அரசுகள் மாறும் வரை இதே நிலை தொடரும் இன்னும் மோசமாகக்கூடிய நிலையும் வரலாம். அரசு காவல்துறையை வைத்து அடக்கி விடலாம் என்று நினைப்பது எரியும் கொல்லியை தலையில் வைத்து சொரிவது போன்றது. இ பி எஸ் & ஓ பி எஸ்ஸுக்கு திறைமையில்லை என்றால் நல்ல ஒரு ஆலோசகரை வைத்துக்கொள்வது நல்லது. இவர்கள் திரும்ப வரமுடியாது என்று அவர்களுக்கே தெரியும் ஆகையால் நாம் இருக்கும்போதே வாய்ப்பை பயன்படுத்தி எல்லா அநியாயத்தையும் அரங்கேற்றி விடலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை. ஆட்சி மாறினால் கைக்கு காப்பு தயாராகவுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X