ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி?

Added : ஜூன் 21, 2018 | கருத்துகள் (56)
Advertisement
GST,VAT,   Petrol diesel prices,ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல்,  மதிப்பு கூட்டு வரி, வாட் வரி,  பெட்ரோல் டீசல் விலை, Petrol, diesel, Value Added Tax,Goods and Services Tax,

புதுடில்லி : மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யின் கீழ், பெட்ரோல், டீசலை கொண்டு வரும்போது, கூடுதலாக மாநிலங்களின் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.


பரிசீலனை:

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகில், எந்த நாடும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, ஜி.எஸ்.டி., மட்டும் விதிப்பதில்லை. ஜி.எஸ்.டி., உடன், 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்படுகிறது. தற்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதனால், இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.


வருவாய் இழப்பு:

ஜி.எஸ்.டி., அமலுக்கு முன், ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைக்கு எவ்வளவு வரி இருந்ததோ, அதற்கு நிகரான வரி விகிதம் தான், அவற்றை, ஜி.எஸ்.டி.,யில் சேர்க்கும் போதும் இருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல், டீசலுக்கான வரி, ஜி.எஸ்.டி.,யின் அதிகபட்சமான, 28 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசலுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 28 சதவீத வரி விதித்தால், அது, மத்திய- மாநில அரசுகளுக்கு, பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.

மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசிடம் நிதி கிடையாது. அதனால், பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வந்தாலும், மாநில அரசுகள், விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி விதிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கலாம்.


விலையில் மாற்றம் இருக்காது:

அதேசமயம், இந்த வரி விதிப்பு, தற்போதைய அளவை விட அதிகமாக இருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படலாம். எனவே, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வந்தாலும், அவற்றின் தற்போதைய விலையில் மாற்றம் ஏதும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
21-ஜூன்-201819:10:31 IST Report Abuse
Chockalingam விற்பனைக்கு MRP என்று இருப்பதை போல வரி விதிப்பிற்கும் MTR (Maximum Tax Rate) என்று இருந்தாலும் நண்டராக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Srini Vasan - nairobi,கென்யா
21-ஜூன்-201818:10:48 IST Report Abuse
Srini Vasan இந்த வருடம் மழை நன்றாக இருக்கிறது . கர்நாடக அணைகள் வெகு முன்னதாகவே நிரம்பிவிடும் . ஆகையால் நிச்சயம் தமிழகத்திற்கு அதிக தண்ணீர் கிடைப்பது உறுதி . அதை நன்கு பயன்படுத்த வேண்டும் . இப்போதே அணைகள் , ஏரிகள் , குளங்கள் செல்லும் கால்வாய்களை தூர்வாரி அதில் தண்ணீரை நிரப்ப ஆயத்தமாக வேண்டும் . இதனால் நிலத்தடி நீர் உயரும் . பல ஆண்டுகளுக்கு பயன் கிடைக்கும் . அரசு உடனே சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள அணைத்து ஏரி மற்றும் குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கணும். தண்ணீர் கடலில் கலக்க கூடாது. ஒவ்வொரு வருடமும் இப்படி நீர் கிடைப்பது அரிது. பயன்படுத்த உடனே முனைவோம். அரசே செய். மக்களே செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஜூன்-201817:55:30 IST Report Abuse
Srinivasan Kannaiya பி ஜெ பி க்கு அஸ்தமனம் ஆகும் பொழுது பெட்ரோல்டீசல் விலை குறைய ஆர்மபிக்கும்...
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
21-ஜூன்-201820:25:45 IST Report Abuse
vadiveluஅப்போ இன்னும் பத்து வருடங்களாகுமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X