chennai | நிஜக்கதைக்கு கிடைத்த பெருமை மிகு விருது| Dinamalar

நிஜக்கதைக்கு கிடைத்த பெருமை மிகு விருது

Updated : ஜூன் 21, 2018 | Added : ஜூன் 21, 2018 | கருத்துகள் (2)
Advertisement
நிஜக்கதைக்கு கிடைத்த பெருமை மிகு விருது
கடந்த ஏழு ஆண்டுகளாக தினமலர் இணையதளத்தில் வாரம் தவறாமல் இடம் பெறும் நிஜக்கதை பகுதியினை பாராட்டி விஸ்வ ஸம்வாத் கேந்திரம் அமைப்பின் சார்பி்ல் நாரதர் விருது வழங்கப்பட்டது.

தினமலர் இணையதளத்தி்ல் வேறு எங்கும் படிக்க முடியாத பல பகுதிகள் இடம் பெற்றுள்ளது அதில் ஒன்றுதான் நிஜக்கதை.

இந்த நிஜக்கதை பகுதியில் மனித நேயத்தை வலியுறுத்தும் மனிதர்களின் கதைகள் இடம் பெறும் மேலும் விளிம்பு நிலை மனிதர்களின் சவாலான வாழ்க்கை,உடல் ஊனமுற்றவர்களின் சாதனை,கல்வி மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களின் விவரம் போன்றவைகள் இடம் பெறும்.

கடந்த 2011 ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள மரம் வளர்க்கும் திம்மக்கா பற்றிய கட்டுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பகுதி இன்றளவும் தொய்வின்றி தொடர்கிறது.

நம்மிடையே ரத்தமும் சதையுமாக வாழும் மனிதர்கள் பற்றிய கதை என்பதால் இந்தப் பகுதிக்கு நிஜக்கதை என்று பெயர்.இதுவரை 362 நிஜக்கதைகள் பிரசுரமாகியுள்ளது.

இந்தப்பகுதியினை வௌிநாடு வாழ் தமிழர்கள் பலரும் படித்து உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வருகின்றனர்.வீட்டு வேலை செய்யும் பிருந்தாவின் மகன் கோகுலை நான்கு ஆண்டுகள் படிக்கவைத்து என்ஜீனியராக்கியதே நிஜக்கதை வாசகர்கள்தான் இது போல நுாற்றுக்கணக்கான மக்களின் பிரச்னனக்கு வாசகர்கள் தீர்வுதந்துள்ளனர்.

ஒரு ரூபாய் சாப்பாடு போடும் ஈரோடு வெங்கடேஷ்,ராஜபாளையம் வறட்சியை போக்க உதவும் ராசா,ஆதரவற்ற பிணங்களுக்கு ஆதரவுதரும் ஆலங்குடி கணேசன்,ஐந்து ரூபாய் டாக்டர்,குப்பை அள்ளும் பட்டதாரிகள் என்று நுாற்றுக்கு மேலான கட்டுரைகள் முதன் முதலில் நிஜக்கதையில்தான் பிரசுரமாகியது பின்னர்தான் மற்ற ஊடகங்களில் பிரசுரமாகியது.

நேர்மறை செய்திகளை மட்டுமே சொல்லி பலருக்கும் நல்லது நடக்க காரணமாக விளங்கும் நிஜக்கதை பகுதிக்கு வழங்கப்பட்ட விருதினை இந்தப்பகுதியின் பொறுப்பாளன் என்ற முறையில் நான் (எல்.முருகராஜ்)பெற்றுக்கொண்டேன்.விருது பெறக் காரணமாக இருந்த வாசகர்களுக்கே இந்த விருது சமர்ப்பணம்.

இதற்கான விழாவில் இந்திய கொள்கை அறக்கட்டளை இயக்குனர் ராகேஷ் சின்ஹா,பிபிசியின் முன்னாள் பத்திரிகையாளர் சம்பத்குமார் உள்ளீட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்,விஸ்வ ஸ்ம்வாத் கேந்திர பொறுப்பாளர் ரமாதேவி பிரசாத் விழா ஏற்பாடுகளை நன்கு செய்திருந்தார்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-அக்-201818:39:33 IST Report Abuse
மலரின் மகள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்க. உங்கள் சேவை தொடரட்டும். மலரில் எனக்கு சிறப்பாக தெரிவது ஆன்மீகமும் மனித நேயமும் தான். நீங்களும் உங்கள் குழுவும் மலருக்கு கிடைத்த நறுமணம். உங்கள் கட்டுரைகளை படிக்கிறேன். திரு முருகராஜ் எப்படி இருப்பர் அவர் என்று பார்க்க ஆசை வரும். இந்த போட்டோவில் பார்க்கமுடிகிறது. என்றாவது நேரம் கிடைத்தால் இந்தியரும் பொது உங்களுடன் உரையாடவும் ஆசை. வாழ்வாங்கு வாழும் மானிடர்கள் நம்மில் இருந்து நமக்கு தெரியாமல் இருக்கும் கலாம்களை அழகாக தெரியப்படுத்துகிறீர்கள். அது அவர்களுக்கு ஒரு அங்கீகாரம். எத்துணையோ ரத்தினங்கள் வெளியில் தெரியாமலே தங்களது சாதங்கைகளை சேவைகளை செய்து வருகின்றன. உங்கள் சேவை நிச்சயம் தேவை. குறிப்பாக இளைஞர்கள் உத்வேகம் கொள்கிறார்கள். மிகவும் எளிமையாக நேராமையானவராக தெரிகிறீர்கள். உங்கள் சட்டைப்பையில் பேனா. ஆசிரியர்கள்கூட இந்த டிஜிட்டல் உலகத்தில் மறந்து விட்ட எழுதுகோல். எழுத்தாளனின் அடையாளம். தொடர்ந்து நீங்களும் உங்கள் குழுவினரும் எழுதுவதற்கு அன்னை பராசக்தி நல்ல தேக ஆரோக்கியமும் வளமும் தருவாள். எனது பிரார்த்தனைகள். வழக்கமான மாலை நேரத்து பிரார்த்தனையில் சில மனிதர்கள் பால் அன்பு கொண்டு அவர்களுக்காகவும் குறிப்பாக பிரார்த்தனை செய்வது எனது வழக்கம். இன்று உங்கள் குழுவினருக்கு பிரித்தனைகள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்பும்.
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
26-ஜூன்-201816:47:02 IST Report Abuse
SENTHIL NATHAN நிஜக்கதை க்கு பரிசுகள். எங்களின் பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
21-ஜூன்-201811:48:45 IST Report Abuse
Siva நல்ல விஷயங்களை தொடர்ந்து எழுதி வரும் முருகராஜ் மற்றும் தினமலர்க்கு பாராட்டுக்கள். இந்த பகுதி பலருக்கு ஊக்கம் அளிக்கிறது. விருது கொடுத்து கௌரவித்த விஸ்வ சம்பவத் கேந்திரத்திற்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X